வ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3: வரிசை 3:


=="வ்" இன் வகைப்பாடு==
=="வ்" இன் வகைப்பாடு==
[[படிமம்:Tamil writing 27.gif|thumb|250px|'வ்' எழுதும் முறை]]
[[படிமம்:Writing Tamil 27.gif|thumb|250px|'வ்' எழுதும் முறை]]
தமிழ் எழுத்துக்களின் உள்ள [[உயிரெழுத்து]], [[மெய்யெழுத்து]] என்னும் இரண்டு வகைகளில் '''வ்''' மெய்யெழுத்து வகையைச் சேர்ந்தது. மெய்யெழுத்துக்கள் அரை [[மாத்திரை (இலக்கணம்)|மாத்திரை]] அளவே ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் அரை மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்<ref>''தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை'', 2006 பக். 11</ref>
தமிழ் எழுத்துக்களின் உள்ள [[உயிரெழுத்து]], [[மெய்யெழுத்து]] என்னும் இரண்டு வகைகளில் '''வ்''' மெய்யெழுத்து வகையைச் சேர்ந்தது. மெய்யெழுத்துக்கள் அரை [[மாத்திரை (இலக்கணம்)|மாத்திரை]] அளவே ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் அரை மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்<ref>''தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை'', 2006 பக். 11</ref>



05:26, 30 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்

வ்
வ்
தமிழ் எழுத்துக்கள்
க் ங் ச் ஞ் ட்
ண் த் ந் ப் ம்
ய் ர் ல் வ் ழ்
ள் ற் ன்

வ் தமிழ் மொழியின் எழுத்துக்களில் ஒன்று. இது தமிழ் நெடுங்கணக்கில் இருபத்தேழாவது எழுத்து. இது மொழியின் ஒரு ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "வகர மெய்" அல்லது "வகர ஒற்று" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "இவ்வன்னா" என வழங்குவர்.

"வ்" இன் வகைப்பாடு

'வ்' எழுதும் முறை

தமிழ் எழுத்துக்களின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் வ் மெய்யெழுத்து வகையைச் சேர்ந்தது. மெய்யெழுத்துக்கள் அரை மாத்திரை அளவே ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் அரை மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்[1]

தமிழ் எழுத்துக்களில் மெய்யெழுத்துக்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று இனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் வ் இடையின மெய் வகையைச் சேர்ந்தது. இவ்வெழுத்து, வல்லினம் பிறக்கும் மார்புக்கும், மெல்லினம் பிறக்கும் மூக்குக்கும் இடைப்பட்ட இடமான கழுத்தில் பிறப்பதால் இடையின வகையுள் சேர்க்கப்பட்டுள்ளது.

இனவெழுத்துக்கள்

எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் எழுத்துக்களை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய ஆறும் ஓரினத்தைச் சேர்ந்தவையாகக் கொள்ளப்படுகின்றன.[2].

குறிப்புக்கள்

  1. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, 2006 பக். 11
  2. இளவரசு, சோம., 2009. பக். 46

உசாத்துணைகள்

  • இளவரசு, சோம., நன்னூல் எழுத்திகாரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 2009 (நான்காம் பதிப்பு).
  • சுப்பிரமணியன், சி., பேச்சொலியியல், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.
  • தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை. 2006 (இரண்டாம் பதிப்பு)
  • பவணந்தி முனிவர், நன்னூல் விருத்தியுரை, கமல குகன் பதிப்பகம், சென்னை. 2004.
  • வேலுப்பிள்ளை, ஆ., தமிழ் வரலாற்றிலக்கணம், குமரன் புத்தக இல்லம், கொழும்பு. 2002.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வ்&oldid=858879" இலிருந்து மீள்விக்கப்பட்டது