வஜ்ர ஸூசிகா உபநிடதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 55: வரிசை 55:
பிராம்மணத் தன்மை என்பது இரண்டற்ற சச்சிதானந்த ஆன்மாவை உள்ளங்கை நெல்லிக் கனிபோல் அனுபவித்தறிவது. இவ்வான்மாவாகவே இருப்பது. அது ஜாதி, குணம், செயல் மூன்றும் அற்றது.
பிராம்மணத் தன்மை என்பது இரண்டற்ற சச்சிதானந்த ஆன்மாவை உள்ளங்கை நெல்லிக் கனிபோல் அனுபவித்தறிவது. இவ்வான்மாவாகவே இருப்பது. அது ஜாதி, குணம், செயல் மூன்றும் அற்றது.
பிறப்பு, இருப்பது, வளர்வது, மலர்வது, மெலிவடைவது, இறப்பது -- ஆகிய ஆறு மாறுதல்களும் இல்லாதது.
பிறப்பு, இருப்பது, வளர்வது, மலர்வது, மெலிவடைவது, இறப்பது -- ஆகிய ஆறு மாறுதல்களும் இல்லாதது.
மற்றும் ஆறு 'ஊர்மிகளும்' -- அ-து, மூப்பு, மரணம், வியாதி, உலக மயக்கம், பசி, தாகம் ஆகிய ஆறு 'அலைகள்' -- அற்றது. குற்றங்குறைகளற்றது. சத்யம், ஞானம், அனந்தம், ஆனந்தம் என்ற வடிவுடையது. எல்லாக்கற்பனைகளுக்கும் ஆதாரமாயினும் ஒரு கற்பனையிலும் அட்ங்காதது. எல்லா உயிர்களுக்கும் உள்ளே நின்று இயக்குவது. ஆகாயத்தைப்போல உள்ளும் வெளியும் வியாபித்துப் பிளவுபடாமல் ஆனந்தவடிவாயிருப்பது. மனதிற்கெட்டாதது. அனுபவத்தால் மட்டும் அறியக்கூடியது. எவனொருவன் இப்பேர்ப்பட்ட ஆன்ம வடிவினனாகவே இருந்துகொண்டு, அதனாலேயே விருப்பு வெறுப்பு அற்றவனாகவும், சமம் தமம் முதலிய தன்னடக்கங்களுடன், அழுக்காறு, அவா, வெகுளி முதலியவை நீங்கியவனாகவும், டம்பம், அகந்தை முதலியவற்றால் தொடப்படாதவனாகவும், வீடுபெறத் தகுந்தவனாகவும் இருப்பவன் எவனோ அவனே பிராம்மணன் என்பது சுருதி, ஸ்ம்ருதி, இதிஹாஸ புராணங்களின் முடிவான கருத்து. இதற்குப் புறம்பாக பிராம்மணத் தன்மை இல்லவே இல்லை.
மற்றும் ஆறு 'ஊர்மிகளும்' -- அ-து, மூப்பு, மரணம், வியாதி, உலக மயக்கம், பசி, தாகம் ஆகிய ஆறு 'அலைகள்' -- அற்றது. குற்றங்குறைகளற்றது. சத்யம், ஞானம், அனந்தம், ஆனந்தம் என்ற வடிவுடையது. எல்லாக்கற்பனைகளுக்கும் ஆதாரமாயினும் ஒரு கற்பனையிலும் அட்ங்காதது. எல்லா உயிர்களுக்கும் உள்ளே நின்று இயக்குவது. ஆகாயத்தைப்போல உள்ளும் வெளியும் வியாபித்துப் பிளவுபடாமல் ஆனந்தவடிவாயிருப்பது. மனதிற்கெட்டாதது. அனுபவத்தால் மட்டும் அறியக்கூடியது. எவனொருவன் இப்பேர்ப்பட்ட ஆன்ம வடிவினனாகவே இருந்துகொண்டு, அதனாலேயே விருப்பு வெறுப்பு அற்றவனாகவும், சமம் தமம் முதலிய தன்னடக்கங்களுடன், அழுக்காறு, அவா, வெகுளி முதலியவை நீங்கியவனாகவும், டம்பம், அகந்தை முதலியவற்றால் தீண்டப்படாதவனாகவும், வீடுபெறத் தகுந்தவனாகவும் இருப்பவன் எவனோ அவனே பிராம்மணன் என்பது சுருதி, ஸ்ம்ருதி, இதிஹாஸ புராணங்களின் முடிவான கருத்து. இதற்குப் புறம்பாக பிராம்மணத் தன்மை இல்லவே இல்லை.


==துணைநூல்கள்==
==துணைநூல்கள்==

07:38, 19 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்

வஜ்ர ஸூசிகா உபநிடதம் என்பது சாம வேதத்தைச் சார்ந்த உபநிடதம் ஆகும். முக்திகோபநிஷத்தில் ராமபிரான் ஆஞ்சனேயருக்கு உபதேசித்ததாகக் கூறப்படும் 108 உபநிஷத்துக்களில் இது 38வது உபநிஷத்து. சாமானிய வேதாந்த உபநிடதங்கள் என்ற பகுப்பில் சேர்ந்தது. இதனுடைய தனிச்சிறப்பு 'பிராம்மணன்' என்ற சொல்லுக்கு முழு இலக்கணம் வரையறுப்பதுதான். மரபுவழியாகவும், இந்து சமயவாதிகளின் சாதிக்கொள்கை வழியாகவும் எதெல்லாம் பிராம்மணனுக்கு இலக்கணமாகக் கருதப்படுகிறதோ அவையெல்லாம் தவறு என்று சொல்லும் அளவுக்கு இவ்வுபநிடதம் சிறப்புடையது.

பெயர்க்காரணம்

'வைர ஊசி' என்று பெயர் கொண்ட இவ்வுபநிடதம் முதல் சுலோகத்திலேயே தன்னுடைய பெயர்க்காரணத்தை எடுத்துரைக்கிறது. இது அஞ்ஞானம் என்ற இருளை, கடினமான தாதுப்பொருள்களில் துவாரம் செய்து நுழையும் வைர ஊசிபோல் பிளக்கும் சாத்திரம். மெய்யறிவு இல்லாதவர்க்கு இது ஒரு கண்டனமாகவும், மெய்யறிவு படைத்தவர்க்கு இது ஓர் அணிகலனாகவும் அமையும்.

நூலின் ஒரே கேள்வி

நான்கு வர்ணங்களில், 'பிராம்மணன்' என்பவன் யார்? எதை ஆதாரமாகக்கொண்டு அவன் 'பிராம்மணன்' ஆகிறான்? ஜீவனா? தேகமா? ஜாதியா? ஞானமா? கருமமா? தருமமா?

ஜீவனைக் குறிப்பதல்ல

ஏனென்றால்

  • சென்றதும் வரப்போவதுமான பல உடல்களிலும் ஒரு ஜீவனின் அமைப்பு மாறுவதில்லை.
  • ஒரே ஜீவனுக்கு கருமவசத்தால் பல உடல்கள் ஏற்படுகின்றன.
  • பலவித உடல்களிலும் ஒரே மாதிரி ஜீவன் தான் உள்ளது.

உடலைக் குறிப்பதல்ல

ஏனென்றால்

  • வெவ்வேறு சாதி என்று அழைக்கப்படும் அத்தனை மனிதர்களுக்கும் ஐம்பூதங்களாலான உடல்கள் ஒரே வடிவாயுள்ளன.
  • மூப்பு, மரணம் முதலிய உடல் தர்மங்கள் சமமாகவே காணப்படுகின்றன.
  • பிராம்மணன் வெள்ளை, க்ஷத்திரியன் சிவப்பு, வைசியன் மஞ்சள், சூத்ரன் கருப்பு என்றபடி நியமம் ஏதும் இல்லை.
  • தந்தையான ஒரு பிராம்மணனுடைய உடலை எரித்த புத்திரனுக்கு பிரம்மஹத்தீ என்ற தோஷம் ஏற்படுவதில்லை

ஜாதியால் ஏற்படுவதல்ல

ஏனென்றால்

  • பிற ஜாதி உயிர்களிலும் அநேக ஜாதிகளில் பல மகரிஷிகள் தோன்றியுள்ளனர்.
ருஷ்யசிருங்கர் மானிட ஜாதியில் பிறந்தவர். கௌசிகர் தர்ப்பையில் தோன்றியவர். ஜாம்பூகர் நரியிடம் பிறந்தவர். வால்மீகி புற்றினிருந்து உதித்தவர். வியாசர் செம்படவப் பெண்ணுக்குப் பிறந்தவர். கௌதமர் முயலிடம் பிறந்தவர்.வசிஷ்டர் ஊர்வசியிடம் பிறந்தவர். அகத்தியர் குடத்தில் தோன்றியவர். இன்னும் இம்மாதிரி பிறவியில்லாமலேயே ஞானமடைந்த ரிஷிகளும் இருந்திருக்கின்றனர். ஆகையால் ஜாதியால் பிராம்மணன் என்பதும் ஒவ்வாது.

ஞானத்தால் அல்ல

பல க்ஷத்திரியர்கள் மெய்ஞ்ஞானம் பெற்ற அறிவாளிகளாக இருந்திருக்கின்றனர்.

கருமத்தாலும் அல்ல

எல்லா உயிர்களுக்கும் ஊழ்வினை, தொல்வினை, வருவினை என்ற வினைகளால் ஏற்படும் கருமங்கள் எல்லோருக்கும் பொது. அவரவர்கள் பூர்வகருமத்தல் தூண்டப்பட்டு இப்பிறவியில் செயல்களில் ஈடுபடுகிறார்கள்

தருமத்தாலும் அல்ல

க்ஷத்திரியர், வைசியர் முதலானோர்களில் பொன்னை தானதருமத்தில் வழங்கியவர் பலர் இருக்கிறார்கள். அதனால் தருமம் செய்பவன், அல்லது செய்தவன் தான் பிராம்மணன் என்பதும் பொருந்தாது.

பின் யார்தான் பிராம்மணன்?

பிராம்மணத் தன்மை என்பது இரண்டற்ற சச்சிதானந்த ஆன்மாவை உள்ளங்கை நெல்லிக் கனிபோல் அனுபவித்தறிவது. இவ்வான்மாவாகவே இருப்பது. அது ஜாதி, குணம், செயல் மூன்றும் அற்றது. பிறப்பு, இருப்பது, வளர்வது, மலர்வது, மெலிவடைவது, இறப்பது -- ஆகிய ஆறு மாறுதல்களும் இல்லாதது. மற்றும் ஆறு 'ஊர்மிகளும்' -- அ-து, மூப்பு, மரணம், வியாதி, உலக மயக்கம், பசி, தாகம் ஆகிய ஆறு 'அலைகள்' -- அற்றது. குற்றங்குறைகளற்றது. சத்யம், ஞானம், அனந்தம், ஆனந்தம் என்ற வடிவுடையது. எல்லாக்கற்பனைகளுக்கும் ஆதாரமாயினும் ஒரு கற்பனையிலும் அட்ங்காதது. எல்லா உயிர்களுக்கும் உள்ளே நின்று இயக்குவது. ஆகாயத்தைப்போல உள்ளும் வெளியும் வியாபித்துப் பிளவுபடாமல் ஆனந்தவடிவாயிருப்பது. மனதிற்கெட்டாதது. அனுபவத்தால் மட்டும் அறியக்கூடியது. எவனொருவன் இப்பேர்ப்பட்ட ஆன்ம வடிவினனாகவே இருந்துகொண்டு, அதனாலேயே விருப்பு வெறுப்பு அற்றவனாகவும், சமம் தமம் முதலிய தன்னடக்கங்களுடன், அழுக்காறு, அவா, வெகுளி முதலியவை நீங்கியவனாகவும், டம்பம், அகந்தை முதலியவற்றால் தீண்டப்படாதவனாகவும், வீடுபெறத் தகுந்தவனாகவும் இருப்பவன் எவனோ அவனே பிராம்மணன் என்பது சுருதி, ஸ்ம்ருதி, இதிஹாஸ புராணங்களின் முடிவான கருத்து. இதற்குப் புறம்பாக பிராம்மணத் தன்மை இல்லவே இல்லை.

துணைநூல்கள்

  • "அண்ணா". உபநிஷத்ஸாரம். 1989 ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை.

http://www.celextel.org/108upanishads/vajrasuchika.html

"https://ta.wikipedia.org/w/index.php?title=வஜ்ர_ஸூசிகா_உபநிடதம்&oldid=847835" இலிருந்து மீள்விக்கப்பட்டது