பிரான்சிஸ் டிரேக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12: வரிசை 12:


== '''திருமணமும் குடும்பமும்''' ==
== '''திருமணமும் குடும்பமும்''' ==

பிரான்சிஸ் டிரேக், மேரி நியுமேன் என்பவரை 1569-இல் மணந்தார். 1585-இல் எலிசபெத் சிடென்ஹம் என்பவரை இரண்டாவதாக மணந்தார். டிரேக் இறந்த பிறகு, எலிசபெத் சர் வில்லியம் கோர்டெனெய் என்பவரை மறுமணம் செய்துகொண்டார். டிரேக்கிற்கு குழந்தை எதுவுமில்லை என்பதால், அவரது சொத்துகளும் உடைமைகளும் அவரது உடன்பிறந்தவர் ஒருவருடைய மகனுக்குச் சேர்ந்தது.[[Francis Drake]]

15:51, 16 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்

முன்னுரை

சர் பிரான்சிஸ் டிரேக், (1540-27.1.1596) துணைத் தளபதி, ஒரு ஆங்கிலேய கப்பல் தலைவர், மாலுமி, அடிமைகளை ஏற்றிச்செல்லும் கப்பலுக்குச் சொந்தக்காரர், எலிசபெத் காலத்திய அரசியல்வாதி. இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத், 1581-இல் டிராக்கை படைத்தளபதியாக நியமித்தார். 1588-இல் ஸ்பானிஷ் ஆர்மடாவிற்கு எதிரான ஆங்கிலேய கப்பற்படையில் இரண்டாம்நிலைத் தளபதியாக இருந்தார். அவர் 1577-1580 இடையே இரண்டாவதாக கப்பலில் உலகை வலம் வந்தவர் ஆவர். 1596-இல் போர்டோ ரிக்கோவின் சான் ஜுவானை தாக்குவதில் தோல்வியுற்ற பிறகு, பேதியால் இறந்து போனார்.

அவருடைய அத்துமீறல்கள் ஆங்கிலேயர்களால் பாராட்டப்பட்டது. ஆனால், ஸ்பானியர்கள் அவரை கடற்கொள்ளையர் என்று அழைத்தனர். ஸ்பானிய மொழியில் அவரது பெயர் எல் டிராக் El Draque எனவும் இலத்தீனில் Franciscus Draco எனவும் அழைக்கப்பட்டார். இரண்டாம் பிலிப் அரசர் இவரது உயிருக்கு 20,000 டுகாட்ஸை விலையாக வைத்தார். இன்றைக்கு அதன் மதிப்பு £4,000,000 (யுஎஸ் $6.5மில்லியன்) ஆகும்.

இளமைக்காலம்

02.03.1544ஆம் நாள் டேவிஸ்டாக்கில் உள்ள டேவொனில் பிரான்சிஸ் டிரேக் பிறந்தார். அவருடைய 17ஆம் வயதில், பிரான்சிஸ் ரஸ்ஸல் என்பவர் பெயரளவில் அவரது ஞானத்தந்தை ஆவார். என்றபோதிலும், பிரான்சிஸ் டிரேக்கின் பிறப்பு பற்றிய தகவல்கள் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை. டிரேக்குக்கு 42 வயது இருக்கும்போது நிக்கோலஸ் ஹில்லார்டு என்ற ஓவியர் அவரின் உருவத்தை ஒரு ஓவியமாகத் தீட்டினார். அவருக்கு 53 வயது ஆனபோது இன்னொரு ஓவியம் 1594-இல் தீட்டப்பட்டது.

எட்மண்ட் டிரேக் கிருத்துவ புராட்டஸ்டன்டு வகுப்பைச் சேர்ந்த ஒரு விவசாயி. அவரது மனைவி மேரி மைல்வேய். இவர்களுக்கு 12 மகன்கள். இத்தம்பதியரின் மூத்த மகனே பிரான்சிஸ் டிரேக் ஆவார். 1549இல் நடந்த பிரேயர் புக் ரெபெலியன் எனப்படும் மத அடக்குமுறைக் கிளர்ச்சியால், டிரேக் குடும்பத்தினர் டெவோன்ஷயரில் இருந்து கெண்ட்டுக்கு தப்பியோடினர். அங்கு அவரது தந்தையார் கிங்ஸ் நேவி என்ற கப்பற்படையில் சேர்ந்தார். பிரான்சுக்கு கப்பல்மூலமாக வாணிபம் செய்துவந்த பக்கத்து வீட்டுக்காரரிடம் பயிற்சிபெற டிரேக்கைஅவரது தந்தை அனுப்பி வைத்தார். இளைஞன் டிரேக்கின் நடத்தை கப்பலின் எஜமானுக்கு மிகவும் திருப்தியை அளித்தது.

திருமணமும் குடும்பமும்

பிரான்சிஸ் டிரேக், மேரி நியுமேன் என்பவரை 1569-இல் மணந்தார். 1585-இல் எலிசபெத் சிடென்ஹம் என்பவரை இரண்டாவதாக மணந்தார். டிரேக் இறந்த பிறகு, எலிசபெத் சர் வில்லியம் கோர்டெனெய் என்பவரை மறுமணம் செய்துகொண்டார். டிரேக்கிற்கு குழந்தை எதுவுமில்லை என்பதால், அவரது சொத்துகளும் உடைமைகளும் அவரது உடன்பிறந்தவர் ஒருவருடைய மகனுக்குச் சேர்ந்தது.Francis Drake

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்சிஸ்_டிரேக்&oldid=845633" இலிருந்து மீள்விக்கப்பட்டது