"மின்காந்தம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:Simple electromagnet2.gif|right
மின்னோட்டம் பாய்வதன் மூலம் காந்தப் புலத்தை உருவாக்கும் காந்தம் மின்காந்தம் எனப்படும். இங்கு மின்னோட்டம் நிறுத்தப்படும்போது காந்தப்புலம் மறைந்துவிடும். மோட்டர்கள், மின்பிறப்பாக்கிகள், ஒலிபெருக்கிகள், வன்தட்டுக்கள், காந்தப் பரிவுப் படிமவாக்கல் இயந்திரங்கள், விஞ்ஞான உபகரணங்கள், காந்தவியல் பிரித்தெடுப்பு சாதனங்கள் போன்ற மின் சாதனங்களில் மின்காந்தங்கள் ஒரு உப அங்கமாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் கைத்தொழிற்துறையில் பாரமான இரும்புப் பாளங்களைத் தூக்கும் பணியில் பயன்படுத்தப்படுகிறது.
கம்பியொன்றில் பாயும் மின்னோட்டமானது அக்கம்பியைச் சுற்றி காந்தப்புலமொன்றை உருவாக்குகிறது. காந்தப்புலத்தை ஒருமுகப்படுத்துவதற்காக மின்காந்தமொன்றில் கம்பியானது முறுக்குகள் மிகவும் அருகருகே இருக்கும் வகையில் ஒரு சுருளாகச் சுற்றப்பட்டிருக்கும். அப்போது கம்பியின் ஒவ்வொரு முறுக்கினாலும் உண்டாக்கப்படும் காந்தப்புலமானது சுருளின் மையத்தினூடாகச் சென்று ஒரு உறுதியான காந்தப்புலத்தைத் தோற்றுவிக்கிறது.
[[File:Electromagnetism.svg|right|thumb|கம்பியியொன்றினூடு பாயும் மின்னோட்டம்(I) காந்தப்புலமொன்றை(B) தோற்றுவிக்கிறது. புலமானது வலக்கைவிதிக்கமைவாக திசைப்படுத்தப்பட்டுள்ளது.]]
கம்பிச் சுருளினூடான காந்தப்புலத்தின் திசையை வலக்கை விதி மூலம் துணியலாம். அதாவது, வலக்கையின் விரல்கள் கம்பிச்சுருளினூடு பாயும் மின்னோட்டத்தின் திசையில் வளைக்கப்படுமாயின் வலக்கைப் பெருவிரலானது கம்பிச்சுருளின் மையத்தினூடாகப் பாயும் காந்தப்புலத்தின் திசையைத் தரும். காந்தப்புலக்கோடுகள் வெளியேறுவதாகத் தோற்றும் முனைவு அம் மின்காந்தத்தின் வடமுனைவாக வரையறுக்கப்படும்.
|