நீதித் தலைவர்கள் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிமாற்றல்: bar:Buach der Richta
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ro:Judecători (carte)
வரிசை 84: வரிசை 84:
[[pt:Livro dos Juízes]]
[[pt:Livro dos Juízes]]
[[qu:Taripakuqkunap qillqasqan]]
[[qu:Taripakuqkunap qillqasqan]]
[[ro:Judecători (carte)]]
[[ru:Книга Судей Израилевых]]
[[ru:Книга Судей Израилевых]]
[[rw:Igitabo cy’Abacamanza]]
[[rw:Igitabo cy’Abacamanza]]

12:07, 6 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்

தெலீலா சிம்சோனின் முடியை மழித்து, பலமிழக்கச் செய்கிறார் (நீத 16). ஓவியர்:ஃப்ரான்செஸ்கோ மொரோனெ. காலம்: 16ஆம் நூற்றாண்டு. காப்பகம்: மிலான், இத்தாலியா.

நீதித் தலைவர்கள் (நீதிபதிகள்/நியாயாதிபதிகள் ஆகமம்) (Book of Judges) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறும் ஒரு நூல் ஆகும்.

நூல் பெயர்

இந்நூல் எழுதப்பட்ட மூல மொழியாகிய எபிரேயத்தில் "Sefer Shoftim" (= "ஆட்சித் தலைவர்களின் நூல்") என்பது இதன் பெயராகும்.

நூலின் உள்ளடக்கம்

நீதித் தலைவர்கள் என்னும் இந்நூல் இசுரயேலர் கானான் நாட்டைக் கைப்பற்றியதற்கும் அவர்களிடையே முடியாட்சி தொடங்கியதற்கும் இடைப்பட்ட காலத்தைப் பற்றியதாகும். இக்காலக் கட்டத்தில் இறைவன் இசுரயேல் மக்களுக்குத் தாம் தெரிந்துகொண்டோர் மூலமாக விடுதலை அளித்து அவர்களைப் பாதுகாத்து வந்தார். இவர்களுள் பெரும்பாலோர் வலிமைமிகு வீரர்களாகவும் படைத் தலைவர்களாகவும் ஆளுநர்களாகவும் இருந்தனர்.


இசுரயேலரின் வாழ்வும் வெற்றியும் கடவுளிடம் அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையைப் பொறுத்தே அமைந்திருந்தது என்பதையும் அவர்களது நம்பிக்கையின்மை அவர்களுக்கு அழிவையே கொணர்ந்தது என்பதையும் இந்நூல் வலியுறுத்திக் கூறுகின்றது. அவர்கள் இறைவனைக் கைவிட்டு அவதியுற்ற காலத்திலும் மனம்மாறி அவரிடம் திரும்பிவந்தால், அவர் தம் மக்களைத் தவறாது பாதுகாத்து அவர்களுக்கு விடுதலை அளிப்பார் என்பதையும் இந்நூல் சுட்டிக் காட்டுகிறது.

தலைசிறந்த நீதித் தலைவர்கள்

இசுரயேல் மக்களை ஆண்டு, வழிநடத்திய நீதித் தலைவர்களுள் ஆறு பேர் தலைசிறந்தோராகக் கருதப்படுகின்றனர். அவர்களின் பெயர்கள்:


1) ஒத்னியேல்
2) ஏகூது
3) தெபோரா
4) கிதியோன்
5) இப்தா
6) சிம்சோன்

நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. யோசுவாவின் இறப்புவரை நிகழ்ந்தவை 1:1 - 2:10 364 - 366
2. இசுரயேலின் நீதித் தலைவர்கள் 2:11 - 16:31 366 - 393
3. பல்வேறு நிகழ்ச்சிகள் 17:1 - 21:25 393 - 402
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீதித்_தலைவர்கள்_(நூல்)&oldid=837547" இலிருந்து மீள்விக்கப்பட்டது