திப்புவின் புலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 52: வரிசை 52:


<blockquote>இசைக் கருவிகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஒரு அறையில் ஒரு புதிரான பொருள் கண்டெடுக்கப்பட்டது. திப்பு சாகிப் ஆங்கிலேயரின் பால் கொண்டிருந்த கடும் வெறுப்புக்கு அது சான்றாக இருந்தது. இந்த இயங்குமுறை கீழே விழுந்து கிடக்கும் ஒரு ஐரோப்பியரை ஒரு ராயல் புலி விழுங்கும் காட்சியை சித்தரிக்கிறது. ஆர்கன் இசைக்கருவியனுடையது போல சில குழாய்கள் புலியின் உடலுக்குள் உள்ளன. அது உண்டாக்கும் ஓசை புலியின் உறுமலும் ஐரோப்பியனது ஓலமும் கலந்து வரும் ஒசையைப் போல் வரும்படி அமைக்கப்பட்டுள்ளது. ஓசை எழும் போது ஐரோப்பியனின் கையாலாகாத் தனத்தை வெளிப்படுத்தும் வகையில் அவனது கை அடிக்கடி மேலெழுகிறது. இந்த வடிவமைப்பு திப்புவின் ஆணைப்படி உருவாக்கப்பட்டுள்ளது. திப்புவின் திமிருக்கும் கொடூரத்துக்கும் நினைவுப் பொருளாக அமைந்துள்ள இந்த பொம்மை லண்டன் கோபுரத்தில் வைக்கத் தகுதியானது என்று கருதலாம்.</blockquote>
<blockquote>இசைக் கருவிகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஒரு அறையில் ஒரு புதிரான பொருள் கண்டெடுக்கப்பட்டது. திப்பு சாகிப் ஆங்கிலேயரின் பால் கொண்டிருந்த கடும் வெறுப்புக்கு அது சான்றாக இருந்தது. இந்த இயங்குமுறை கீழே விழுந்து கிடக்கும் ஒரு ஐரோப்பியரை ஒரு ராயல் புலி விழுங்கும் காட்சியை சித்தரிக்கிறது. ஆர்கன் இசைக்கருவியனுடையது போல சில குழாய்கள் புலியின் உடலுக்குள் உள்ளன. அது உண்டாக்கும் ஓசை புலியின் உறுமலும் ஐரோப்பியனது ஓலமும் கலந்து வரும் ஒசையைப் போல் வரும்படி அமைக்கப்பட்டுள்ளது. ஓசை எழும் போது ஐரோப்பியனின் கையாலாகாத் தனத்தை வெளிப்படுத்தும் வகையில் அவனது கை அடிக்கடி மேலெழுகிறது. இந்த வடிவமைப்பு திப்புவின் ஆணைப்படி உருவாக்கப்பட்டுள்ளது. திப்புவின் திமிருக்கும் கொடூரத்துக்கும் நினைவுப் பொருளாக அமைந்துள்ள இந்த பொம்மை லண்டன் கோபுரத்தில் வைக்கத் தகுதியானது என்று கருதலாம்.</blockquote>

கிழக்கிந்திய கம்பனியின் ஆளுனர்கள் இப்பொம்மையை பிரித்தானிய முடியிடம் ஒப்படைக்க வேண்டாமென்று முடிவு செய்தனர். ஆரம்பத்தில் லண்டன், லெடன்ஹால் தெருவில் அமைந்திருந்த கிழக்கிந்திய கம்பனி அருங்காட்சியகத்தில் இது காட்சிக்கு வைக்கப்பட்டது. அங்கு இதனைக் கண்ட கவிஞர் [[ஜான் கீட்ஸ்]] தனது [[அங்கதம்|அங்கத]]க் கவிதையொன்றில் இதனைக் குறிப்பிட்டார். புலி பிரித்தானியப் போர் அதிகாரியைக் குதறும் காட்சி இங்கிலாந்தில் பிரபலமானது. 1820 இல் ஹெக்டர் மன்ரோ இறந்த போது அவர் நினைவாக, இது போன்ற மண்பாண்டங்கள் உருவாக்கப்பட்டன.<ref name="de Almeida">{{cite book
| first1 = Hermione | last1 = de Almeida
| first2 = George H. | last2 = Gilpin
| title = Indian Renaissance: British romantic art and the prospect of India
| url = http://books.google.com/books?id=Nu0j0GFSsDcC&pg=PA35&dq=tipu%27s+tiger&as_brr=3#v=onepage&q=tipu's%20tiger&f=false
| accessdate = 2011-07-16
| year = 2005
| publisher = Ashgate Publishing, Ltd.
| isbn = 9780754636816
| pages = 38
| quote = Singular and curious among the spools of war sent home to England was a large, almost life-size, wood sculpture of a Bengal tiger ravaging an English gentleman. The sculpture had been Tupu Sultan's favourite joke display for visitors to the Mysore court, and it now took first place among British exhibits from the victory over the Sultan of Mysore.
}}</ref>


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

14:08, 16 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்

விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் உள்ள திப்புவின் புலி பொம்மை

திப்புவின் புலி மைசூர் அரசின் அரசர் திப்பு சுல்தானுடைய ஒரு தானியங்கி பொம்மை. இது ஒரு புலி பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் படை வீரர் ஒருவரைக் கடித்துக் குதறுவது போல அமைக்கபட்டுள்ளது. 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த இப்பொம்மை தற்போது லண்டனில் உள்ள விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் உள்ளது.[1]

விவரம்

மைசூரின் புலி என்றழைக்கபப்ட்ட திப்பு, தனது சின்னமாக புலியைப் அனைத்து இடங்களிலும் பயன்படுத்தினார். அவருடைய படை வீரரகளின் சீருடைகள், மாளிகை அலங்காரங்கள் ஆயுதங்களில் புலிகள் இடம் பெற்றிருந்தன. இந்த புலி பொம்மை 1795 இல் திப்புவுக்காக செய்யப்பட்டது. கையினால் திருப்பப்படும் ஒரு சுழற்றியால் இதனுள் உள்ள பல இயங்குமுறைகள் இயக்கப்படுகின்றன. படை வீரனின் தொண்டையில் உள்ள ஒரு குழாயின் வழியாக இரு துருத்திகள் காற்றை வெளியேற்றுகின்றன. இதனால் படை வீரன் ஓலமிடுவது போன்ற சத்தம் உருவாகுகின்றது. அதே நேரம் இன்னொரு எந்திர இணைப்பு, வீரனின் இடது கை மேலும் கீழும் அசையும்படி செய்கிறது. வீரனின் கை அசைந்தால், அவன் ஓலத்தின் சுருதி மாறுகிறது. புலியின் தலையினுள் உள்ள இன்னொரு இயங்குமுறை இரு குழாய்களின் மூலம் காற்றினை வெளியேற்றுகிறது. இதனால் புலி உறுமும் ஓசை எழுகிறது. புலி உடலின் ஒரு பக்கத்தில் தந்தத்தால் ஆன ஒரு இசை விசைப்பலகை மறைத்து வைக்கப்பட்டுள்ளது. அதன் விசைகளை அழுத்தினால் ஆர்கன் குழாய்கள் வழியாக காற்று வெளியேறி இசை உண்டாகுகிறது.[2]

இந்த ஆர்கன் குழாய்களின் பித்தளை உள்ளடக்கத்தை ஆராய்ந்ததிலிருந்து இந்த பொம்மை இந்தியாவில் தான் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டுமென்று தெரிகிறது. பிரெஞ்சு கைவினைக் கலைஞர்களும் படைத்துறைப் பொறியாளர்களும் திப்புவிடம் பணி புரிந்து வந்ததால் இந்தப் பொம்மையை உருவாக்குவதில் அவர்களது பங்கும் இருந்திருக்குமென பல வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள். பொம்மையின் மர ஓடு இந்து சமய கைவினைக் கலைமரபுகளின் தாக்கத்தால் இருக்கக் கூடும்.[3][4][5][6]

ஆங்கில-மைசூர் போர்களின் திப்புவைத் தோற்கடித்த ஆங்கிலத் தளபதி சர். ஹெக்டர் மன்ரோவின் மகன் ஹூக் மன்ரோவின் மரணம் இப்பொம்மையைச் செய்யத் தூண்டுகோலாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. டிசம்பர் 22, 1792 அன்று சாகர் தீவில் ஹூக் மன்ரோ ஒரு புலியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.[7]

நான்காவது ஆங்கில-மைசூர்ப் போரின் முடிவில் மே 7, 1799 அன்று திப்பு கொல்லப்பட்டு அவரது தலைநகரான ஸ்ரீரங்கப்பட்டணம் கோட்டை கம்பனி படையினரால் கைப்பற்றப்பட்டது. அப்போது இந்த பொம்மையும் கம்பனி வசமானது. அப்போதைய இந்தியத் தலைமை ஆளுனர் ரிச்சர் வெல்லஸ்லியின் துணை அதிகாரிகளுள் ஒருவர், இப்பொம்மை கம்பனி படைகளால் கைப்பற்றப்பட்டதை பின்வருமாறு விவரிக்கிறார்:

இசைக் கருவிகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஒரு அறையில் ஒரு புதிரான பொருள் கண்டெடுக்கப்பட்டது. திப்பு சாகிப் ஆங்கிலேயரின் பால் கொண்டிருந்த கடும் வெறுப்புக்கு அது சான்றாக இருந்தது. இந்த இயங்குமுறை கீழே விழுந்து கிடக்கும் ஒரு ஐரோப்பியரை ஒரு ராயல் புலி விழுங்கும் காட்சியை சித்தரிக்கிறது. ஆர்கன் இசைக்கருவியனுடையது போல சில குழாய்கள் புலியின் உடலுக்குள் உள்ளன. அது உண்டாக்கும் ஓசை புலியின் உறுமலும் ஐரோப்பியனது ஓலமும் கலந்து வரும் ஒசையைப் போல் வரும்படி அமைக்கப்பட்டுள்ளது. ஓசை எழும் போது ஐரோப்பியனின் கையாலாகாத் தனத்தை வெளிப்படுத்தும் வகையில் அவனது கை அடிக்கடி மேலெழுகிறது. இந்த வடிவமைப்பு திப்புவின் ஆணைப்படி உருவாக்கப்பட்டுள்ளது. திப்புவின் திமிருக்கும் கொடூரத்துக்கும் நினைவுப் பொருளாக அமைந்துள்ள இந்த பொம்மை லண்டன் கோபுரத்தில் வைக்கத் தகுதியானது என்று கருதலாம்.

கிழக்கிந்திய கம்பனியின் ஆளுனர்கள் இப்பொம்மையை பிரித்தானிய முடியிடம் ஒப்படைக்க வேண்டாமென்று முடிவு செய்தனர். ஆரம்பத்தில் லண்டன், லெடன்ஹால் தெருவில் அமைந்திருந்த கிழக்கிந்திய கம்பனி அருங்காட்சியகத்தில் இது காட்சிக்கு வைக்கப்பட்டது. அங்கு இதனைக் கண்ட கவிஞர் ஜான் கீட்ஸ் தனது அங்கதக் கவிதையொன்றில் இதனைக் குறிப்பிட்டார். புலி பிரித்தானியப் போர் அதிகாரியைக் குதறும் காட்சி இங்கிலாந்தில் பிரபலமானது. 1820 இல் ஹெக்டர் மன்ரோ இறந்த போது அவர் நினைவாக, இது போன்ற மண்பாண்டங்கள் உருவாக்கப்பட்டன.[8]

மேற்கோள்கள்

  1. Tipu's Tiger. Victoria & Albert Museum, 2011. Retreived 16 July 2011.
  2. Brittlebank, K. (1995). "Sakti and Barakat: The Power of Tipu's Tiger. An Examination of the Tiger Emblem of Tipu Sultan of Mysore". Modern Asian Studies 29 (2): 257–269. 
  3. Stronge, 40
  4. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; tipu என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  5. Archer, Mildred (1959). Tippoo's Tiger. Museum Monograph, Victoria & Albert Museum. London: HM Stationery Office. http://books.google.com/books?id=c9GnCcBTFYsC. பார்த்த நாள்: 2011-07-16. 
  6. Stronge, Susan (2009). Tipu's Tigers. London: V & A Publishing. பக். 40. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781851775750. http://books.google.com/books?id=E-AnAQAAIAAJ&dq=9781851775750. பார்த்த நாள்: 2011-07-16. 
  7. Victoria & Albert Museum (2011). "Tipu's Tiger Sound and Movement animation". London: Victoria & Albert Museum. பார்க்கப்பட்ட நாள் 2011-07-16.
  8. de Almeida, Hermione; Gilpin, George H. (2005). Indian Renaissance: British romantic art and the prospect of India. Ashgate Publishing, Ltd.. பக். 38. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780754636816. http://books.google.com/books?id=Nu0j0GFSsDcC&pg=PA35&dq=tipu%27s+tiger&as_brr=3#v=onepage&q=tipu's%20tiger&f=false. பார்த்த நாள்: 2011-07-16. "Singular and curious among the spools of war sent home to England was a large, almost life-size, wood sculpture of a Bengal tiger ravaging an English gentleman. The sculpture had been Tupu Sultan's favourite joke display for visitors to the Mysore court, and it now took first place among British exhibits from the victory over the Sultan of Mysore." 
"https://ta.wikipedia.org/w/index.php?title=திப்புவின்_புலி&oldid=820002" இலிருந்து மீள்விக்கப்பட்டது