பரதவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{refimprove}}
'''பரதவர்''', பரவர், அல்லது பரதர் என்போர், [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] மிகப் பழமையான சாதியினர். [[பாண்டியர்|பாண்டிய]] வம்சத்தைத் தோற்றுவித்தவர்கள் அவர்களே. மீன் கொடியினை கொண்டு முதல் தமிழ் அரசை தோற்றுவித்தவர்கள் பரதவர்கள். இயற்கை சீற்றங்களால் எல்லை மாறுதல்கள் ஏற்பட்டபோது போர் மறவர்களாக மாறி மற்ற அரசுகளை வீழ்த்தி ஏகாதிபத்தியம் நிலைநாட்டியவர்கள். பல நூற்றாண்டுகளாக பரவர்களாகவும் மறவர்களாகவும் நாடாண்டவர்கள் பரத பாண்டியர்கள். முத்துக்குளித்தல், மீன் பிடித்தல், சங்கறுத்தல், உப்பு விளைத்தல் போன்றவை இவர்களது தொழில்கள். பல சங்க இலக்கியங்கள் இவர்கள் புகழைப் பாடுகின்றன. இவர்கள் சந்திர வம்சத்தினர். பரத நாடு முழுமையையும் ஆண்ட பரத மன்னன் இவர்கள் வழிவந்தவனே.<ref>[[http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3dsal?dbname=tamillex&query=%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D&matchtype=exact&display=utf8

]]</ref> <ref>[[http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3dsal?dbname=tamillex&query=%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D&matchtype=exact&display=utf8]]</ref> <ref>[[http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3dsal?dbname=tamillex&query=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D&matchtype=exact&display=utf8]]</ref>

16:08, 26 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்

பரதவர், பரவர், அல்லது பரதர் என்போர், தமிழகத்தின் மிகப் பழமையான சாதியினர். பாண்டிய வம்சத்தைத் தோற்றுவித்தவர்கள் அவர்களே. மீன் கொடியினை கொண்டு முதல் தமிழ் அரசை தோற்றுவித்தவர்கள் பரதவர்கள். இயற்கை சீற்றங்களால் எல்லை மாறுதல்கள் ஏற்பட்டபோது போர் மறவர்களாக மாறி மற்ற அரசுகளை வீழ்த்தி ஏகாதிபத்தியம் நிலைநாட்டியவர்கள். பல நூற்றாண்டுகளாக பரவர்களாகவும் மறவர்களாகவும் நாடாண்டவர்கள் பரத பாண்டியர்கள். முத்துக்குளித்தல், மீன் பிடித்தல், சங்கறுத்தல், உப்பு விளைத்தல் போன்றவை இவர்களது தொழில்கள். பல சங்க இலக்கியங்கள் இவர்கள் புகழைப் பாடுகின்றன. இவர்கள் சந்திர வம்சத்தினர். பரத நாடு முழுமையையும் ஆண்ட பரத மன்னன் இவர்கள் வழிவந்தவனே.[1] [2] [3]

இலக்கியத்தில் பரதவர்

பண்டைய தமிழகம் ஐவகைத் திணைப் பிரிப்பைக் கொண்டது. குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என அவை சொல்லப்படும். நெய்தல் கடலும் கடல் சார்ந்த பிரதேசமுமாகும். இங்கு வாழும் மக்களை பரதவர்கள் என இலக்கியங்கள் குறிக்கும்.

பரதவர்கள் பல்வேறு கடல் சார் தொழில்களில் ஈடுபட்டதன் மூலம் பொருளீட்டினார்கள். மீன்பிடி, முத்து சங்கு குளித்தல், உப்பு விளைவித்தல், சங்கறுத்தல், கடலோடுதல், கடல் வாணிபம் எனப் பல தொழில்களால் பல உட்பிரிவுகளாக பிரிந்தார்கள். அவ்வுட் பிரிவுகளின்படி தொன்மங்களையும் ஐதீகங்களையும் உருவாக்கிக் கொண்டார்கள்.

பழம் குலப் பெயர்கள்

பரதவர்களிடையே குருகுலம், வருணகுலம், குகன் குலம், ஆரிய நாட்டார் (ஆரியன்), கங்கை நாட்டார், சிந்து நாட்டார் சிவன் படையினர் போன்ற தொன்மப் பெயர்கள் வழக்கில் உண்டு. இதில் ஒரு பெயரான ஆரியன் என்ற பெயர் சோழநாட்டு பட்டினவரைக் குறிக்கும் பெயராகும். இது இன்றும் வழக்கில் உண்டு. துறைமுகங்களில் வாழும் பரதவர்களை பட்டினவர்கள் என அழைப்பர். அதில் சோழநாட்டுத் துறைமுகங்களில் வாழ்ந்த பட்டினவர் ஆரியன் என்று அழைக்கப்பட்டார்கள். பரதவர்கள் குருகுலம் என்ற ஐதீகத்தையும் கொண்டிருந்தார்கள். குரு குலத்தில் இருந்து உதித்த இன்னொரு குலமே வருண குலம் ஆகும். பட்டினவர் தொழில்களாக கடல் ஓடுதல், கடல் வாணிபம் செய்தல், கடற்படை வீரர்களாக அரசபடைகளில் வணிக கணங்களின் கடற்படையில் பணி செய்தார்கள்.

சிறப்புக்கள்

பல்வேறு கல்வெட்டுக்கள் மற்றும் சங்க இலக்கிய நூல்கள் இந்த பரதவர்களின் சிறப்பை உரைக்கின்றன. பதினைந்தாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இவர்கள் இசுலாமியர்களால் ஒடுக்கப்பட்டு பின் கிறிஸ்தவ மறையைத் தழுவினர். முன்நாட்களில் பாண்டியர் என்றும், படையாட்சியர், வில்லவராயர், பூபாலராயர், பாண்டியதேவர், சிங்கராயர், என்றெல்லாம் அழைக்கப்பட்டவர்கள் இன்று பெர்னாண்டோ, மச்சாடோ, மச்காறேன்ஹாஸ், ரோட்ரிகோ என்ற போர்த்துக்கீசிய பெயர்களால் அழைக்கப்படுகிறார்கள். பரதகுலத்தினர் பேரரசர் குலத்தவர் என்பதற்கான பல அடையாளங்கள் அகழ்வாராய்ச்சிகளிலும் கிடைத்த வண்ணம் உள்ளன.

தியாகி பெஞ்சமின்

குலசேகரபட்டினம் உப்பளத்தில் விடுதலைப் போராட்ட வீரர்கள் குழு ஒன்று அங்கிருந்த கொட்டகைக்குத் தீ வைத்து, அவர்களிடமிருந்த துப்பாக்கி முதலிய ஆயுதங்களைப் பறித்துக்கொண்டு தப்ப முயன்றது. இந்தக்குழுவைக் துப்பாக்கியின் பின்புறத்தினால் தாக்கிய டபிள்யூ. லோன் (W. Loane) துரை என்ற ஆங்கிலேய அதிகாரியை அந்தக் குழு கொலை செய்தது. இந்தக் குற்றத்திற்காக இந்தக் குழுவினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்தக்குழுவினருள் மூன்றாமவர் பரதர் குலத்தைச் சேர்ந்த தியாகி பெஞ்சமின். இந்தக் குழுவினருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை ரத்து செய்யக் கோரி நடைபெற்ற வழக்குகளில் கடைசியாக ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. நாடு விடுதலையடைந்ததை அடுத்து இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். [4]

உசாத்துணை

  • நெய்தல் நில மன்னர்கள், கலாநிதி ஏ.எஸ்.சோசை, விரிவுரையாளர் - யாழ் பல்கலைக்கழகம்

மேற்கோள்கள்

  1. [[http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3dsal?dbname=tamillex&query=%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D&matchtype=exact&display=utf8 ]]
  2. [[1]]
  3. [[2]]
  4. தியாகி பெஞ்சமின்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரதவர்&oldid=803064" இலிருந்து மீள்விக்கப்பட்டது