"காடழிப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1 பைட்டு நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
காட்டு நிலங்களை, [[வேளாண்மை]], [[நகராக்கம்]] போன்ற காடல்லாத நிலப் பயன்பாடுகளுக்கோ அல்லது அதன் வளங்களுக்காகக் காட்டை வெட்டி நிலத்தைத் தரிசாகவோ மாற்றுவதே '''காடழிப்பு''' என்பதன் முழுமையான பொருளாகும். முற்காலத்தில் காடழிப்பு, [[மேய்ச்சல் நிலம்|மேய்ச்சல் நிலங்களை]] உருவாக்குவதற்கு அல்லது வேளாண்மை நிலங்களை உருவாக்கும் நோக்கத்துடனேயே நடைபெற்றது. தொழிற் புரட்சிக்குப் பின்னர் நகராக்கமும், [[காட்டு வளம்|காட்டு வளங்களின்]] சுரண்டலும், இத்துடன் சேர்ந்து கொண்டன. பொதுவாக, குறிப்பிடத்தக்க பரப்பளவு கொண்ட காடுகளை அழிப்பது, [[உயிரியற் பல்வகைமை]]யைக் (biodiversity) குறைத்து, சூழலையும் தரம் குறைத்து விடுகிறது. வளர்ந்துவரும் நாடுகளில் பெருமளவில் காடழிப்பு இடம்பெற்று வருகிறது. உலக மக்கள் தொகையில் 16 சதவீதம் கொண்டுள்ள ஐரோப்பிய நாடுகள், [[ஜப்பான்]], மற்றும் வட அமெரிக்க நாடுகள் தொழில்துறையில் பயன்படுத்துகின்ற மரப்பொருடகளில் பாதியை இவை பயன்படுத்துகின்றன.<ref name="wood">பக்கம் 48, ''மக்கள் தொகைப் பிரச்சினை பதினாறு கோணங்கள்'' - லெஸ்டர் ஆர். பிரௌன், காரி கார்டனர், பிரியன் ஹால்வெல் தமிழில் முனைவர் செ. முருகதாஸ், ஆர்.ஏ.சி பதிப்பகம், [[சென்னை]], </ref> இது [[புவியியல்]] மற்றும் [[காலநிலை]] சார்ந்த தாக்கங்களை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
 
போதிய அளவு காடாக்க நடவடிக்கைகள் இன்றி மரங்கள் வெட்டப்படுவதாலேயே தாக்கங்கள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. காடாக்கம் நடைபெற்றாலும் குறிப்பிடத்தக்க அளவு உயிரியற் பல்வகைமைக் குறைவு ஏற்படும். வேண்டுமென்றே செய்யப்படும் காடழிப்பு ஒருபுறம் இருக்க, உணரப்படாமலே, மனிதச் செயற்பாடுகளால், காடழிப்பு இடம்பெறக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. எடுத்துக் காட்டாக, காட்டு நிலங்களில் [[கால்நடை]]களை மேய்ச்சலுக்கு விடுவதன் மூலம் புதிய மரக்கன்றுகள் உருவாகாமல் தடுக்கப்படுவதால், இயற்கையான காட்டின் மீளுருவாக்கம் தடைப்பட்டு மெதுவான காடழிப்பு ஏற்படக்கூடும். இவற்றையும் விட இயற்கைச் சீற்றங்களும் காடழிப்புக்குக் காரணிகள் ஆகக் கூடும். திடீரென ஏற்படுகின்ற [[காட்டுத் தீகாட்டுத்தீ]], பல ஆயிரம் [[ஏக்கர்]] பரப்பளவில் உள்ள காடுகளைச் சில நாட்களிலேயே அழித்து விடுகின்றன. மேய்ச்சலாலும், காட்டுத் தீயாலும் ஏற்படுகின்ற தாக்கங்களின் கூட்டு விளைவு, வறண்ட பகுதிகளின் காடழிப்புக்கு முதன்மைக் காரணிகளுள் ஒன்றாக இருக்கின்றது.
 
காடுகள் அழிவதால் ஏற்படுகின்ற நேரடித் தாக்கங்கள் ஒருபுறம் இருக்க, மறைமுகமான தாக்கங்களும் விரும்பத் தகாத விளைவுகளை ஏற்படுத்துகின்றன. [[விளிம்பு விளைவு]] (''edge effects''), [[வாழிடத் துண்டாக்கம்]] (''habitat fragmentation'') போன்றவை காடழிப்பின் விளைவுகளை மேலும் பெரிதாக்குகின்றன.
9,552

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/794806" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி