வேர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
3,369 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
[[File:Primary and secondary cotton roots.jpg|thumb|right|250px|பருத்திச் செடியின் முதல் வேரும், துணை வேர்களும்]]
'''வேர்''' என்பது, [[தாவரம்|தாவரங்களின்]], ஒரு உறுப்பு ஆகும். பொதுவாக இது நிலத்துக்குக் கீழ் காணப்படும் ஒரு பகுதி ஆகும். ஆனாலும், எல்லா வேர்களுமே நிலத்துக்குக் கீழ் இருப்பதில்லை. சில தாவரங்கள் [[ஆகாய வேர்]]களைக் கொண்டவை. வேறு சிலவற்றில் [[மூச்சு வேர்]]கள் எனப்படும் வேர்களின் பகுதிகள் நிலத்துக்கு மேலும் வளர்வது உண்டு. தாவரங்களில் நிலத்தின் கீழ் அமையும் பகுதிகள் எல்லாமே வேர்களும் அல்ல. சில தாவரங்களில் தண்டுகளும் நிலத்தின் கீழ் அமைவது உண்டு. இவை, "நிலக்கீழ் தண்டுகள்", அல்லது "வேர்த்தண்டுகள்" எனப்படுகின்றன.
 
==செயற்பாடுகள்==
தாவரங்களின் வேர்களுக்கு நான்கு முதன்மையான செயற்பாடுகள் உண்டு. தாவரத்தை நிலத்துடன் பிணைத்து வைத்திருத்தல், உணவைச் சேமித்தல், நிலத்திலிருந்து நீரையும் [[கனிமம்|கனிமங்களையும்]] உறிஞ்சுதல், உறிஞ்சிய நீரையும், கனிமங்களையும் தாவரத்தின் பிற பகுதிகளுக்குக் கடத்துதல் என்பன இந் நான்கு செயற்பாடுகளும் ஆகும்.
 
* தாவரங்களின் வேர்கள், மண்ணைத் துளைத்துக் கீழ் நோக்கியும் பக்கவாட்டிலும் செல்கின்றன. இவ்வாறு உருவாகும் வேர்த் தொகுதி தாவரங்களை நிலத்துடன் உறுதியாகப் பிணைத்து வைத்திருக்க உதவுகின்றன.
 
* சில பருவகாலத் தாவரங்கள் தமது அடுத்த பருவ வளர்ச்சிக்குத் தேவையான உணவை வேர்களின் சேமித்து வைக்கின்றன. ஒரு பருவத்தின் முடிவில் நிலத்தின் மேலுள்ள [[தண்டு]]ம் [[இலை]]களும் அழிந்துவிட நிலத்தின் கீழ் உணவுச் சேமிப்புடன் கூடிய வேர்கள் மட்டும் காணப்படும். அடுத்த பருவத்தில் புதிய தண்டுகளும், இலைகளும் தோன்றுவதற்கான ஆற்றலை இவ்வாறு சேமித்த உணவே வழங்குகிறது.
 
* தாவரத்தின் பல்வேறு செயற்பாடுகளுக்குத் தேவையான நீரையும், கனிமப் பொருட்களையும் அது வேரினூடாகவே பெறுகின்றது. வேர்கள் நிலத்தை ஊடுருவிச் சென்று அங்கிருக்கும் நீரையும், நீரில் கரைந்துள்ள கனிமங்களையும் உறிஞ்சுகின்றன.
 
* வேரினால் உறிஞ்சப்படும் நீரையும் கனிமங்களையும், [[ஒளித்தொகுப்பு]] மூலம் உணவைத் தயாரிக்கும் இலைக்கும், வேறு தேவைகளுக்காகப் பிற பகுதிகளுக்கும் அனுப்புவதற்கும் வேர்கள் உதவுகின்றன.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/789364" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி