உருகுநிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ka:დნობის ტემპერატურა
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: an:Punto de fusión
வரிசை 12: வரிசை 12:


[[af:Smeltpunt]]
[[af:Smeltpunt]]
[[an:Punto de fusión]]
[[ar:نقطة الانصهار]]
[[ar:نقطة الانصهار]]
[[ast:Puntu de fusión]]
[[ast:Puntu de fusión]]

21:28, 25 மே 2011 இல் நிலவும் திருத்தம்

திண்மமொன்றின் உருகுநிலை என்பது அப்பொருள் திண்ம நிலையிலிருந்து நீர்மன்(திரவ) நிலைக்கு மாறும் போதுள்ள வெப்பநிலையைக் குறிக்கும். உருகுநிலையில் திண்ம, நீர்ம நிலைகள் சமநிலையில் காணப்படும். நீர்மநிலையில் இருந்து திண்மநிலைக்கு மாறும்போதுள்ள வெப்பநிலையைக் குறிக்கும்போது இது உறைநிலை எனப்படும். வெப்பம் ஏற்றப்படும் போது பொருளின் வெப்பநிலை உயர்ந்து கொண்டு செல்லும், எனினும் பொருள் உருகத் தொடங்கியது வெப்பநிலை மாற்றம் எதுவும் இல்லாது வெப்பம் உறிஞ்சப்படும். இது உருகல் மறைவெப்பம் எனப்படும். சில பொருட்கள் நீர்மநிலைக்கு (திரவநிலைக்கு) வராமலே வளிம (வாயு) நிலையை அடைவதுண்டு. இது பதங்கமாதல் என அழைக்கப் படுகின்றது.

கொதிநிலையைப் போல உருகுநிலை அமுக்க மாற்றத்தால் குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்கப்படுவதில்லை. வளியமுக்க நிலையில் அறியப்பட்ட பொருட்களுள் மிகக்கூடிய உருகுநிலையைக் கொண்டது கரிமத்தின் ஒரு வடிவமான கிராபைட் ஆகும். இதன் உருகுநிலை 3948 கெல்வின்கள் ஆகும்.

Kofler bench

பின்வருவனவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=உருகுநிலை&oldid=775141" இலிருந்து மீள்விக்கப்பட்டது