"பெருவிழுங்கி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி (Quick-adding category "குருதி" (using HotCat))
 
=== தின்குழியமை (Phagocytosis)===
'''[[தின்குழியமை]]''' என்பது விழுங்கி அழிக்கும் செயல்முறையைக் குறிக்கும். பெருவிழுங்கியின் முக்கியமான தொழில்களில் ஒன்று [[நுரையீரல்|நுரையீரலில்]] முதிர்ச்சியடையாமலே புறக்காரணிகளால் இறந்து போகும் கலங்களை (necrotic cells) 'விழுங்கி அழித்தல்' மூலம் அகற்றுதல் ஆகும். நீடித்த [[அழற்சி]] நிலைகளில், இவ்வாறு இறந்த கலங்கள் அகற்றப்படுவது அவசியமாகும். பழுதுபட்ட கலங்கள், சிதைந்த கலங்களை, இப்படியான விழுங்கும் செயல்முறை மூலம், அகற்றும் தொழிலைச் செய்கின்றன. இவ்வாறான இறந்த கலங்கள் அகற்றும் தொழிலைச் செய்யும் பெருவிழுங்கிகள் பொதுவாக நிலையானவையாகும். அதாவது நுரையீரல், [[கல்லீரல்]], [[நரம்பிழையம்]], [[எலும்பு]], [[மண்ணீரல்]], வேறு [[இணைப்பிழையம்]] போன்ற [[உடல் உறுப்புக்கள்|உறுப்புக்களில்]] நிலையாக இருந்து நோய்க்காரணி போன்ற வெளிப் பொருட்களை அழிப்பதுடன், தேவையேற்படின் புதிய பெருவிழுங்கிகளையும் உருவாக்கும்.<br /><br />
 
பெருவிழுங்கியானது நோய்க்காரணிகளை உள்ளெடுக்கும்போது '''தின்குழியவுடல்''' (phagosome) உருவாகும். பின்னர் இது [['''பிரியுடல்|பிரியுடலுடன்''']] (இலைசோசோம் = Lysosome) இணைந்து '''தின்குழியப்பிரியுடல்''' (phagolysosome) உருவாகும். இந்த தின்குழியப்பிரியுடலில் சுரக்கப்படும் [[நொதியம்|நொதியங்கள்]], வேறு [[நச்சுப்பொருள்|நச்சுப்பொருட்கள்]] போன்றவற்றால், நோய்க்காரணி [[சமிபாடு|சமிபாட்டுக்கு]] உட்படுத்தப்பட்டு அழிக்கப்படும். ஆனாலும் [[காசநோய்|காசநோயை]] உருவாக்கும் ''Mycobacterium tuberculosis'' போன்ற சில [[பாக்டீரியா]]க்கள் இவ்வகையான அழிக்கும் முறைக்கு [[எதிர்ப்பாற்றல்|எதிர்ப்பாற்றலைப்]] (resistant) பெற்றுள்ளன. ஒரு பெருவிழுங்கியானது தன் வாழ்க்கைக் காலத்தில் கிட்டத்தட்ட 100 பாக்டீரியாக்களை இவ்வாறு விழுங்கி அழிக்கக் கூடியது. தொழிற்பாடு ஓய்ந்ததும், தனது சொந்த நொதியங்களின் தாக்கத்தாலேயே பெருவிழுங்கி இறந்து அழியும்.
23,457

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/768636" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி