பரப்புக் கவர்ச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 44: வரிசை 44:


==இதனையும் பார்க்க==
==இதனையும் பார்க்க==
#[[பரப்பு விடுகை]]
*[[பரப்பு விடுகை]]


==உசாத்துணை==
==உசாத்துணை==

17:24, 4 மே 2011 இல் நிலவும் திருத்தம்

புருனாயெர், எம்மெட், டெல்லரினின் பல்லடுக்குப் பரப்புக் கவர்ச்சியின் மாதிரி. இது திண்மப் பரப்பின் மீதான மூலக்கூறுகளின் சமவாய்ப்புப் பரவலைக் காட்டுகிறது.

பரப்புக் கவர்ச்சி (Adsorption) என்பது ஒரு புறப்பரப்புப் பண்பாகும். கரைசல்களின் புரப்பரப்பில் இப்பண்பு காணப்படுகிறது. ஒரு திரவம் அல்லது திண்மத்தின் பரப்பின் மீது ஒரு சேர்மத்தின் செறிவு அதிகரிப்பதே பரப்புக் கவர்ச்சி (Adsorption) ஆகும். மேலும் இதனை அணுக்கள், அயனிகள், இரட்டை மூலக்கூறுகள் அல்லது வாயு மூலக்கூறுகள், திரவம், கரைந்த திண்மங்கள் ஆகியவை ஒரு பரப்பின் மீது ஒட்டிக் கொள்ளும் பண்பு என்றும் கூறலாம். இரண்டு நிலைமைகள் சந்திக்கும் எல்லையில் ஒரு சேர்மத்தின் செறிவு இரண்டு நிலைமைகளிலும் உள்ளதை விட அதிகமாக இருக்குமானால் அச்சேர்மம் பரப்பினால் கவரப்பட்டுள்ளது எனலாம். இப்பண்பையும் பரப்புக் கவர்ச்சி எனலாம்.

வாயுவையோ ஆவியையோ கரைசலிலுள்ள கரைபொருளையோ எடுத்துக் கொள்ளும் திண்மம் பரப்புக் கவரும் பொருள் (Adsorbent) என்றும் திண்மத்தின் புறப்பரப்பில் படிந்துள்ள வாயு அல்லது கரைபொருள் பரப்புக் கவரப்பட்ட பொருள் (Adsorbate) என்று அழைக்கப்படும்.

பரப்புக் கவர்ச்சி இரு வகைப் படும். அவை இயல்பு பரப்புக் கவர்ச்சி மற்றும் வேதிப் பரப்புக் கவர்ச்சி இயல்பு பரப்பு கவர்ச்சி என்பது பிணைப்பு அற்றது மற்றும் வலுவற்றது. வேதி பரப்புக் கவர்ச்சி என்பது பிணைப்புகொண்டது மற்றும் வலுவுடையது.

இதனையும் பார்க்க

உசாத்துணை

  1. தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரப்புக்_கவர்ச்சி&oldid=757692" இலிருந்து மீள்விக்கப்பட்டது