நுண்ணுறுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19: வரிசை 19:
|[[கொல்கிச் சிக்கல்]]||புரதத்தைப் பொதியிட்டு வகைப்படுத்தல்||ஒற்றை மென்சவ்வு||அனைத்து மெய்க்கருவுயிரிகள் ||<!-- cis-face (convex) nearest to rough endoplasmic reticulum; trans-face (concave) farthest from rough endoplasmic reticulum -->
|[[கொல்கிச் சிக்கல்]]||புரதத்தைப் பொதியிட்டு வகைப்படுத்தல்||ஒற்றை மென்சவ்வு||அனைத்து மெய்க்கருவுயிரிகள் ||<!-- cis-face (convex) nearest to rough endoplasmic reticulum; trans-face (concave) farthest from rough endoplasmic reticulum -->
|-
|-
|[[இழைமணி]]| அடினோசின் மூப்பொசுபேற்றுக்கள் உருவாக்கம் மூலம் உயிரணுவிற்குச் சக்தியை வழங்கல்||இரட்டை மென்சவ்வு||பெரும்பாலான மெய்க்கருவுயிரிகள் ||டி.என்.ஏ கொண்டுள்ளது; பண்டைய மெய்க்கருவுயிரிக் கலங்களால் விழுங்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது ([[ஒன்றிய வாழ்வு|அக ஒன்றியவாழ்வு]])
|[[இழைமணி]]|| அடினோசின் மூப்பொசுபேற்றுக்கள் உருவாக்கம் மூலம் உயிரணுவிற்குச் சக்தியை வழங்கல்||இரட்டை மென்சவ்வு||பெரும்பாலான மெய்க்கருவுயிரிகள் ||டி.என்.ஏ கொண்டுள்ளது; பண்டைய மெய்க்கருவுயிரிக் கலங்களால் விழுங்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது ([[ஒன்றிய வாழ்வு|அக ஒன்றியவாழ்வு]])
|-
|-
|[[புன்வெற்றிடம்]]||சேமிப்பு, கழிவகற்றல், உயிரணுச் சமநிலையைப் பேணுதல்||ஒற்றை மென்சவ்வு||மெய்க்கருவுயிரிகள் ||
|[[புன்வெற்றிடம்]]||சேமிப்பு, கழிவகற்றல், உயிரணுச் சமநிலையைப் பேணுதல்||ஒற்றை மென்சவ்வு||மெய்க்கருவுயிரிகள் ||

12:56, 1 மே 2011 இல் நிலவும் திருத்தம்

நுண் உறுப்புகள் அல்லது உயிரணுவின் உள்ளுறுப்புகள் (organelle) (இலங்கை வழக்கு: புன்னங்கங்கள்) என்பவை ஒரு உயிரணுவின் உட்புறத்தே காணப்படும் பல முக்கியமான தொழில்களைப் புரியும் நுண்ணிய அமைப்பைக் கொண்ட உறுப்புகள் ஆகும், பொதுவாக இவை ஒவ்வொன்றும் கொழுப்பினால் ஆக்கப்பட்டுள்ள மென்சவ்வைக் கொண்டுள்ளன.

மெய்க்கருவுயிரிகளின் உயிரணுக்கள் நுண்ணுறுப்புகளைக் கொண்டுள்ளன. நிலைக்கருவிலிகளிடம் இவை இல்லை என முன்னர் கருதப்பட்டாலும், தற்போது உண்டு என ஆராயப்பட்டுள்ளது.[1] நுண்ணுறுப்புகள் அனைத்தும் நுண்நோக்கி கொண்டே அவதானிக்க முடியும். ஒரு உயிரணுவின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான நுண்ணுறுப்பு அதன் கரு ஆகும்.

மெய்க்கருவுயிரிகளின் நுண்ணுறுப்புகள்

இவை கொழுப்பினாலான மென்சவ்வைக் கொண்டுள்ளன. கரு, புன்வெற்றிடம் போன்ற தோற்றத்தில் பெரிய நுண்ணுறுப்புகள் ஒளி நுண்ணோக்கியின் உதவியுடன் இலகுவில் அவதானிக்கலாம். அனைத்து நுண்ணுறுப்புகளும் அனைத்து மெய்க்கருவுயிரிகளில் காணப்படுவதில்லை, ஒரு சில மெய்க்கருவுயிரிகளில் உள்ள நுண்ணுறுப்பு வேறு சிலவற்றில் இல்லாமல் இருக்கக்கூடும். நுண்ணுறுப்புகளைச் சூழப்பட்டிருக்கும் மென்சவ்வு ஒன்று தொடக்கம் மூன்று வரையான படலத்தைக் கொண்டிருக்கலாம், இது நுண்ணுறுப்புகளைப் பொறுத்து மாறுபடுகின்றது.

பெரிய நுண்ணுறுப்புகள்

மெய்க்கருவுயிரிகளின் பெரிய நுண்ணுறுப்புகள்
நுண்ணுறுப்பு பிரதான தொழில் அமைப்பு உயிரினம் குறிப்பு
பச்சையவுருமணி ஒளித்தொகுப்பு, சூரிய ஒளியில் இருந்து சக்தியைப் பெறல் இரட்டை மென்சவ்வு தாவரம், அதிநுண்ணுயிரிகள் சில மரபணுக்களைக் கொண்டது; பண்டைய மெய்க்கருவுயிரிக் கலங்களால் விழுங்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது (அக ஒன்றியவாழ்வு)
அகக்கலவுருச் சிறுவலை புதிய புரதங்களின் குறிபெயர்ப்பிலும் மடிப்பிலும் (அழுத்தமற்ற அகக்கலவுருச் சிறுவலை), கொழுப்பு உருவாக்கத்திலும் ( அழுத்தமான அகக்கலவுருச் சிறுவலை) ஒற்றை மென்சவ்வு அனைத்து மெய்க்கருவுயிரிகள் அழுத்தமற்ற அகக்கலவுருச் சிறுவலை இரைபோசொம்களை கொண்டுள்ளது.
கொல்கிச் சிக்கல் புரதத்தைப் பொதியிட்டு வகைப்படுத்தல் ஒற்றை மென்சவ்வு அனைத்து மெய்க்கருவுயிரிகள்
இழைமணி அடினோசின் மூப்பொசுபேற்றுக்கள் உருவாக்கம் மூலம் உயிரணுவிற்குச் சக்தியை வழங்கல் இரட்டை மென்சவ்வு பெரும்பாலான மெய்க்கருவுயிரிகள் டி.என்.ஏ கொண்டுள்ளது; பண்டைய மெய்க்கருவுயிரிக் கலங்களால் விழுங்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது (அக ஒன்றியவாழ்வு)
புன்வெற்றிடம் சேமிப்பு, கழிவகற்றல், உயிரணுச் சமநிலையைப் பேணுதல் ஒற்றை மென்சவ்வு மெய்க்கருவுயிரிகள்
கரு டி.என்.ஏ மூலம் மரபுத் தகவலைப் பேணுதல், உயிரணுவின் அனைத்து தொழிற்பாட்டையும் கட்டுப்படுத்தல், புரதத்தொகுப்பு இரட்டை மென்சவ்வு அனைத்து மெய்க்கருவுயிரிகள் மரபணு அலகுகள் கொண்டுள்ளவை

மேற்கோள்கள்

  1. Kerfeld, Ca; Sawaya, Mr; Tanaka, S; Nguyen, Cv; Phillips, M; Beeby, M; Yeates, To (August 2005). "Protein structures forming the shell of primitive bacterial organelles.". Science 309 (5736): 936–8. doi:10.1126/science.1113397. பப்மெட்:16081736. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நுண்ணுறுப்பு&oldid=755063" இலிருந்து மீள்விக்கப்பட்டது