நேச நாடுகளின் சிசிலியப் படையெடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 27: வரிசை 27:


==பின்புலம்==
==பின்புலம்==
மே 1943ல் [[வடக்கு ஆப்பிரிக்கப் போர்த்தொடர்|வடக்கு ஆப்பிரிக்கப் போர்த்தொடரில்]] நேச நாடுகள் முழுவெற்றி கண்டன. [[வடக்கு ஆப்பிரிக்கா]]விலிருந்து அச்சுப் படைகள் முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்டுவிட்டன. போரின் அடுத்த கட்டமாக [[இத்தாலி]] மீது படையெடுக்க நேச நாட்டு மேல்நிலை உத்தியாளர்கள் முடிவு செய்தனர். [[பாசிச]] சர்வாதிகாரி [[முசோலினி]]யின் ஆட்சியின் கீழிலிருந்த இத்தாலி [[அச்சு நாடுகள்|அச்சு நாட்டு]]க் கூட்டணியில் [[இட்லர்|இட்லரின்]] [[நாசி ஜெர்மனி]]க்கு அடுத்த முக்கிய அங்க நாடாக இருந்தது. இத்தாலியைக் கைப்பற்றுவது அச்சுக் கூட்டணியை வெகுவாக பலவீனப்படுத்துவதுடன், பரப்புரையளவில் மிகப்பெரும் வெற்றியாக அமையும் என அவர்கள் கருதினர். இதற்கான திட்டமிடல் வடக்கு ஆப்பிரிக்கப் போர்த்டொடர் முடியுமுன்னரே ஜனவரி 1943ல் [[கேசாபிளாங்கா மாநாடு|கேசாபிளாங்கா மாநாட்டில்]] தொடங்கி விட்டது.

இத்தாலி மீதான படையெடுப்பின் முதல் கட்டமாக, அதன் தெற்கில் உள்ள சிசிலி தீவினைக் கைப்பற்ற முடிவு செய்யப்பட்டது. சிசிலியின் வீழ்ச்சி நடுநிலக் கடலில் நேச நாட்டு சரக்குக்கப்பல் போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக விளங்கிய அச்சு வான்படை மற்றும் கடற்படைப் பிரிவுகளை செயலிழக்கச் செய்யும் என்பது நெச நாட்டு உத்தியாளர்களின் கணிப்பு. சிசிலி மீதான தாக்குதலால், ஜெர்மானிய மற்றும் இத்தாலியப் படைப்பிரிவுகளை வேறு களங்களிலிருந்து திசை திருப்ப இயலும், சிசிலி கைப்பற்றப்பட்டால், படையெடுப்பு அச்சுறுத்தலைக் கொண்டே இத்தாலியை அச்சுக் கூட்டணியிலிருந்து பிரித்து விடலாம் என அவர்கள் கருதினர். இக்காரணங்களால் சிசிலி, இத்தாலியப் படையெடுப்பின் முதல் கட்ட இலக்காகியது. சிசிலியைத் தாக்க உருவாக்கப்பட்ட நேச நாட்டு பயணப்படைக்கு (''expeditionary force'') அமெரிக்க தளபதி [[டுவைட் டி. ஐசனாவர்]] முதன்மைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். துணை தளபதியாக பிரித்தானிய ஜெனரல் ஹரால்ட் அலெக்சாந்தர், கடற்படைப் பிரிவுகளின் தளபதியாக ஆண்ட்ரூ கன்னிங்காம் வான்படை தளபதியாக ஆர்த்தார் டெட்டர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

கடல்வழியாக சிசிலியின் இரு இடங்களில் தாக்க திட்டம் வகுக்கப்பட்டது. அத்திட்டத்தின்படி அமெரிக்க 7வது [[ஆர்மி (படைப்பிரிவு)|ஆர்மி]] சிசிலியின் தென் மத்தியப் பகுதியிலும், பிரித்தானிய 8வது [[ஆர்மி (படைப்பிரிவு)|ஆர்மி]] தென் கிழக்குப் பகுதியிலும் கடல்வழியாகத் தரையிறங்குவதாக இருந்தது. இவ்விரண்டு ஆர்மிகளும் முறையே மேற்கு மற்றும் கிழக்கு [[குறிக்கோள் படைப்பிரிவு]]கள் (task force) என்று பெயரிடப்பட்டிருந்தன. இவ்விரு படைப்பிரிவுகளுக்கு உதவியாக [[வான்குடை]] வீரர்கள் வான்வழியாகத் தரையிறங்கி முக்கியப் பாலங்களையும் மேடான பகுதிகளையும் கைப்பற்ற திட்டமிடப்பட்டது. பிரித்தானிய 1வது வான்குடை [[டிவிசன்|டிவிசனுக்கு]] இப்பொறுப்பு தரப்பட்டது. தரைப்படைகளுக்குத் துணையாக பிரித்தானிய நடுநிலக்கடல் கடற்படைப்பிரிவும், அமெரிக்க 8வது கடற்படைப் பிரிவுக் இத்தாக்குதலில் பங்கேற்றன. இதில் பங்கேற்ற வான்படைப் பிரிவுகளை ஒருங்கிணைக்க ஏர் சீஃப் மார்சல் ஆர்த்தர் டெட்டரின் தலைமையில் நடுநிலக்கடல் வான் கட்டுப்பாட்டகம் உருவாக்கப்பட்டது.

நேச நாட்டு படையெடுப்பை எதிர்கொள்ள சிசிலியில் 6வது இத்தாலிய ஆர்மி நிறுத்தப்பட்டிருந்தது. சுமார் 2,00,000 படைவீரர்களைக் கொண்ட இதைத் தவிர ஜெர்மனியின் [[ஹெர்மன் கோரிங்|எர்மன் கோரிங்]] டிவிசன் மற்றும் 15வது பான்சர்கிரெனேடியர் டிவிசன் ஆகியவையும் சிசிலியில் இருந்தன. மொத்தம் சுமார் 32,000 ஜெர்மானியப் படைவீரர்கள் சிசிலியில் நிறுத்தப்பட்டிருந்தனர். இவை தவிர ஜெர்மானிய வான்படை [[லுஃப்ட்வாஃபே]]வின் வீரர்கள் சுமார் 30,000 பேர்களும் இருந்தனர். ஜூலை 1943ல் மேலும் இரு ஜெர்மானிய டிவிசன்கள் (1வது வான்குடை மற்றும் 29வது பான்சர் கிரேனேடியர்) சிசிலிக்கு அனுப்பப்பட்டன. ஆரம்பத்தில் சிசிலியிலிருந்த அச்சுப் படைகள் முழுவதும் இத்தாலிய ஜெனரல் ஆல்ஃபிரேடோ குசோனியின் தலைமையின் கீழ் செயல்பட்டன. ஆனால் ஜெர்மானியத் தளபதிகளுக்கு இத்தாலியர்களின் பொர்த்திறமை மற்றும் த்லைமைப் பண்பு குறித்து நல்ல மதிப்பீடு இல்லையென்பதால், அவை தன்னிச்சையாகவே செயல்பட்டன. படையெடுப்பு தொடங்கி சில வாரங்களில் சிசிலியப் போர்முனையில் அனைத்து அச்சு படைகளும் ஜெர்மானியக் கட்டுப்பாட்டில் வந்துவிட்டன. சிசிலியில் உள்ள ஜெர்மானியப் படைப்பிரிவுகள் ஜெர்மானிய தெற்குத் தரைப்படைத் தலைமையகத்தின் முதன்மைத் தளபதி [[ஃபீல்டு மார்சல்]] [[ஆல்பர்ட் கெஸ்சல்ரிங்]]கின் மேற்பார்வையில் இருந்தன.

==சண்டையின் போக்கு==
==சண்டையின் போக்கு==
===தரையிறக்கம்===
===தரையிறக்கம்===

06:15, 25 ஏப்பிரல் 2011 இல் நிலவும் திருத்தம்

சிசிலியப் படையெடுப்பு
இத்தாலியப் போர்த்தொடரின் பகுதி பகுதி

The U.S. Liberty ship Robert Rowan explodes after being hit by a German bomber off Gela, Sicily, 11 July 1943
நாள் 9 July – 17 August 1943
இடம் Sicily, Italy
Allied victory
பிரிவினர்
Allies:
 ஐக்கிய இராச்சியம்
 ஐக்கிய அமெரிக்கா
 கனடா
 சுதந்திர பிரான்ஸ்
Axis:
 இத்தாலி
 ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய அமெரிக்கா Dwight D. Eisenhower
ஐக்கிய இராச்சியம் Harold Alexander
ஐக்கிய இராச்சியம் Bernard Montgomery
ஐக்கிய இராச்சியம் Arthur Tedder
ஐக்கிய அமெரிக்கா George S. Patton
நாட்சி ஜெர்மனி Albert Kesselring
இத்தாலி இராச்சியம் Alfredo Guzzoni
நாட்சி ஜெர்மனி Fridolin von Senger und Etterlin
பலம்
160,000 personnel
14,000 vehicles
600 tanks
1,800 guns
230,000 Italian personnel
40,000 German personnel[1]
260 Tanks
1,400 aircraft [2]
இழப்புகள்
ஐக்கிய அமெரிக்காஐக்கிய இராச்சியம்கனடா
22,000 casualties[nb 1]
நாட்சி ஜெர்மனி Germany:
10,000 casualties
இத்தாலி இராச்சியம் Italy:
132,000 casualties (mainly POWs)[nb 2]

நேச நாடுகளின் சிசிலியப் படையெடுப்பு (Allied invasion of Sicily) என்பது இரண்டாம் உலகப் போரின் போது நடைபெற்ற ஒரு பெரும் படையெடுப்பு. ஹஸ்கி நடவடிக்கை (Operation Husky) என்று குறிப்பெயரிடப்பட்ட இதில் நேச நாட்டுப் படைகள் பாசிச இத்தாலியின் ஒரு பகுதியான சிசிலி தீவின் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றின. இது இத்தாலியப் போர்த்தொடரின் ஒரு பகுதியான இது சிசிலியப் போர்த்தொடர் (Sicilian Campaign) என்றும் அழைக்கப்படுகிறது.

வான்வழியாகவும் கடல்வழியாகவும் ஜூலை 7, 1943ல் சிசிலியில் தரையிறங்கிய நேச நாட்டுப் படைகள், ஆறு வாரகால கடும் சண்டைக்குப் பின்னர் சிசிலித் தீவினை முழுதும் கைப்பற்றினர். ஆகஸ்ட் 17 அன்று சிசிலியில் இருந்த அச்சுப் படைகள் அனைத்தும் அத்தீவினைக் காலி செய்துவிட்டு இத்தாலிக்கு பின்வாங்கிவிட்டன. சிசிலியின் வீழ்ச்சியால், நடுநிலக்கடலின் கடல் வழிகள் அனைத்தும் நேச நாட்டுப் படைகளின் வசமாயின. சிசிலி அடுத்து நிகழ்ந்த இத்தாலியப் படையெடுப்புக்கு தளமாகப் பயன்பட்டது.

பின்புலம்

மே 1943ல் வடக்கு ஆப்பிரிக்கப் போர்த்தொடரில் நேச நாடுகள் முழுவெற்றி கண்டன. வடக்கு ஆப்பிரிக்காவிலிருந்து அச்சுப் படைகள் முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்டுவிட்டன. போரின் அடுத்த கட்டமாக இத்தாலி மீது படையெடுக்க நேச நாட்டு மேல்நிலை உத்தியாளர்கள் முடிவு செய்தனர். பாசிச சர்வாதிகாரி முசோலினியின் ஆட்சியின் கீழிலிருந்த இத்தாலி அச்சு நாட்டுக் கூட்டணியில் இட்லரின் நாசி ஜெர்மனிக்கு அடுத்த முக்கிய அங்க நாடாக இருந்தது. இத்தாலியைக் கைப்பற்றுவது அச்சுக் கூட்டணியை வெகுவாக பலவீனப்படுத்துவதுடன், பரப்புரையளவில் மிகப்பெரும் வெற்றியாக அமையும் என அவர்கள் கருதினர். இதற்கான திட்டமிடல் வடக்கு ஆப்பிரிக்கப் போர்த்டொடர் முடியுமுன்னரே ஜனவரி 1943ல் கேசாபிளாங்கா மாநாட்டில் தொடங்கி விட்டது.

இத்தாலி மீதான படையெடுப்பின் முதல் கட்டமாக, அதன் தெற்கில் உள்ள சிசிலி தீவினைக் கைப்பற்ற முடிவு செய்யப்பட்டது. சிசிலியின் வீழ்ச்சி நடுநிலக் கடலில் நேச நாட்டு சரக்குக்கப்பல் போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக விளங்கிய அச்சு வான்படை மற்றும் கடற்படைப் பிரிவுகளை செயலிழக்கச் செய்யும் என்பது நெச நாட்டு உத்தியாளர்களின் கணிப்பு. சிசிலி மீதான தாக்குதலால், ஜெர்மானிய மற்றும் இத்தாலியப் படைப்பிரிவுகளை வேறு களங்களிலிருந்து திசை திருப்ப இயலும், சிசிலி கைப்பற்றப்பட்டால், படையெடுப்பு அச்சுறுத்தலைக் கொண்டே இத்தாலியை அச்சுக் கூட்டணியிலிருந்து பிரித்து விடலாம் என அவர்கள் கருதினர். இக்காரணங்களால் சிசிலி, இத்தாலியப் படையெடுப்பின் முதல் கட்ட இலக்காகியது. சிசிலியைத் தாக்க உருவாக்கப்பட்ட நேச நாட்டு பயணப்படைக்கு (expeditionary force) அமெரிக்க தளபதி டுவைட் டி. ஐசனாவர் முதன்மைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். துணை தளபதியாக பிரித்தானிய ஜெனரல் ஹரால்ட் அலெக்சாந்தர், கடற்படைப் பிரிவுகளின் தளபதியாக ஆண்ட்ரூ கன்னிங்காம் வான்படை தளபதியாக ஆர்த்தார் டெட்டர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

கடல்வழியாக சிசிலியின் இரு இடங்களில் தாக்க திட்டம் வகுக்கப்பட்டது. அத்திட்டத்தின்படி அமெரிக்க 7வது ஆர்மி சிசிலியின் தென் மத்தியப் பகுதியிலும், பிரித்தானிய 8வது ஆர்மி தென் கிழக்குப் பகுதியிலும் கடல்வழியாகத் தரையிறங்குவதாக இருந்தது. இவ்விரண்டு ஆர்மிகளும் முறையே மேற்கு மற்றும் கிழக்கு குறிக்கோள் படைப்பிரிவுகள் (task force) என்று பெயரிடப்பட்டிருந்தன. இவ்விரு படைப்பிரிவுகளுக்கு உதவியாக வான்குடை வீரர்கள் வான்வழியாகத் தரையிறங்கி முக்கியப் பாலங்களையும் மேடான பகுதிகளையும் கைப்பற்ற திட்டமிடப்பட்டது. பிரித்தானிய 1வது வான்குடை டிவிசனுக்கு இப்பொறுப்பு தரப்பட்டது. தரைப்படைகளுக்குத் துணையாக பிரித்தானிய நடுநிலக்கடல் கடற்படைப்பிரிவும், அமெரிக்க 8வது கடற்படைப் பிரிவுக் இத்தாக்குதலில் பங்கேற்றன. இதில் பங்கேற்ற வான்படைப் பிரிவுகளை ஒருங்கிணைக்க ஏர் சீஃப் மார்சல் ஆர்த்தர் டெட்டரின் தலைமையில் நடுநிலக்கடல் வான் கட்டுப்பாட்டகம் உருவாக்கப்பட்டது.

நேச நாட்டு படையெடுப்பை எதிர்கொள்ள சிசிலியில் 6வது இத்தாலிய ஆர்மி நிறுத்தப்பட்டிருந்தது. சுமார் 2,00,000 படைவீரர்களைக் கொண்ட இதைத் தவிர ஜெர்மனியின் எர்மன் கோரிங் டிவிசன் மற்றும் 15வது பான்சர்கிரெனேடியர் டிவிசன் ஆகியவையும் சிசிலியில் இருந்தன. மொத்தம் சுமார் 32,000 ஜெர்மானியப் படைவீரர்கள் சிசிலியில் நிறுத்தப்பட்டிருந்தனர். இவை தவிர ஜெர்மானிய வான்படை லுஃப்ட்வாஃபேவின் வீரர்கள் சுமார் 30,000 பேர்களும் இருந்தனர். ஜூலை 1943ல் மேலும் இரு ஜெர்மானிய டிவிசன்கள் (1வது வான்குடை மற்றும் 29வது பான்சர் கிரேனேடியர்) சிசிலிக்கு அனுப்பப்பட்டன. ஆரம்பத்தில் சிசிலியிலிருந்த அச்சுப் படைகள் முழுவதும் இத்தாலிய ஜெனரல் ஆல்ஃபிரேடோ குசோனியின் தலைமையின் கீழ் செயல்பட்டன. ஆனால் ஜெர்மானியத் தளபதிகளுக்கு இத்தாலியர்களின் பொர்த்திறமை மற்றும் த்லைமைப் பண்பு குறித்து நல்ல மதிப்பீடு இல்லையென்பதால், அவை தன்னிச்சையாகவே செயல்பட்டன. படையெடுப்பு தொடங்கி சில வாரங்களில் சிசிலியப் போர்முனையில் அனைத்து அச்சு படைகளும் ஜெர்மானியக் கட்டுப்பாட்டில் வந்துவிட்டன. சிசிலியில் உள்ள ஜெர்மானியப் படைப்பிரிவுகள் ஜெர்மானிய தெற்குத் தரைப்படைத் தலைமையகத்தின் முதன்மைத் தளபதி ஃபீல்டு மார்சல் ஆல்பர்ட் கெஸ்சல்ரிங்கின் மேற்பார்வையில் இருந்தன.

சண்டையின் போக்கு

தரையிறக்கம்

கடற்கரை முகப்புகளிலிருந்து முன்னேற்றம்

எட்னா மோதல்கள்

அச்சு பின்வாங்கல்

தாக்கம்

குறிப்புகள்

  1. The U.S. and British forces had suffered 7,000 fatalities and 15,000 men had been wounded.[3]
  2. Around 10,000 Germans had been killed, wounded or captured during the campaign. The Italians had lost 132,000 men, mainly prisoners.[3]

மேற்கோள்கள்

  1. Shaw, p. 119.
  2. Dickson(2001) pg. 201
  3. 3.0 3.1 Shaw, p. 120.

நூல்கள்