இருசொற் பெயரீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Quick-adding category "பெயரிடல் மரபு" (using HotCat)
வரிசை 18: வரிசை 18:


[[பகுப்பு:உயிரியல்]]
[[பகுப்பு:உயிரியல்]]
[[பகுப்பு:பெயரிடல் மரபு]]


[[af:Binomiale naam]]
[[af:Binomiale naam]]

03:30, 15 ஏப்பிரல் 2011 இல் நிலவும் திருத்தம்

கரோலஸ் லின்னேயஸ்

உயிரியலில் இருசொற் பெயரீடு எவ்வாறு உயிரினங்களில் இனங்கள் பெயரிடப்படுகின்றன என்பதை வரையறுக்கிறது. பெயரில் விளங்குவது போன்று ஒவ்வொரு இனமும் இரு சொற்களால் பெயரிடப்படுகின்றன: முதல் சொல் குடும்பத்தினையும் இரண்டாம் சொல் குறிப்பிட்ட இனத்தையும் குறிக்கின்றன. இவை இலத்தீன் மொழிச்சொற்களாக இருப்பதால் இலத்தீன் பெயர் எனவும் அறிவியல் பெயர் எனவும் அறியப்படுகின்றன. எடுத்துக்காட்டாக மனித இனம் ஹோமோ சாபியன்ஸ் (Homo sapiens) என அறியப்படுகிறது. இதில் முதற்சொல் ஹோமோ நாம் சார்ந்திருக்கும் குடும்பத்தையும் இரண்டாம் சொல் நமது இனத்தையும் குறிக்கின்றன. இலத்தீனில் எழுதும்போது முதற்சொல்லின் முதலெழுத்து மேலெழுத்தாக இருக்க வேண்டும்; இரண்டாம் சொல்லின் முதலெழுத்து, அது பெயர்ச்சொல்லாக இருப்பினும் மேலெழுத்தாக எழுதப்படக் கூடாது.

இம்முறையை சுவீடன் நாட்டைச் சேர்ந்த தாவரவியலாளர் மற்றும் மருத்துவர் கரோலஸ் லின்னேயஸ் (17071778) என்பவர் உருவாக்கினார். இம்முறையின் பயனாக அனைத்து உலக உயிரினங்களையும் இரு சொற்கள் கொண்டு எளிதாக அடையாளப்படுத்தலாம். தவிர உலகெங்கும் ஒரே சொற்களாக, நாடு, [[நேரம்], மொழி கடந்து பயன்படுத்தப்படுவதால் பல்வேறு நாட்டினரும் குறிப்புகளை பகிர்ந்து கொள்வது எளிதாகிறது.

பயன்படுத்தும் விதிகள்

இம்முறையை பயன்படுத்த பல்வேறு விதிமுறைகள் உள்ளன; பல புத்தகங்கள் எவ்வாறு இச்சொற்கள் அமைக்கப்பட வேண்டும் என விளக்குகின்றன. அவற்றில் சில:

  • இவை சாய்வெழுத்துகளில் அச்சிடப்பட வேண்டும் Homo sapiens; கையில் எழுதினால் அடிக்கோடிடப்பட்டிருக்க வேண்டும்.
  • இலத்தீனில் எழுதும்போது முதற்சொல்லின் முதலெழுத்து மேலெழுத்தாக இருக்க வேண்டும்; இரண்டாம் சொல்லின் முதலெழுத்து அது பெயர்ச்சொல்லாக இருப்பினும் மேலெழுத்தாக எழுதப்படாது.
  • அறிவியல் புத்தகங்களில் இப்பெயருக்கு அடுத்து இவ்வினத்தை கண்டவரின் கடைசி பெயர் குறிப்பிடல் வேண்டும். எடுத்துக்காட்டாக, Amaranthus retroflexus L. அல்லது Passer domesticus (Linnaeus, 1758)
  • பொதுப்பெயருடன் பாவிக்கும்போது, அறிவியல் பெயர் அடைப்புக்குறிகளுக்குள் பின்வர வேண்டும்: "வீட்டுக் குருவி (Passer domesticus)

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இருசொற்_பெயரீடு&oldid=743055" இலிருந்து மீள்விக்கப்பட்டது