அரக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Quick-adding category "இந்து சமயம்" (using HotCat)
வரிசை 5: வரிசை 5:


[[பகுப்பு:தொன்மவியல்]]
[[பகுப்பு:தொன்மவியல்]]
[[பகுப்பு:இந்து சமயம்]]


[[bg:Ракшаса]]
[[bg:Ракшаса]]

08:36, 2 ஏப்பிரல் 2011 இல் நிலவும் திருத்தம்

ஒரு அரக்க உருவகம்

அரக்கர் அல்லது அசுரர் அல்லது ராட்சதர் என்பவர் இந்திய தொன்ம கதைகளில் வரும் ஒரு கற்பனை இனத்தவர். இந்து மற்றும் புத்த சமய இலக்கியங்களில் தேவர்களின் எதிரிகளாகவும் தீய சக்தியினராகவும் மனித மாமிசம் உண்பவராகவும் சித்தரிக்கப்படுகின்றனர். அரக்கன் எனும் சொல்லாடல் இராமாயணத்தில் காணப்படுகின்றது - இலங்கையின் மன்னனான இராவணனையும் அரக்கன் என்று அழைக்கப்படுகிறான். கும்பகர்ணன், விபீடணன் ஆகியோர் ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிற அரக்கர்கள். மகாபாரதத்தில் இடும்பன், கடோட்கஜன், பகாசுரன் போன்ற அரக்கர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். புத்த சமய இலக்கியங்களிலும் மாறன், இராவணன் போன்ற அரக்கர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன.

இந்திய இதிகாசங்களில் ஒரு இனத்தினரை அல்லது ஒரு மரபினரை தாழ்வானப் பார்வையுடன் சித்தரிப்பதற்கு பயன்படுத்தப் பட்ட ஒரு சொல்லாடலாக மட்டுமே "அரக்கன்" எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. "அரக்கன்" எனும் சொல் குறிப்பாக தென்னிந்திய மற்றும் பழங்கால இலங்கை மக்களான திராவிட மரபினரை, வடயிந்திய ஆரிய மரபினர் தாழ்வாக அழைக்க பயன்படுத்தப்பட்ட சொல் என்பது ஒரு சாரரின் கருத்தாகும். அரக்கன் எனும் சொல்லாடல், கிரேக்கரும் மற்றும் உரோமரும் ஐரோப்பிய நாடுகளை ஆக்கிரமிப்பு செய்து கைப்பற்ற முனைந்த வேளைகளில், அவர்களுக்கு பெரும் சவாலாக எதிர்த்து போரிட்ட பழங்குடி இனத்தவர்களை கெல்டிக் என்று காட்டுமிராண்டிகள் என இழிவாக அழைத்தைப் போன்றே வடயிந்தியரின் ஆக்கிரமிப்பின் போது அவர்களுக்கு பெரும் சவலாக எதிர்த்து போரிட்ட திராவிட பழங்குடியினர்களை "அரக்கர்" என தரம் தாழ்த்தி அழைத்துள்ளனர் என்றும் குற்றம் சாட்டப்டுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரக்கர்&oldid=733562" இலிருந்து மீள்விக்கப்பட்டது