புவி மணிநேரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: az:Yer saatı
சி r2.6.4) (தானியங்கிமாற்றல்: bg:Часът на Земята
வரிசை 19: வரிசை 19:
[[az:Yer saatı]]
[[az:Yer saatı]]
[[bat-smg:Žemes adīna]]
[[bat-smg:Žemes adīna]]
[[bg:Часът на земята]]
[[bg:Часът на Земята]]
[[bs:Sat za planetu Zemlju]]
[[bs:Sat za planetu Zemlju]]
[[cs:Hodina Země]]
[[cs:Hodina Země]]

19:23, 26 மார்ச்சு 2011 இல் நிலவும் திருத்தம்

புவி மணிக்கான சின்னம்
சிட்னி துறைமுகப் பாலம் மற்றும் ஓப்பரா மாளிகை ஆகியன 2007 புவி மணி அன்று இருளில் மூழ்கின.
படிமம்:EarthHourBanner-21032009900.PNG
Banner "Hãy tắt điện, bật tương lai cùng Giờ Trái Đất" (Let's turn OFF light, turn ON the future with the Earth Hour) at Hanoi, Vietnam

புவி மணி (Earth Hour) என்பது, வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் உள்ள மின் விளக்குகளையும், அவசியம் இல்லாத மின் கருவிகளையும் ஒரு மணி நேரம் நிறுத்தி விடுமாறு கோரும் ஒரு அனைத்துலக நிகழ்வாகும். உலக இயற்கை நிதியத்தின் சார்பில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமையன்று அனுசரிக்கப்படும் பூமி நேரம் என்ற நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது. அன்றைய தினம் ஒரு மணி நேரத்திற்கு (பிற்பகல் 8 மணிக்கும் 9 மணிக்கும் இடையிலான காலப்பகுதி) விளக்குகள் அனைத்தும் அணைக்கப்படவுள்ளது. இது மின் ஆற்றல் சேமிப்பை ஊக்குவிப்பதையும், கரிம வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது. ஒளிசார் மாசடைதலைக் குறைப்பதற்கும் இது உதவக்கூடும். 2008 ஆம் ஆண்டின் புவி மணி, ஐக்கிய அமெரிக்காவில் தேசிய இருள் வான் வாரத்தின் தொடக்கத்துடன் பொருந்தி வருகிறது. புவி தட்பவெப்ப மாற்றத்தின் விளைவை மக்களுக்கு உணர்த்தும் வகையில் விழிப்புணர்வுக்காக இந்த நிகழ்ச்சியை உலக இயற்கை நிதியம் நடத்தி வருகிறது. 2008ம் ஆண்டு உலகம் முழுவதும் 400 நகரங்களில் இந்த பூமி நேரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் 5 கோடி பேர் கலந்து கொண்டனர். உலகப் புகழ் பெற்ற சிட்னி ஓப்பரா மாளிகை , ரோம் நகரின் கொலீசியம், அன்டார்டிகாவின் ஸ்காட் நிலையம் ஆகியவற்றில் விளக்குகள் முழுமையாக அணைக்கப்பட்டன.

இந்நிகழ்வு ஆஸ்திரேலியாவின் உலகளாவிய இயற்கைக்கான நிதியத்தினால் தொடங்கப்பட்டது. முதலாவது புவி மணி நிகழ்வு 2007 மார்ச் 31 ஆம் தேதி 7:30 க்கும், 8:30 க்கும் இடையில், சிட்னியில் இடம்பெற்றது. 2.2 மில்லியன் மக்கள் பங்குபற்றிய இந்த முதல் நிகழ்வின்போது ஆஸ்திரேலியாவின் மின் நுகர்வு 2.1% - 10.2% அளவினால் குறைந்திருக்கும் எனக் கருதப்படுகிறது.

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
புவி மணி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புவி_மணிநேரம்&oldid=727808" இலிருந்து மீள்விக்கப்பட்டது