அமெரிக்கக் கால்பந்தாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.3) (தானியங்கிமாற்றல்: hi:अमेरिकन फ़ुटबॉल
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: sq:Futboll Amerikan
வரிசை 106: வரிசை 106:
[[sk:Americký futbal]]
[[sk:Americký futbal]]
[[sl:Ameriški nogomet]]
[[sl:Ameriški nogomet]]
[[sq:Futboll Amerikan]]
[[sr:Амерички фудбал]]
[[sr:Амерички фудбал]]
[[sv:Amerikansk fotboll]]
[[sv:Amerikansk fotboll]]

19:49, 16 மார்ச்சு 2011 இல் நிலவும் திருத்தம்

ஒரு என். எஃப். எல். அமெரிக்க காற்பந்து போட்டி

அமெரிக்கக் காற்பந்தாட்டம் உலகில் காற்பந்து வகைகளின் ஒரு வகை ஆகும். இந்த விளையாட்டு அமெரிக்காவில் மிக அதிகமாக விரும்பப்படும் விளையாட்டுகளில் ஒன்று. அமெரிக்காவில் என். எஃப். எல். உலகில் மிகப்பெரிய அமெரிக்கக் காற்பந்துச் சங்கங்கள் ஆகும். இது தவிர ஜப்பான், மெக்சிகோ, மற்றும் ஐரோப்பாவில் இந்த விளையாட்டு நடைபெறுகிறது.

வரலாறு

அமெரிக்கக் காற்பந்தாட்டமும் ரக்பியும் ஐக்கிய இராச்சியத்தில் 19ம் நூற்றாண்டில் இருந்த விளையாட்டுகளிலிருந்து பிறந்தது. இந்த விளையாட்டுகளின் சட்டங்களை வால்ட்டர் கேம்ப் மாற்றி அமெரிக்கக் காற்பந்தாட்டத்தை படைத்தார். வால்ட்டர் கேம்ப் இன்று "அமெரிக்கக் காற்பந்தாட்டத்தின் தந்தையார்" என்று அழைக்கப்பட்டவர். அமெரிக்கக் கல்லூரிகளில் விளையாடி இந்த விளையாட்டு புகழுக்கு வந்தது. இன்று வரை கல்லூரி காற்பந்தாட்டம் அமெரிக்காவில் மிக விரும்பப்பட்ட விளையாடுகளில் ஒன்றாகும். 1922ல் என். எஃப். எல். சங்கத்தை ஆரமித்து இன்று இந்த சங்கம் அமெரிக்காவில் நாலு மிகப்பெரிய தொழிலாக விளையாட்டுச் சங்கங்களில் (Four major professional sports leagues) ஒன்று ஆகும்.

ஆடுகளம்

அமெரிக்கக் காற்பந்து மைதானம். ஓர மண்டலங்களிலிருந்து யார்ட் அளவில் தூரத்தை எண்கள் காமிக்கிறது.

ஒரு அமெரிக்கக் காற்பந்து மைதானம் 360 அடி நீளம், 120 அடி அகலம் அளவு ஆகும். மைதானத்தின் ஓரங்களில் 30 அடி நீளத்தில் இரண்டு ஓர மண்டலங்கள் (End zones) அமைந்தன. ஓர மண்டலத்துக்கு பின் 18.5 அடி அளவில் பிரிந்து கோல் கம்பிகள் (Goal posts) அமைந்தன.

ஆட்டம்

11 ஆட்டக்காரர்கள் ஒரு அணியில் விளையாடவேண்டும். பொதுவாக ஒரு போட்டியில் நாலு 15-நிமிடம் பகுதிகள் இருக்கும். பந்தை தூக்கிண்டு ஓர மண்டலத்தில் போனால் 6 புள்ளிகள் பெறமுடியும்; இதுக்கு பெயர் "டச்டவுன்" (Touchdown). ஒரு டச்டவுன் பெற்றி கோல் கம்பிகளுக்கு நடுவில் பந்தை எட்டி உதைத்தால் ஒரு கொசறு புள்ளி (Extra point) பெறமுடியும். டச்டவுன் செய்யாமல் கோல் கம்பிகளுக்கு நடுவில் பந்தை எட்டி உதைத்தால் மூன்று புள்ளிகள் பெறமுடியும்; இதுக்கு பெயர் "ஃபீல்ட் கோல்" (Field goal).

ஒரு அணியின் பக்கம் பந்து இருக்கும்பொழுது ஒரு உடைமை (possession) என்று அறியப்படுவது. 10 யார்டுகள் முன் போகரத்துக்கு 4 சமயங்கள் இருக்கும்; இந்த சமயங்களை "டவுன்" (down) என்று அழைக்கப்பத்தது. 4 டவுன்களில் 10 யார்டுகள் பெறமுடியவில்லைனால் எதிர் அணிக்கு அதே இடத்தில் பந்து கிடைத்து அந்த அணி உடைமை ஆரமிக்கும். பொதுவாக 3 டவுனில் 10 யார்ட் பெறமுடியவில்லைனால் 4ம் டவுனில் "பன்ட்" (Punt), அல்லது பந்து உதைப்பு செய்யுவார்; இப்படி செய்தால் எதிர் அணிக்கு அதே இடத்தில் பந்து கிடைக்கிறதுக்கு பதில் எங்கே பந்து சேரரதோ அங்கே எதிர் அணி பந்து பெற்று உடைமையை ஆரமிக்கும். பந்தை முன்போகரத்துக்கு இரண்டு வழி இருக்கு: துக்கி எறிதல் (Passing) மற்றும் தூக்கிண்டு ஓடுதல் (Running or Rushing).

நாலு பகுதிகள் முடிந்து நிறைய புள்ளிகளை பெற்ற அணி போட்டியை வெற்றிப்பெறும்.

காற்பந்து நிலைகள்

புள்ளிபெறும் பக்கம் (Offensive side)

என். எஃப். எல்.-இல் காற்பின்னிலை மைக்கல் விக்
  • காற்பின்னிலை (Quarterback, QB): இவர் பந்தை தூக்கி எறியுவார். ஒரு நேரத்தில் மைதானத்தில் ஒரே காற்பின்னிலை மற்றும் இருக்கமுடியும்.
  • ஓடும் பின்னிலை (Running back, RB): பந்தை தூக்கி ஓடும் ஆட்டக்காரர்கள் இவர்கள். வால் பின்னிலை (Tailback, TB) எப்பொழுதும் பந்தை தூக்கி ஓடுவார். முழு பின்னிலை (Fullback, FB) நிறைய தடவை தடுப்பு (Blocking) செய்வார். சில தடவை ஓடும் பின்னிலைகள் இல்லாமல் இருக்கும்; சில தடவை ஒன்று, இரண்டு, மூன்று ஓடும் பின்னிலைகள் ஒரே நேரத்தில் இருக்கமுடியும். பொதுவாக ஒன்று அல்ல இரண்டு ஓடும் பின்னிலைகள் இருப்பார்.
  • தொலை பிடிப்பாளர் (Wide receiver, WR): காற்பின்னிலை பந்தை தூக்கி எறித்தால் இவர் பிடிப்பார். சில தடவை தொலை பிடிப்பாளர் இல்லாமல் இருக்கமுடியும்; பொதுவாக இரண்டு, மூன்று ஒரே நேரத்தில் இருப்பார். சில தடவை ஐந்து இருக்கமுடியும்.
  • புள்ளிபெறும் பக்க கோடாளர்கள் (Offensive linemen, OL): ஐந்து பேர் எப்பொழுதும் தடுப்பு செய்வார். காற்பின்னிலை தூக்கி எறியும்பொழுது எறிவு தடுப்பு (Pass blocking), அல்லது காற்பின்னிலையை எதிர் அணி மோதாமல் செய்யப்பார்ப்பார். தூக்கிண்டு ஓடும்பொழுது எதிர் அணியை தள்ளி ஓடும் பின்னிலையுக்கு இடம் படைப்பார். இந்த ஐந்து பேரில் இரண்டு மோதாளர்கள் (Tackles, T, OT), இரண்டு காவல்கள் (Guards, G, OG), மற்றும் ஒரு நடு நிலை (Center, C, OC) இருக்கும்.
  • கிட்டு ஓரம் (Tight end, TE): சில தடவை புள்ளிபெறும் பக்க கோடாளர்கள் மாதிரி தடுப்பு செய்வார், சில தடவை தொலை பிடிப்பாளர் மாதிரி பந்து பிடிப்பார். இவர்கள் இல்லாமல் சில தடவை விளையாடமுடியும்; சில தடவை மூன்று இருப்பார். பொதுவாக ஒன்று அல்ல இரண்டு ஒரே நேரத்தில் மைதானத்தில் இருக்கமுடியும்.

காக்கும்பக்கம் (Defensive side)

அமெரிக்கக் காற்பந்தாட்டத்தில் பொதுவாக பயன்படுத்தும் நிலைகள். இந்த நிலைகளை மாற்றமுடியும்.
  • காக்கும் கோடாளர்கள் (Defensive line, DL): இந்த நாலு பேர் காற்பின்னிலையை பந்தை எறியரத்துக்கு முன் மோதப்பார்ப்பார். இது தவிர எதிர் அணி பந்தை தூக்கி ஓடும்பொழுது முதலாக மோதப்பார்ப்பார். பொதுவாக இரண்டு காப்பும் ஓரம் (Defensive end, DE) மற்றும் இரண்டு காப்பும் மோதாளர் (Defensive tackle, DT) இருப்பார், ஆனால் சில தடவை ஒரே காப்பும் மோதாளர் இருப்பார்.
  • காக்கும் பின்னிலை (Defensive back, DB): இவர்கள் எதிர் அணியின் தொலை பிடிப்பாளர்களை பந்து பிடிக்காமல் இருக்கும் பார்ப்பார். பொதுவாக இரண்டு மூலை பின்னிலைகள் (Cornerback, CB) மற்றும் இரண்டு காவல் (Safety, S) இருப்பார்.
  • கோடுப்பின்னிலை (Linebacker, LB): இவர்கள் சில தடவை காக்கும் பின்னிலை மாதிரி எதிர் அணி ஆட்டக்காரர்களை பந்து பிடிக்காமல் இருக்கப் பார்ப்பார், சில தடவை காப்பும் கோடாளர்கள் மாதிரி ஓடும் பின்னிலை, காற்பின்னிலையை மோதப்பார்ப்பார். பொதுவாக மூன்று அல்ல நாலு கோடுப்பின்னிலைகள் ஒரே நேரத்தில் மைதானத்தில் இருப்பார்.

சிறப்பு அணி (Special teams)

ஃபீல்ட் கோல் உதைக்கும் ஆட்டக்காரரை உதையாளர் (Kicker) என்று அழைக்கப்படும். பன்ட் உதைக்கும் ஆட்டக்காரர் பன்ட்டர் (Punter) என்று அழைக்கப்படும். இது தவிர, புள்ளி பெறத்துக்கு பிரகு உதையாளர் எதிர் அணிக்கு பந்தை உதைக்கனும்; இந்த ஆட்டம் நடைக்கும்பொழுது உதைக்கும் அணியில் (Kicking team) அட்டக்காரர்கள் பந்து பிடிக்கும் அணியின் (Receiving team) வீரர்களை மோதபார்ப்பார். இந்த ஆகிய ஆட்டக்காரர்கள் "சிறப்பு அணி" என்றழைக்கப்படுவார்.

உலகில் அமெரிக்கக் காற்பந்தாட்டச் சங்கங்கள்

உலகில் மிகப்பெரிய, மிகவும் புகழ்பெற்ற அமெரிக்கக் காற்பந்தாட்டச் சங்கம் தேசிய காற்பந்தாட்டக் குழுமம் அல்லது என். எஃப். எல். ஆகும். இந்த குழுமத்தில் 30 அணிகள் விளையாடுகிறார்கள். அமெரிக்காவில் தேசிய கல்லூரி விளையாட்டுச் சங்கம், அல்லது என். சி. ஏ. ஏ., கல்லூரி காற்பந்தாட்டத்தை ஒழுங்குப்படுகிறது; அமெரிக்காவில் கல்லூரி காற்பந்து தான் பல விளையாட்டுகளில் மிக விரும்பப்பட்டது ஆகும். அமெரிக்கா தவிர ஜப்பானில் எக்ஸ்-லீக் குழுமத்தில் 60 அணிகள் விளையாடுகிறார்கள். ஜெர்மனியில் ஜெர்மன் காற்பந்தாட்டக் குழுமத்தில் 12 அணிகள் விளையாடுகிறது.

கனடாவில் அமெரிக்கக் காற்பந்தாட்டப்போன்ற கனடியக் காற்பந்தாட்டம் என்று ஒரு விளையாட்டு நடைபெறுகிறது; இந்த விளையாட்டு கனடிய காற்பந்தாட்டக் குழுமத்தில் ஒழுங்கப்படுகிறது.

மேலும் பாருங்கள்

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA