"பனம்பாரனார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,074 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
===தமிழவைத் தலைமை===
தொல்காப்புயர் தொல்காப்பியத்தை அரங்கேற்றியபோது அவைக்குத் தலைமை தாங்கியவர் அதங்கோட்டாசான் ([[அதங்கோட்டு ஆசான்]]). இவரது நாவில் அறநெறி கரைந்த சொல் வெளிப்படும். இவர் நான்மறை முற்றக் கற்றவர். அரங்கேற்றத்தின்போது இவர் சில அரில்களை(ஐயங்களை) எழுப்பினார். அவற்றைத் தொல்காப்பியர் போக்கினார். பின்னரே தொல்காப்பியம் அரங்கேறியது.
===மயங்கா மரபின் எழுத்துமுறை===
அதங்கோட்டாசானுக்கு எழுந்த ஐயங்கள் எழுத்து எழுத்துமுறை வைப்பில் எனப் பனம்பாரனார் குறிப்பிடுகிறார். (அது வடமொழியை ஒப்புநோக்கி, எகர, ஒகர எழுத்துக்கள் பற்றியதாகவும், கசடதப வல்லினத்தில் வர்க்க எழுத்துக்கள் பற்றியதாகவும் இருந்திருக்கலாம்) தொல்காப்பியர் தமிழ் எழுத்துக்கள் மயங்கா மரபில் தன் நூலில் காட்டப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டித் தெளிவுபடுத்தினார்.
===ஐந்திரம்===
தொல்காப்பியர் [[ஐந்திரம்]] என்னும் வடமொழி இலக்கண நூல் அறிந்தவர். அதிலிருந்து மேற்கோள்களைக் காட்டி அதங்கோட்டாசானின் ஐயங்களைப் போக்கினார்.
===தொல்காப்பியன்===
தொல்காப்பியர் ஐந்திர நூலறிவு நிரம்பியவர் என்றாலும் தமிழின் தொன்மைக் காப்பை இயம்பும் (தொல்காப்பியம்) தொல்காப்பியன் என அரங்கேற்ற அவையில் தனது செயலை விளக்கும் காரணப்பெயரைத் தானே தோற்றுவித்துக்கொண்டார்.
===படிமையோன்===
 
 
[[பகுப்பு:தமிழ்ப் புலவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/716524" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி