மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
சி (முடிந்தது)
===போலிப் போர்===
{{main|போலிப் போர்}}
1930களின் இறுதியில் [[நாசி ஜெர்மனி]]க்கும் நேசநாடுகளான [[பிரிட்டன்]] மற்றும் [[பிரான்சு|பிரான்சிற்கும்]] இடையே போர் மூளுவது தவிர்க்கமுடியாத ஒன்றாகியது. நேசநாட்டுக் கூட்டணியில் ஜெர்மனியின் கிழக்கெல்லையில் அமைந்திருந்த [[போலந்து]] நாடும் இடம் பெற்றிருந்தது. ஜெர்மனி போலந்தைத் தாக்கினால் பிரிட்டனும், பிரான்சும் அதன் உதவிக்கு வர வேண்டும் என்று அவை ஒப்பந்தம் செய்திருந்தன. செப்டம்பர் 1930ல் [[ஹிட்லர்|ஹிட்லரின்]] ஆணைப்படி ஜெர்மானியப் படைகள் [[போலந்து படையெடுப்பு|போலந்தைத் தாக்கின]]. முன் செய்திருந்ததசெய்திருந்த ஒப்பந்ததின்படி பிரான்சும், பிரிட்டனும் ஜெர்ம்னியின் மீது [[போர் சாற்றுதல்|போர் சாற்றின]]. ஆனால் ஜெர்மனியைத் தாக்க எந்தவொரு பெருமுயற்சியும் மேற்கொள்ளவில்லை.
 
ஜெர்மானியப் படைகளின் பெரும்பகுதி கிழக்கில் போலந்தில் போரிட்டுக் கொண்டிருந்த போது அந்நாட்டின் மேற்கெல்லையை குறைந்த அளவு படைகளே பாதுகாத்து வந்தன. பிரான்சு அரைமனதாக ஜெர்மனியின் மேற்கு எல்லையில் ஒரு தாக்குதல் நிகழ்த்தியது. [[சார் படையெடுப்பு]] என்றழைக்கப்படும் இத்தாக்குதலை பிரான்சு சீக்கிரம் நிறுத்திக் கொண்டதால் ஜெர்மனிக்கு இழப்பேதும் ஏற்படவில்லை. இதன் பின்னர் மேற்குப் போர்முனையில் ஏழு மாதங்கள் இழுபறிநிலை நீடித்தது. நேசநாடுகள் தங்கள் போர் ஆயத்தங்களை விரிவு படுத்தின. பிரிட்டன் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]]வுடன் [[கடன்-குத்தகை ஒப்பந்தம்|கடன்-குத்தகை ஒப்பந்தம்]] செய்து கொண்டது. இதன் மூலம் அமெரிக்காவிலிருந்து பெருமளவில் தளவாடங்களை வாங்கத் தொடங்கியது. ஐரோப்பாவின் மையப் பிரதேசத்தில் இழுபறி நிலை நீடித்தாலும், பிற இடங்களில் போர்கள் மூண்டு கொண்டிருந்தன. செப்டம்பர் [[1939]] முதல் மே [[1940]] வரை நீடித்த இந்த மந்த நிலை “போலிப் போர்” என்று வர்ணிக்கப்படுகிறது.
51,779

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/715136" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி