முதலாம் அல்-அலமைன் சண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: ar, bg, ca, da, de, es, fi, fr, he, hr, it, ja, mr, nl, no, pl, pt, ro, sk, sr, tr, vi, zh
வரிசை 33: வரிசை 33:
[[பகுப்பு:1941 நிகழ்வுகள்]]
[[பகுப்பு:1941 நிகழ்வுகள்]]


[[ar:معركة العلمين الأولى]]

[[bg:Първа битка при Ел Аламейн]]
[[ca:Primera Batalla d'El Alamein]]
[[da:Første slag om el-Alamein]]
[[de:Erste Schlacht von El Alamein]]
[[en:First Battle of El Alamein]]
[[en:First Battle of El Alamein]]
[[es:Primera Batalla de El Alamein]]
[[fi:El Alameinin ensimmäinen taistelu]]
[[fr:Première bataille d'El Alamein]]
[[he:קרב אל-עלמיין הראשון]]
[[hr:Prva bitka kod El Alameina]]
[[it:Prima battaglia di El Alamein]]
[[ja:エル・アラメインの戦い]]
[[mr:अल अलामेनची पहिली लढाई]]
[[nl:Eerste slag om El Alamein]]
[[no:Det første slaget om El Alamein]]
[[pl:I bitwa pod El Alamein]]
[[pt:Primeira Batalha de El Alamein]]
[[ro:Prima bătălie de la El Alamein]]
[[sk:Prvá bitka pri Alameine]]
[[sr:Прва битка код Ел Аламејна]]
[[tr:I. El Alameyn Muharebesi]]
[[vi:Trận El Alamein thứ nhất]]
[[zh:第一次阿拉曼戰役]]

00:44, 27 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்

முதலாம் எல் அலாமீன் சண்டை
மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் பகுதி

British infantry manning a sandbagged defensive position near El Alamein, 17 July 1942.
நாள் 1 – 27 July 1942
இடம் El Alamein, Egypt
Tactically inconclusive
Strategic Allied victory
பிரிவினர்
 ஐக்கிய இராச்சியம்
 ஆத்திரேலியா
 நியூசிலாந்து
 South Africa
 இந்தியா
 ஜெர்மனி
 இத்தாலி
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய இராச்சியம் Claude Auchinleck
ஐக்கிய இராச்சியம் Dorman Smith
நாட்சி ஜெர்மனி Erwin Rommel
இத்தாலி இராச்சியம் Enea Navarrini
பலம்
150,000 troops
1,114 tanks
1,000+ artillery pieces
1,500+ planes
96,000 troops
585 tanks
~500 planes
இழப்புகள்
13,250 casualties[1] 17,000 casualties[nb 1]

முதலாம் எல் அலாமீன் சண்டை (First Battle of El Alamein) இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு அதிரடித் தாக்குதல் நடவடிக்கை. இது மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் ஒரு பகுதியாகும். இதில் எர்வின் ரோம்மல் தலைமையிலான அச்சுநாட்டுப் படைகளின் கிழக்கு நோக்கி முன்னேற்றத்தை நேச நாட்டுப் படைகள் தடுத்து நிறுத்தின.

1940-42ல் வடக்கு ஆப்பிரிக்காவில் அச்சுநாட்டுப் படைகளுக்கும் நேச நாட்டுப் படைகளுக்கும் கடும் சண்டை நடந்து கொண்டிருந்தது. இரு தரப்பினருக்கும் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி ஏற்பட்டன. 1942 மே மாதம் நடந்த கசாலா சண்டையில் அச்சுப் படைகளுக்கு கிடைத்த பெரும் வெற்றியால் நிலைகுலைந்த நேச நாட்டுப் படைகள் கசாலா அரண்நிலைகளில் இருந்து மெர்சா மாத்ரூ அரண்நிலைகளுக்குப் பின்வாங்கின. லிபிய-எகிப்து எல்லையிலிருந்து எகிப்து நாட்டுப்பகுதிக்குள் 100 கிமீ தொலைவில் இந்த அரண்கோடு அமைந்திருந்தது. முதலில் இந்த அரண்நிலையில் ரோம்மலின் படைகளை எதிர்கொள்ள நேச நாட்டுப் படைகள் திட்டமிட்டிருந்தனர். மெர்சா மாத்ரூவில் தாக்கும் படைகள் எளிதாக சுற்றி வளைத்து பாதுகாவல் படைகளை பக்கவாட்டில் இருந்து தாக்குவதற்கு வசதியாக புவியியல் அமைப்பு அமைந்திருந்தது. ரோம்மல் இத்தகைய சுற்றி வளைத்துத் தாக்கும் போர் உத்திகளை விரும்பி கையாள்பவராகையால், அவரது தாக்குதலில் இருந்து மெர்சா மாத்ரூவைப் பாதுகாக்க முடியாது என்று நேச நாட்டுத் தளபதிகள் உணர்ந்தனர். எனவே இந்த அரண்நிலையிலிருந்தும் பின்வாங்கி கிழக்கே 100 கிமீ தொலைவிலுள்ள எல் அலாமீன் என்ற இடத்தில் புதிய அரண்நிலைகளை அமைத்தனர். அலாமீனின் தெற்கே கட்டாரா என்ற பள்ளப்பகுதி (Quattara depression) அமைந்திருந்தால், ரோம்மலால் இந்த அரண்நிலையை எளிதில் சுற்றி வளைக்க முடியாது என்று அவர்கள் கருதினர்.

அலாமீன் அரண்நிலையை பலப்படுத்துவதற்கான அவகாசத்தை தன் படைகளுக்கு அளிக்க, நேச நாட்டு தளபதி கிளாட் ஆச்சின்லெக், ரோம்மலின் படை முன்னேற்றத்தை தாமதப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார். ஜுன் 26-27ல் மெர்சா மாத்ரூ, ஜூன் 28ல் ஃபூக்கா ஆகிய இடங்களில் ரோம்மலின் முன்னணி படைகளுடன் நேச நாட்டுப் படைப்பிரிவுகள் மோதி அவற்றை தாமதப்படுத்தின. இதனால் ஜூன் 30ம் தேதி தான் ரோம்மலின் படைகள் எல் அலாமீன் அரண்நிலைகளை அடைந்தன. அதற்கு மறுநாள் (ஜூலை 1) அலாமீன் மீதான அச்சுத் தாக்குதல் தொடங்கியது. அலாமீனின் புவியியல் அமைப்பால் சுற்றி வளைத்து தாக்கும் உத்தியை ரோம்மலால் பயன்படுத்த இயலவில்லை. நேரடியாக பலமான நேச நாட்டு அரண்நிலைகளின் மீது தாக்கவேண்டியதாயிற்று. ஐந்து நாட்கள் இடைவிடாது தாக்குதல் நடத்தியும் ரோம்மலின் படைகளால் அலாமீன் அரண்நிலையை ஊடுருவ முடியவில்லை. பெரும் இழப்புகளுடன் தன் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்திய ரோம்மல், அலாமீன் அரண்நிலைக்கு எதிராக தானும் ஒரு அரண்நிலையை உருவாக்கத் தொடங்கினார். அச்சுப் படைகளின் தாக்குதல் திறன் பெரும்பாலும் அழிந்துபோனதை உணர்ந்த ஆச்சின்லெக், அச்சு நிலைகளின் மீது எதிர்த்தாக்குதலைத் தொடங்கினார்.

குறிப்புகள்

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; CM589 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. Watson (2007), p. 6

மேற்கோள்கள்


பிழை காட்டு: <ref> tags exist for a group named "nb", but no corresponding <references group="nb"/> tag was found

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_அல்-அலமைன்_சண்டை&oldid=704414" இலிருந்து மீள்விக்கப்பட்டது