"மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
இத்தாக்குதலில் ஜெர்மானிய திசை திருப்பு உத்தி வெற்றியடைந்து, பிரான்சிலிருந்து பெல்ஜியத்துக்கு விரைந்த நேச நாட்டு முதன்மைப் படைகளின் பெரும் பகுதி ஜெர்மானியக் கிடுக்கிப் பிடிக்குள் சிக்கிக் கொண்டது. ஜெர்மானியக் கிடுக்கியின் இரு கரங்களும் வேகமாக முன்னேறி மே மாத இறுதிக்குள் [[ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாயை]] அடைந்தன. ஜெர்மானியப் படைவளையம் வேகமாக இறுகினாலும் சிக்கிய நேசநாட்டுப் படைகளின் பெரும்பகுதி [[டன்கிர்க்]] துறைமுகம் வழியாக [[இங்கிலாந்து]]க்கு [[டைனமோ நடவடிக்கை|தப்பின]]. இத்துடன் (ஜூன் 4) பிரான்சு சண்டையின் முதல் கட்டம் பெரும் ஜெர்மானிய வெற்றியில் முடிவடைந்தது. அடுத்த கட்டமாக பிரான்சின் எஞ்சிய பகுதிகளைக் கைப்பற்றும் ஜெர்மானிய நடவடிக்கை (சிவப்புத் திட்டம் - ''Fall Gelb''). ஜூன் 5ம் தேதி தொடங்கியது. பிரான்சின் மையப்பகுதி மீது ஜெர்மானியப் படையெடுப்பு ஆரம்பமாகியது. ஜூன் 10ம் தேதி [[இத்தாலி]]யும் பிரான்சைத் [[இத்தாலியின் பிரான்சு படையெடுப்பு|தாக்கியது]]. இருமுனைத் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் பிரான்சின் படைகள் பின்வாங்கத் தொடங்கின. ஜூன் 14ம் தேதி பிரான்சின் தலைநகர் [[பாரிஸ்]] ஜெர்மானியர் வசமானது. ஜூன் 22ல் போர் நிறுத்தம் கையெழுத்தாகி பிரான்சு சரணடைந்தது. ஒன்றரை மாத காலத்துக்குள் நான்கு நாடுகளை ஜெர்மனி வீழ்த்தி வெற்றி கண்டது.
 
மேற்கு ஐரோப்பா முழுவதையும் வென்ற ஜெர்மானியப் படைகள் அடுத்து பிரிட்டனைக் கைப்பற்ற [[சீலயன் நடவடிக்கை|திட்டமிட்டன]]. ஆனால் பிரிட்டானிய வான்பகுதியில் நடந்த [[பிரிட்டன் சண்டை|வான்சண்டையில்]] ஜெர்மானிய வான்படை [[லுஃப்ட்வாஃபே]] பிரிட்டானிய வான்படையிடம் தோற்றதால், அத்திட்டம் கைவிடப்பட்டது.
 
==1941-44: இடைவெளி==
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/685990" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி