மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 61: வரிசை 61:
===நார்வே மற்றும் டென்மார்க்===
===நார்வே மற்றும் டென்மார்க்===
===பிரான்சு, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் லக்சம்பர்க்===
===பிரான்சு, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் லக்சம்பர்க்===
மே 10, 1940ல் போலிப் போர் முடிவடைந்து ஜெர்மனியின் மேற்குப் போர்முனைத் தாக்குதல் ஆரம்பமாகியது. இத்தாக்குதலுக்கான ஜெர்மானிய [[மேல்நிலை உத்தி]] ”மஞ்சள் திட்டம்” ([[ஜெர்மன்]]:Fall Gelb) என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது. அதன்படி ஜெர்மானியப் படைகள் மேற்கு எல்லையில் இரு இடங்களில் தாக்கின. [[பெல்ஜியம் சண்டை|பெல்ஜியத்தின்]] மீதான ஜெர்மானியத் தாக்குதலின் நோக்கம் நேச நாட்டுப் படைகளைத் திசை திருப்புவதாகும். பெல்ஜியத்தைப் பாதுகாக்க நேச நாட்டு முதன்மைப் படைகள் விரைந்து வந்தபின், அவற்றின் பின் பகுதியில் [[ஆர்டென் காடு]]கள் வழியாக ஜெர்மனியின் முக்கிய தாக்குதல் நடைபெற்றது. பெல்ஜியத்தைத் தாக்குவதோடு [[லக்சம்பர்க் படையெடுப்பு|லக்சம்பர்க்]] மற்றும் [[நெதர்லாந்து சண்டை|நெதர்லாந்தையும்]] ஜெர்மானியப் படைகள் தாக்கின. பெல்ஜியம் மற்றும் லக்சம்பர்க்கை தரைப்படைத் தாக்குதல் மூலம் கைப்பற்றினாலும், நெதர்லாந்தைத் தாக்க [[வான்குடை]] வீரரகளை பெருமளவில் ஜெர்மானியத் தளபதிகள் பயன்படுத்தினர். தாக்குதல் தொடங்கிய அன்றே லக்சம்பர்க் முழுவதும் ஜெர்மானிய வசமானது. அடுத்து மே 14ம் தேதி டச்சு அரசாங்கமும் 28ம் தேதி பெல்ஜிய அரசும் சரணடைந்தன.

இத்தாக்குதலில் ஜெர்மானிய திசை திருப்பு உத்தி வெற்றியடைந்து, பிரான்சிலிருந்து பெல்ஜியத்துக்கு விரைந்த நேச நாட்டு முதன்மைப் படைகளின் பெரும் பகுதி ஜெர்மானியக் கிடுக்கிப் பிடிக்குள் சிக்கிக் கொண்டது. ஜெர்மானியக் கிடுக்கியின் இரு கரங்களும் வேகமாக முன்னேறி மே மாத இறுதிக்குள் [[ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாயை]] அடைந்தன. ஜெர்மானியப் படைவளையம் வேகமாக இறுகினாலும் சிக்கிய நேசநாட்டுப் படைகளின் பெரும்பகுதி [[டன்கிர்க்]] துறைமுகம் வழியாக [[இங்கிலாந்து]]க்கு [[டைனமோ நடவடிக்கை|தப்பின]]. இத்துடன் (ஜூன் 4) பிரான்சு சண்டையின் முதல் கட்டம் பெரும் ஜெர்மானிய வெற்றியில் முடிவடைந்தது. அடுத்த கட்டமாக பிரான்சின் எஞ்சிய பகுதிகளைக் கைப்பற்றும் ஜெர்மானிய நடவடிக்கை (சிவப்புத் திட்டம் - ''Fall Gelb''). ஜூன் 5ம் தேதி தொடங்கியது. பிரான்சின் மையப்பகுதி மீது ஜெர்மானியப் படையெடுப்பு ஆரம்பமாகியது. ஜூன் 10ம் தேதி [[இத்தாலி]]யும் பிரான்சைத் [[இத்தாலியின் பிரான்சு படையெடுப்பு|தாக்கியது]]. இருமுனைத் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் பிரான்சின் படைகள் பின்வாங்கத் தொடங்கின. ஜூன் 14ம் தேதி பிரான்சின் தலைநகர் [[பாரிஸ்]] ஜெர்மானியர் வசமானது. ஜூன் 22ல் போர் நிறுத்தம் கையெழுத்தாகி பிரான்சு சரணடைந்தது. ஒன்றரை மாத காலத்துக்குள் நான்கு நாடுகளை ஜெர்மனி வீழ்த்தி வெற்றி கண்டது.



==1941-44: இடைவெளி==
==1941-44: இடைவெளி==

05:44, 5 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்

மேற்குப் போர்முனை
இரண்டாம் உலகப் போரின் பகுதி

Allied troops landing on Omaha Beach in 1944.
நாள் 1939–1945
இடம் North, South and Western Europe
1939–1940 - Decisive Axis victory

1944–1945 - Decisive Allied victory

  • Fall of Nazi Germany (concurrently with Eastern Front)
  • Fall of Fascist Italy
  • Liberation of occupied countries in Western and Northern Europe
நிலப்பகுதி
மாற்றங்கள்
Partition of Germany (1945)
பிரிவினர்
 ஐக்கிய இராச்சியம்
 ஐக்கிய அமெரிக்கா
பிரான்சு France
 சுதந்திர பிரான்ஸ்
 கனடா
போலந்து Free Polish
 நெதர்லாந்து
 பெல்ஜியம்
 நோர்வே
 டென்மார்க்
செக்கோசிலோவாக்கியா Czechoslovakia
 ஆத்திரேலியா
 நியூசிலாந்து
 லக்சம்பர்க்
 ஜெர்மனி
 இத்தாலி
தளபதிகள், தலைவர்கள்
1939–1940
பிரான்சு Maurice Gamelin
பிரான்சு Maxime Weygand (கைதி)
ஐக்கிய இராச்சியம் Lord Gort (British Expeditionary Force)
நெதர்லாந்து Henri Winkelman
பெல்ஜியம் Leopold III (கைதி)
நோர்வே Otto Ruge (கைதி)
போலந்து Władysław Sikorski
1944–1945
ஐக்கிய அமெரிக்கா Dwight Eisenhower, (SHAEF)
ஐக்கிய இராச்சியம் Bernard Montgomery (21st Army Group)
ஐக்கிய அமெரிக்கா Omar Bradley (12th Army Group)
ஐக்கிய அமெரிக்கா Jacob Devers (6th Army Group)
1939–1940
நாட்சி ஜெர்மனி Gerd von Rundstedt (Army Group A)
நாட்சி ஜெர்மனி Fedor von Bock (Army Group B)
நாட்சி ஜெர்மனி Wilhelm von Leeb (Army Group C)
இத்தாலி இராச்சியம் H.R.H. Umberto di Savoia (Army Group West)
1944–1945
நாட்சி ஜெர்மனி Adolf Hitler

நாட்சி ஜெர்மனி Erwin Rommel (W.I.A.)
நாட்சி ஜெர்மனி Gerd von Rundstedt (கைதி)
நாட்சி ஜெர்மனி Walter Model
நாட்சி ஜெர்மனி Albert Kesselring (கைதி)
நாட்சி ஜெர்மனி Gustav-Adolf von Zangen

பலம்
1939–1940
  • 2,862,000 troops

1944–1945

1939–1940
  • 3,350,000 troops

1944–1945

இரண்டாம் உலகப் போரில் ஐரோப்பிய களத்தின் மேற்குப் போர்முனை (Western Front in World War II) டென்மார்க், நெதர்லாந்து, பெல்ஜியம், பிரிட்டன், பிரான்சு, லக்சம்பர்க் மற்றும் நாசி ஜெர்மனியின் மேற்குப் பகுதி ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது. இங்கு இரு கட்டங்களாக பெரும் போர் நடைபெற்றது. முதல் கட்டத்தில் 1939-40ல் ஜெர்மானியப் படைகள் பிரான்சு, பெல்ஜியம், லக்சம்பர்க், நெதர்லாந்து ஆகியவற்றைக் கைப்பற்றின. இக்கட்டம் பிரிட்டனுடனான வான்படை சண்டையில் ஜெர்மானியத் தோல்வியுடன் முடிவடைந்தது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இப்போர்முனையில் பெரிய மோதல்கள் எதுவும் நிகழ வில்லை. இரண்டாம் கட்டம் ஜூன் 1944ல் பிரான்சு மீதான நேச நாட்டு படைகளின் கடல்வழிப் படையெடுப்புடன் தொடங்கியது. மே 1945ல் ஜெர்மனியின் சரணடைவுடன் முற்றுப்பெற்றது.

1939-40: அச்சு நாடுகளின் வெற்றிகள்

போலிப் போர்

1930களின் இறுதியில் நாசி ஜெர்மனிக்கும் நேசநாடுகளான பிரிட்டன் மற்றும் பிரான்சிற்கும் இடையே போர் மூளுவது தவிர்க்கமுடியாத ஒன்றாகியது. நேசநாட்டுக் கூட்டணியில் ஜெர்மனியின் கிழக்கெல்லையில் அமைந்திருந்த போலந்து நாடும் இடம் பெற்றிருந்தது. ஜெர்மனி போலந்தைத் தாக்கினால் பிரிட்டனும், பிரான்சும் அதன் உதவிக்கு வர வேண்டும் என்று அவை ஒப்பந்தம் செய்திருந்தன. செப்டம்பர் 1930ல் ஹிட்லரின் ஆணைப்படி ஜெர்மானியப் படைகள் போலந்தைத் தாக்கின. முன் செய்திருந்தத ஒப்பந்ததின்படி பிரான்சும், பிரிட்டனும் ஜெர்ம்னியின் மீது போர் சாற்றின. ஆனால் ஜெர்மனியைத் தாக்க எந்தவொரு பெருமுயற்சியும் மேற்கொள்ளவில்லை.

ஜெர்மானியப் படைகளின் பெரும்பகுதி கிழக்கில் போலந்தில் போரிட்டுக் கொண்டிருந்த போது அந்நாட்டின் மேற்கெல்லையை குறைந்த அளவு படைகளே பாதுகாத்து வந்தன. பிரான்சு அரைமனதாக ஜெர்மனியின் மேற்கு எல்லையில் ஒரு தாக்குதல் நிகழ்த்தியது. சார் படையெடுப்பு என்றழைக்கப்படும் இத்தாக்குதலை பிரான்சு சீக்கிரம் நிறுத்திக் கொண்டதால் ஜெர்மனிக்கு இழப்பேதும் ஏற்படவில்லை. இதன் பின்னர் மேற்குப் போர்முனையில் ஏழு மாதங்கள் இழுபறிநிலை நீடித்தது. நேசநாடுகள் தங்கள் போர் ஆயத்தங்களை விரிவு படுத்தின. பிரிட்டன் அமெரிக்காவுடன் கடன்-குத்தகை ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன் மூலம் அமெரிக்காவிலிருந்து பெருமளவில் தளவாடங்களை வாங்கத் தொடங்கியது. ஐரோப்பாவின் மையப் பிரதேசத்தில் இழுபறி நிலை நீடித்தாலும், பிற இடங்களில் போர்கள் மூண்டு கொண்டிருந்தன. செப்டம்பர் 1939 முதல் மே 1940 வரை நீடித்த இந்த மந்த நிலை “போலிப் போர்” என்று வர்ணிக்கப்படுகிறது.

நார்வே மற்றும் டென்மார்க்

பிரான்சு, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் லக்சம்பர்க்

மே 10, 1940ல் போலிப் போர் முடிவடைந்து ஜெர்மனியின் மேற்குப் போர்முனைத் தாக்குதல் ஆரம்பமாகியது. இத்தாக்குதலுக்கான ஜெர்மானிய மேல்நிலை உத்தி ”மஞ்சள் திட்டம்” (ஜெர்மன்:Fall Gelb) என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது. அதன்படி ஜெர்மானியப் படைகள் மேற்கு எல்லையில் இரு இடங்களில் தாக்கின. பெல்ஜியத்தின் மீதான ஜெர்மானியத் தாக்குதலின் நோக்கம் நேச நாட்டுப் படைகளைத் திசை திருப்புவதாகும். பெல்ஜியத்தைப் பாதுகாக்க நேச நாட்டு முதன்மைப் படைகள் விரைந்து வந்தபின், அவற்றின் பின் பகுதியில் ஆர்டென் காடுகள் வழியாக ஜெர்மனியின் முக்கிய தாக்குதல் நடைபெற்றது. பெல்ஜியத்தைத் தாக்குவதோடு லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்தையும் ஜெர்மானியப் படைகள் தாக்கின. பெல்ஜியம் மற்றும் லக்சம்பர்க்கை தரைப்படைத் தாக்குதல் மூலம் கைப்பற்றினாலும், நெதர்லாந்தைத் தாக்க வான்குடை வீரரகளை பெருமளவில் ஜெர்மானியத் தளபதிகள் பயன்படுத்தினர். தாக்குதல் தொடங்கிய அன்றே லக்சம்பர்க் முழுவதும் ஜெர்மானிய வசமானது. அடுத்து மே 14ம் தேதி டச்சு அரசாங்கமும் 28ம் தேதி பெல்ஜிய அரசும் சரணடைந்தன.

இத்தாக்குதலில் ஜெர்மானிய திசை திருப்பு உத்தி வெற்றியடைந்து, பிரான்சிலிருந்து பெல்ஜியத்துக்கு விரைந்த நேச நாட்டு முதன்மைப் படைகளின் பெரும் பகுதி ஜெர்மானியக் கிடுக்கிப் பிடிக்குள் சிக்கிக் கொண்டது. ஜெர்மானியக் கிடுக்கியின் இரு கரங்களும் வேகமாக முன்னேறி மே மாத இறுதிக்குள் ஆங்கிலக் கால்வாயை அடைந்தன. ஜெர்மானியப் படைவளையம் வேகமாக இறுகினாலும் சிக்கிய நேசநாட்டுப் படைகளின் பெரும்பகுதி டன்கிர்க் துறைமுகம் வழியாக இங்கிலாந்துக்கு தப்பின. இத்துடன் (ஜூன் 4) பிரான்சு சண்டையின் முதல் கட்டம் பெரும் ஜெர்மானிய வெற்றியில் முடிவடைந்தது. அடுத்த கட்டமாக பிரான்சின் எஞ்சிய பகுதிகளைக் கைப்பற்றும் ஜெர்மானிய நடவடிக்கை (சிவப்புத் திட்டம் - Fall Gelb). ஜூன் 5ம் தேதி தொடங்கியது. பிரான்சின் மையப்பகுதி மீது ஜெர்மானியப் படையெடுப்பு ஆரம்பமாகியது. ஜூன் 10ம் தேதி இத்தாலியும் பிரான்சைத் தாக்கியது. இருமுனைத் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் பிரான்சின் படைகள் பின்வாங்கத் தொடங்கின. ஜூன் 14ம் தேதி பிரான்சின் தலைநகர் பாரிஸ் ஜெர்மானியர் வசமானது. ஜூன் 22ல் போர் நிறுத்தம் கையெழுத்தாகி பிரான்சு சரணடைந்தது. ஒன்றரை மாத காலத்துக்குள் நான்கு நாடுகளை ஜெர்மனி வீழ்த்தி வெற்றி கண்டது.


1941-44: இடைவெளி

1944-45: இரண்டாவது முனை

நார்மாண்டி

பிரான்சின் விடுவிப்பு

மார்க்கெட் கார்டன்

பாரிசிலிருந்து ரைன் வரை

ஜெர்மானிய எதிர்த்தாக்குதல்

ஜெர்மனி மீதான படையெடுப்பு

1945: போரின் முடிவு

குறிப்புகள்

  1. MacDonald, C (2005), The Last Offensive: The European Theater of Operations. University Press of the Pacific

மேற்கோள்கள்

மேலும் படிக்க

  • Ellis, L. F. (1968). Victory in the West (Volume II). London: HMSO.
  • Kurowski, Franz. (2005). Endkampf um das Reich 1944–1945. Erlangen: Karl Müller Verlag. ISBN 3-86070-855-4.
  • Young, Peter, editor. World Almanac of World War II. St. Martin's Press.