எஸ். நிஜலிங்கப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.2) (தானியங்கிஇணைப்பு: de:S. Nijalingappa
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''சித்தவனஹல்லி நிஜலிங்கப்பா ''' (Siddavanahalli Nijalingappa, [[கன்னடம்]]: ಸಿದ್ಧವನಹಳ್ಳಿ ನಿಜಲಿಂಗಪ್ಪ ) (திசம்பர் 10, 1902 – ஆகத்து 8, 2000, [[சித்திரதுர்க்கா மாவட்டம்|சித்திரதுர்கா]]) [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு ]] அரசியல்வாதியும் 1956 முதல் 1958 வரையும் பின்னர் 1962 முதல் 1968 வரையும் [[கருநாடகம்|கர்நாடக]] முதல்வராக பணி புரிந்தவருமாவார். [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலை இயக்கத்திலும்]] கருநாடக மாநில ஐக்கியத்திற்கும் (கர்நாடக ஏக்கிகர்னா) பெரும் பங்காற்றியவர். 1968ஆம் ஆண்டு பிளவுபடாத காங்கிரசின் கடைசித் தலைவராக பணியாற்றியவர். பிளவிற்குப் பின்னர் பழமைவாதிகள் அடங்கிய காங்கிரசு (எஸ்) என்றழைக்கப்பட்ட சின்டிகேட் காங்கிரசுக்குத் தலைமையேற்றார்.
'''சித்தவனஹல்லி நிஜலிங்கப்பா ''' (Siddavanahalli Nijalingappa, [[கன்னடம்]]: ಸಿದ್ಧವನಹಳ್ಳಿ ನಿಜಲಿಂಗಪ್ಪ ) (திசம்பர் 10, 1902 – ஆகத்து 8, 2000, [[சித்திரதுர்க்கா மாவட்டம்|சித்திரதுர்கா]]) [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு ]] அரசியல்வாதியும் 1956 முதல் 1958 வரையும் பின்னர் 1962 முதல் 1968 வரையும் [[கருநாடகம்|கர்நாடக]] முதல்வராக பணி புரிந்தவருமாவார். [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலை இயக்கத்திலும்]] கருநாடக மாநில ஐக்கியத்திற்கும் (கர்நாடக ஏக்கிகர்னா) பெரும் பங்காற்றியவர். 1968ஆம் ஆண்டு பிளவுபடாத காங்கிரசின் கடைசித் தலைவராக பணியாற்றியவர். பிளவிற்குப் பின்னர் பழமைவாதிகள் அடங்கிய காங்கிரசு (எஸ்) என்றழைக்கப்பட்ட [[சின்டிகேட் காங்கிரசு]]க்குத் தலைமையேற்றார்.


==இளமை==
==இளமை==

09:08, 19 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்

சித்தவனஹல்லி நிஜலிங்கப்பா (Siddavanahalli Nijalingappa, கன்னடம்: ಸಿದ್ಧವನಹಳ್ಳಿ ನಿಜಲಿಂಗಪ್ಪ ) (திசம்பர் 10, 1902 – ஆகத்து 8, 2000, சித்திரதுர்கா) காங்கிரசு அரசியல்வாதியும் 1956 முதல் 1958 வரையும் பின்னர் 1962 முதல் 1968 வரையும் கர்நாடக முதல்வராக பணி புரிந்தவருமாவார். இந்திய விடுதலை இயக்கத்திலும் கருநாடக மாநில ஐக்கியத்திற்கும் (கர்நாடக ஏக்கிகர்னா) பெரும் பங்காற்றியவர். 1968ஆம் ஆண்டு பிளவுபடாத காங்கிரசின் கடைசித் தலைவராக பணியாற்றியவர். பிளவிற்குப் பின்னர் பழமைவாதிகள் அடங்கிய காங்கிரசு (எஸ்) என்றழைக்கப்பட்ட சின்டிகேட் காங்கிரசுக்குத் தலைமையேற்றார்.

இளமை

1902ஆம் ஆண்டு திசம்பர் 10 அன்று அப்போதைய மைசூர் மாகாணத்தின் (தற்கால கருநாடக மாநிலம்))பெல்லாரி மாவட்டத்தில் சிறு கிராமமொன்றில் நடுத்தர இந்து லிங்காயத் குடும்பத்தில் பிறந்தார். 1924ஆம் ஆண்டு பெங்களூருவின் சென்ட்ரல் கல்லூரியிருந்து பட்டம் பெற்றார். 1926ஆம் ஆண்டு புனேயின் சட்டக்கல்லூரியில் பட்டம் பெற்றார்.

அரசியல் வாழ்க்கை

நிஜலிங்கப்பாவின் அரசியல் நுழைவு 1936ஆம் ஆண்டு நிகழ்ந்தது. தன்னார்வலராக இணைந்து மாநில காங்கிரசுக் கட்சியின் தலைவராகவும் அனைத்திந்திய காங்கிரசின் தலைவராகவும் முன்னேறினார். 1946-1950களில் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினராக பெரும் பங்காற்றினார். 1952 முதல் 1957 வரை சித்திரதுர்கா மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். மூன்றுமுறை கருநாடக முதல்வராகப் பணிபுரிந்து அம்மாநிலத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டவராகக் கருதப்படுகிறார்[1].விவசாயம், வேளாண்மை,தொழில்துறை மற்றும் போக்குவரத்து திட்டங்களை நிறைவேற்றினார்.

அவர் 1968 முதல் 1971 வரை காங்கிரசுக் கட்சித் தலைவராக பொறுப்பேற்றிருந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் இந்திய அரசியல் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்தது. இளந்துருக்கியர்கள் என்றறியப்பட்ட இளம் காங்கிரசுத் தொண்டர்கள் உதவியுடன் இந்தியப் பிரதமர்|இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி காங்கிரசின் மூத்த தலைவர்களின் பழமைவாத கொள்கைகளுடன் உடன்படாத நிலையில் காங்கிரசு இரண்டாகப் பிளவுபட நேர்ந்தது. காங்கிரசு (ஐ), காங்கிரசு (ஓ) (நிறுவன காங்கிரசு/ஸ்தாபன காங்கிரசு) என்ற இரு பிளவுகளில் இரண்டாம் பிரிவிற்கு தலைமையேற்றார்.

உசாத்துணைகள்

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._நிஜலிங்கப்பா&oldid=670366" இலிருந்து மீள்விக்கப்பட்டது