அமெரிக்க ஆங்கிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
சி தானியங்கிஇணைப்பு: ar, ca, el, fa, mk, nn, ro, sah, uk, vi மாற்றல்: en, pt, ru, th
வரிசை 75: வரிசை 75:
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்கா]]
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்கா]]


[[ar:إنجليزية أمريكية]]
[[cs:Americká angličtina]]
[[ca:Anglès dels Estats Units]]
[[co:Inglese americanu]]
[[co:Inglese americanu]]
[[cs:Americká angličtina]]
[[de:Amerikanisches Englisch]]
[[de:Amerikanisches Englisch]]
[[el:Αμερικανισμός]]
[[en:English Language]]
[[en:American English]]
[[es:Inglés estadounidense]]
[[es:Inglés estadounidense]]
[[fa:انگلیسی آمریکایی]]
[[fi:Amerikanenglanti]]
[[fr:Anglais américain]]
[[fr:Anglais américain]]
[[ko:미국 영어]]
[[ia:Anglese american]]
[[it:Inglese americano]]
[[he:אנגלית אמריקנית]]
[[he:אנגלית אמריקנית]]
[[hu:Amerikai angol nyelv]]
[[hu:Amerikai angol nyelv]]
[[nl:Amerikaans-Engels]]
[[ia:Anglese american]]
[[it:Inglese americano]]
[[ja:アメリカ英語]]
[[ja:アメリカ英語]]
[[ko:미국 영어]]
[[mk:Американски англиски јазик]]
[[nl:Amerikaans-Engels]]
[[nn:Angloamerikansk språk]]
[[no:Amerikansk engelsk]]
[[no:Amerikansk engelsk]]
[[pl:Amerykańska odmiana języka angielskiego]]
[[pl:Amerykańska odmiana języka angielskiego]]
[[pt:Inglês estadunidense]]
[[pt:Inglês americano]]
[[ro:Engleza americană]]
[[ru:Американский английский]]
[[ru:Американский вариант английского языка]]
[[sah:Американ инглиш]]
[[simple:American English]]
[[simple:American English]]
[[fi:Amerikanenglanti]]
[[sv:Amerikansk engelska]]
[[sv:Amerikansk engelska]]
[[th:อังกฤษอเมริกัน]]
[[th:สำเนียงอเมริกัน]]
[[uk:Американська англійська]]
[[vi:Tiếng Anh Mỹ]]
[[zh:美国英语]]
[[zh:美国英语]]

17:31, 12 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்

அமெரிக்க ஆங்கிலம் (American English) என்பது ஐக்கிய அமெரிக்காவில் பரவலாக பேசப்படும் ஆங்கில மொழியைக் குறிக்கும். ஏறத்தாழ ஆங்கில மொழியை முதல் மொழியாகப் பேசுவோரில் மூன்றில் இரண்டு பங்கினர் ஐக்கிய அமெரிக்காவில் வாழ்கின்றனர்[1].

மொழி வல்லுனர்களின் கூற்றுப் படி ஆரம்பத்தில் இங்கிலாந்திலும் அமெரிக்க குடியேற்றப் பகுதிகளிலும் பேசப்பட்டது ஒரே மாதிரியான ஆங்கிலம் தான்.

பிரித்தானியாவில் ஆதிக்கத்தில் இருந்த அமெரிக்கவிற்கும் பிரித்தானியாவிற்கும் வரி செலுத்தல் விடயமாக 1775 இல் யுத்தம் மூண்டது. இந்த யுத்தத்தில் பிரித்தானியா படு தோழ்வியடைந்ததைத் தொடர்ந்து அமெரிக்கா 1776 யூலை 4 இல் சுதந்திர பிரகடனம் செய்தது. அமெரிக்காவின் சுதந்திரத்தைத் தொடர்ந்து அமெரிக்க ஆங்கில பேச்சிலும் ஒலிப்பிலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.

பிரித்தானிய ஆட்சியிலிருந்து தன்னாட்சிப் பெற்றதைப் போன்று அவர்களது மொழியிலும் தனித்துவம் இருக்க வேண்டும் என பல அமெரிக்கர்கள் விரும்பினர்.

பெஞ்சமின் பிறான்கிளின்

சில அமெரிக்க தலைவர்கள் தமது மொழியில் மாற்றங்கள் செய்ய தீர்மானித்தனர். அறிவியலாளர் பெஞ்சமின் பிறான்கிளின். (Benjamin Franklin [1706-1790]) அமெரிக்க ஆங்கில எழுத்திலக்கணத்திலும் ஒரு சீர்திருத்த முறைமை அவசியம் என்பதை வலியுறுத்தினார்.

இருப்பினும் இவரது எண்ணம் நிராகரிக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அவரது எண்ணக்கருவை மற்றவர்கள் செயல்படுத்த விளைந்தனர்.

அவர்களில் ஒருவரே நோவா வெப்ஸரர்.

நோவா வெப்ஸரர்

(Noah Webster [1758-1843]) நோவா வெப்ஸரர் பாடசாலைகளுக்கான புத்தகங்களை எழுதினார். அமெரிக்கர்கள் கட்டாயம் அமெரிக்க புத்தகங்களையே கற்க வேண்டும் என்பது இவரது எண்ணம்.

1783 இல் இவரே முதல் அமெரிக்க ஆங்கில சொல்லிலக்கணப் பொத்தகத்தையும் வெளியிட்டவராவர்.

அவரது மொழி சீர்த்திருத்தமைப்பில் அமைந்த ஆங்கில ஒலிப்பு முறைகளும் சொல்லிலக்கணமுமே இன்றைய அமெரிக்க ஆங்கிலமாக திகழ்கின்றது.

1828 இல் முதல் அமெரிக்க ஆங்கில அகராதி நோவா வெப்ஸ்டர் அவர்களாலேயே வெளியிடப்பட்டது. (First American Dictionary) பிரிட்டிஸ் ஆங்கில சொல்லிலக்கண விதி முறைகள் மிகவும் சிக்கலானவை என நோவா வெப்ஸ்ர் கருத்து தெரிவித்தார். அதனால் அவர் அமெரிக்க சொல்லிலக்கணப்படியே அமெரிக்க ஆங்கில பதிப்புக்கள் அமையவேண்டும் என எண்ணியதுடன் அதனை நடைமுறையில் செயல்படுத்தினார்.

அதன் படியே அமெரிக்க ஆங்கில எழுத்திணக்கத்தில் மாற்றங்கள் ஏற்படலாயின.

அமெரிக்க ஆங்கில எழுத்திணக்கத்தின் மாற்றங்கள்

பிரிட்டிஸ் ஆங்கிலத்தில் “ c-e-n-t-r-e” என எழுதப்படுவதில் கடைசி எழுத்துக்களான “t-r-e” (டர்) உச்சரிப்பிற்கு அமைவாக இல்லை என்பது நோவா வெப்ஸ்ரரின் முடிவு. எனவே அமெரிக்க ஆங்கிலத்தில் “center” “c-e-n-t-e-r” என மாற்றப்பட்டது.

  • பிரிட்டிஸ் ஆங்கிலம்: centre, theatre
  • அமெரிக்க ஆங்கிலம்: center, theater

பிரிட்டிஸ் ஆங்கிலத்தின் “h-o-n-o-u-r” – எனும் சொல்லின் “u” ஒலிப்பில் இல்லாத அவசியமற்ற எழுத்தென கருதி, அமெரிக்க ஆங்கிலத்தில் இந்த “u” அகற்றப்பட்டு “h-o-n-o-r” என எழுதப்படுகின்றது.

  • பிரிட்டிஸ் ஆங்கிலம்: colour, honour, favourite
  • அமெரிக்க ஆங்கிலம்: color, honor, favorite

பிரிட்டிஸ் ஆங்கிலத்தில் “realise” என உச்சரிக்கும் போது இச்சொல்லின் கடைசி எழுத்துக்களான “se” ஒலிப்பு “றியலைZஸ்” என ஒலிப்பதால் இதுப்போன்ற சொற்களின் கடைசி எழுத்துக்கள் "ze" என அமெரிக்க ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகின்றது.

  • பிரிட்டிஸ் ஆங்கிலம்: realise, theorise, socialise, analyse
  • அமெரிக்க ஆங்கிலம்: realize, theorize, socialize, analyze

ஒரு சொல்லின் ஒவ்வொரு எழுத்தும் ஒலிப்புடன் பேசப்படவேண்டும் என்பது நோவா வெப்ஸ்ரரின் விதி முறையாகும்.

நோவா வெப்ஸ்ரரின் இவ்விதி முறைக்கமைய ஒரு சொல்லின் ஒவ்வொரு பாகங்களும் ஒலிப்புடன் பேசப்பட வேண்டும் எனும் முறை, அமெரிக்க ஆங்கிலத்தை எவரும் எளிதாக கற்கக் கூடியதாக இருக்கின்றது.

ஐரோப்பிய மற்றும் உலகின் பல்வேறு மொழியினரும் ஐக்கிய அமெரிக்காவில் குடியேறியதன் விளைவால், பற்பல பிற மொழிச் சொற்களும் அமெரிக்க ஆங்கிலத்தில் உள் நுழைந்தன. அடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்ட ஆப்பிரிக்கர்களின் மொழியில் இருந்தும் பலச் சொற்கள் அமெரிக்க ஆங்கிலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இச்சொற்கள் அமெரிக்க ஆங்கிலத்தின் சீர்த்திருத்தத்திற்கு பெரிதும் உதவிதாகக் கூறப்படுகின்றது.

பிரிட்டிஸ் ஆங்கிலத்தில் இல்லாத நிறையச் சொற்கள் அமெரிக்க ஆங்கிலத்தின் சொல்வளத்தை பெருக்கியுள்ளது. அமெரிக்க பூர்வீகக் குடிகளான செவ்விந்திய மொழிகளில் இருந்தும் பலச் சொற்களை அமெரிக்க ஆங்கிலம் உள்வாங்கிக்கொண்டுள்ளது.

இன்று அமெரிக்க, பிரிட்டிஸ் ஆங்கில சொற்களிற்கிடையே பல வேறுப்பாடுகள் உள்ளன. சில சமயம் இவர்கள் பேசும் போது ஒருவருக்கொருவர் விளங்கிக்கொள்ள முடியாத அளவில் பல சொற்கள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

உதாரணம் சில சொற்கள்:

  • பிரிட்டிஸ் ஆங்கிலம்: Flat
  • அமெரிக்க ஆங்கிலம்: Apartment
  • பிரிட்டிஸ் ஆங்கிலம்: Lift
  • அமெரிக்க ஆங்கிலம்: Elavator
  • பிரிட்டிஸ் ஆங்கிலம்: Chips
  • அமெரிக்க ஆங்கிலம்: Fries

மேலும் "Hollywood" அமெரிக்க திரைப்படத்துறை வளர்ச்சி, இசை, பாடல்கள், விஞ்ஞான வளர்ச்சியின் முதன்மை நிலை, நவீன கற்பித்தல் முறை, தொழில் வழங்கல், போன்றவைகள் மற்றும் அமெரிக்க இணையத் தொழில் நுட்பம் போன்றன பிரித்தானிய ஆங்கிலத்தை விடவும் அமெரிக்க ஆங்கிலத்தின் செல்வாக்கை உலகில் வலுப்படுத்தி வருகின்றது.

மேற்கோள்கள்

  1. David Crystal (1997). English as a Global Language. Cambridge: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-521-53032-6. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமெரிக்க_ஆங்கிலம்&oldid=666050" இலிருந்து மீள்விக்கப்பட்டது