நட்சத்திரங்களின் சாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 22°17′35.15″N 114°10′29.14″E / 22.2930972°N 114.1747611°E / 22.2930972; 114.1747611
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 32: வரிசை 32:
* [http://www.avenueofstars.com.hk/ '''நடத்திரங்களின் ஒழுங்கை''' அதிகாரபூர்வத் தளம்]
* [http://www.avenueofstars.com.hk/ '''நடத்திரங்களின் ஒழுங்கை''' அதிகாரபூர்வத் தளம்]
* [http://www.aviewoncities.com/hongkong/avenueofstars.htm About Avenue of Stars]
* [http://www.aviewoncities.com/hongkong/avenueofstars.htm About Avenue of Stars]

{{coord|22|17|35.15|N|114|10|29.14|E|region:HK_type:landmark|display=title}}


[[பகுப்பு:ஹொங்கொங்]]
[[பகுப்பு:ஹொங்கொங்]]
[[பகுப்பு:ஹொங்கொங் சுற்றுலா தளங்கள்]]
[[பகுப்பு:ஹொங்கொங் சுற்றுலா தளங்கள்]]
[[பகுப்பு:ஹொங்கொங் காண்போர் கவரிடங்கள்]]
[[பகுப்பு:ஹொங்கொங் காண்போர் கவரிடங்கள்]]

[[en:Avenue of Stars, Hong Kong]]
[[de:Avenue of Stars (Hongkong)]]
[[fr:Avenue des stars (Hong Kong)]]
[[he:שדרת הכוכבים (הונג קונג)]]
[[id:Avenue of Stars, Hong Kong]]
[[hu:Avenue of Stars (Hongkong)]]
[[vi:Đại lộ Ngôi sao (Hồng Kông)]]
[[zh-yue:香港星光大道]]
[[zh:香港星光大道]]

21:13, 5 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்

நட்சத்திரங்களின் ஒழுங்கையின் ஆரம்பத்தில் கட்டப்பட்டிருக்கும் சினிமா தேவதைச் சிலை
ஹொங்கொங் கதிரியக்க மின்னொளி வீச்சு காட்சி

நட்சத்திரங்களின் ஒழுங்கை (Avenue of Stars) என்பது ஹொங்கொங்கில், சிம் சா சுயி நகரில், விக்டோரியா துறைமுகத்திற்கு முன்பாக, கடல்மேல் கட்டப்பட்டுள்ள, ஒரு அகன்ற உலாச்சாலையாகும். இது ஹொங்கொங் திரைப்பட சினிமா நட்சத்திரங்களை கௌரவிக்கும் வகையில் கட்டப்பட்டது ஆகும். ஹொங்கொங் வரும் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் இடங்களில் இதுவும் ஒன்றாகும். இரவு நேரத்தில் மின்மினி மின்சார விளக்குகளுடன் உலாச்சாலை நெடுகிலும் பட்டொளி வீசி பார்ப்போரை பரவசப்படுத்தும்.

அத்துடன் இது ஹொங்கொங்கில் ஒவ்வொரு நாளும் பின்னேரம் 7:55 க்கு காட்டப்படும், உலகப் பிரசித்திப்பெற்றதும், கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றதுமான கதிரியக்க மின்னொளி வீச்சு[1]. பார்ப்பதற்கு உலகெங்கும் இருந்து வரும் பார்வையாளர்கள் கூடும் இடமும் ஆகும்.

அமைவிடம்

ஹொங்கொங்கில் கவுலூன் தீபகற்ப நிலப்பரப்பில், கவுலூன் சிம் சா சுயி எனும் நகரில் அமைந்துள்ளது. ஹொங்கொங்கில் தமிழர்கள் அடிக்கடி கூடும் இடமான சுங்கிங் கட்டத்திலிருந்து ஒரு சில மீட்டர்கள் தூரம் மட்டுமே உள்ளது.

வரலாறு

1982 இல் "புதிய உலக மேம்படுத்தல் கூட்டுத்தாபனம்" அல்லது "புதிய உலகக் குழுமம்" என அழைக்கப்படும் நிறுவனம், சிம் சா சுயி கிழக்கில், கடலையொட்டிய நிலப்பரப்பில், புதிய உலக மையம் எனும் பெயரில் இருந்த கட்டட நிறுவாகம் ஒரு உலாச்சாலையை நிறுவியிருந்தது. 2003 ஆம் ஆண்டு இந்த உலாச்சாலையை ஹொங்கொங் சினிமா நட்சத்திரங்களை கௌரவிக்கும் வகையில் மேலும் மேம்படுத்தும் நட்சத்திரங்களின் ஒழுங்கை அமைக்கும் திட்டத்தை "புதிய உலக மேம்படுத்தல் கூட்டுத்தாபனம்" முன்வைத்தது. அதன் கட்டுமாணப் பணிக்கான செலவி HK$40 மில்லியன் ஆகும் எனவும் அறிவித்தது. அந்த திட்டத்தை ஹொங்கொங் சுற்றாலா சபை, ஹொங்கொங் சுற்றுலா சபை ஆணையம், முசுப்பாற்றல் மற்றும் பண்பாட்டு சேவை திணைக்களம், ஹொங்கொங் அரசு மற்றும் ஹொங்கொங் திரைப்பட விருது வழங்கல் சபை போன்றன இணைந்து பொறுப்பேற்றன.

இந்த "நட்சத்திரங்களின் ஒழுங்கை" பொது மக்களின் பார்வைக்கு 2004 ஏப்பிரல் 28 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. எனினும் அதற்கு முதல் நாளான 27 ஆம் திகதி ஹொங்கொங் அரச தலைவர்கள் மற்றும் ஹொங்கொங் திரைப்பட விருது வழங்கல் சபையினரின் தலைமைத்தாங்கலின் கீழ் வைபவ ரீதியான திறப்பு விழா இடம்பெற்றது.

மேலதிகத் தகவல்கள்

இந்த நட்சத்திரங்களின் ஒழுங்கை வேறு பல உல்லாசப் பயணிகளைக் கவரும் இடங்களையும் அருகாமையில் கொண்டுள்ளது. அதாவது இந்த நட்சத்திரங்களின் ஒழுங்கையை அண்மித்தே ஹொங்கொங் கலை அருங்காட்சியகம், ஹொங்கொங் பண்பாட்டு மையம், வான்வெளி அருங்காட்சியம், ஹொங்கொங்கின் பழமையான நினைவு சின்னங்களில் ஒன்றான சிம் சா சுயி மணிக்கூட்டு கோபுரம் போன்றனவும் உள்ளன. அத்துடன் "புதிய உலக மையம்" கட்டடமும் இந்த நட்சத்திரங்களின் ஒழுங்கையை அண்மித்தே உள்ளது.

எதிரே காணப்படும் விக்டோரியா துறைமுகத்தையும், அக்கடல் தீவான ஹொங்கொங் தீவின் காட்சியையும் இந்த நட்சத்திரங்களின் ஒழுங்கையில் இருந்தே பார்வையிடலாம்.

இந்த நட்சத்திரங்களின் ஒழுங்கை 440 மீட்டர் நீளமான உலாச்சாலையாகும். இந்த உலாச்சாலை ஹொங்கொங் சினிமா நட்சத்திரங்களின் நூற்றாண்டு வரலாற்றை நினைவு கூறுவதாக உள்ளது. ஹொங்கொங்கின் பிரசித்திப்பெற்ற நட்சத்திரங்களான புரூசு லீ, யக்கிச்சான், யெட் லீ உற்பட நூற்றுக்கணக்கானோரின் கை தடங்களை நிலத்தில் பதிக்கப்பட்டு காண்போர் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தற்போது உயிருடன் இருக்கும் நட்சத்திரங்களாயின் அவர்களது இரண்டு உள்ளங்கை தடங்களையும் சிமெந்தில் பதித்து, கையெழுத்தும் இட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

தற்போது உயிருடன் இல்லாத முன்னாள் நட்சத்திரங்களாயின், அவர்களது உள்ளங்கை தடங்களை பதித்து பெறமுடியாத நிலையில், பெயர் மட்டுமே பொறிக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக புரூசு லீயின் பெயர் பொதித்த தடம் மட்டுமே உள்ளது.

அத்துடன் புரூசு லீயின் நினைவு வெங்கலச் சிலையொன்றும் இந்த நட்சத்திரங்களின் ஒழுங்கையில் வைக்கப்பட்டுள்ளது. மற்றும் புரூசு லீயின் நினைவு பொருற்கள் விற்பனையகம் ஒன்றும், யக்கிச்சானின் நினைவு பொருற்கள் விற்பனையகம் ஒன்றும் இங்கே உள்ளன.

நிழல் படங்களின் தொகுப்பு

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=நட்சத்திரங்களின்_சாலை&oldid=660795" இலிருந்து மீள்விக்கப்பட்டது