"1999 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
28 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
முதல்சுற்றில் இலங்கை அணி 5 போட்டிகளில் பங்கேற்று இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றது. மூன்று போட்டிகளில் தோல்வியுற்றது.
 
இலங்கை பங்கேற்ற ‘ஏ’பிரிவில் '''முதலாவது போட்டி''' இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்றது. இதில் இலங்கை அணி 48.3 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 204 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணி 24.5 ஓவர்களில் 2 விக்கட் இழப்பிற்கு 207 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கட்டுக்களினால் வெற்றியீட்டியது.
 
'''இரண்டாவது போட்டி''' தென்னாபிரிக்கா அணிக்கெதிராக நடைபெற்றது. இதில் தென்னாபிரிக்கா குறித்த 50 ஓவர்களில் 9 விக்கட் இழப்பிற்கு 199 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணியினால் 35.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 110 ஓட்டங்களையே பெற முடிந்தது. தென்னாபிரிக்கா அணி 89 ஓட்டங்களால் இலங்கையை வெற்றிகொண்டது.
 
'''மூன்றாவது போட்டி''' சிம்பாபே அணிக்கெதிராக நடைபெற்றது. இதில் சிம்பாபே அணி குறித்த 50 ஓவர்களில் 9 விக்கட் இழப்பிற்கு 192 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 46வது ஓவரில் 6 விக்கட் இழப்பிற்கு 198 ஓட்டங்களைப் பெற்று 4 விக்கட்டுக்களினால் சிம்பாபேயை வெற்றிகொண்டது.
 
'''நான்காவது போட்டி''' இந்தியா அணிக்கெதிராக நடைபெற்றது. இதில் இந்தியா அணி குறித்த 50 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 373 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இலங்கை அணியால் 42.3 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 216 ஓட்டங்களையே பெறமுடிந்தது. இப்போட்டியில் இந்தியா அணி 157 ஓட்டங்களினால் இலங்கை அணியை வெற்றிகொண்டது.
 
'''ஐந்தாவது போட்டி''' கென்யா அணிக்கெதிராக நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 8 விக்கட் இழப்பிற்கு 275 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பதிலுக்கு துடுப்பாடிய கென்யா அணியால் குறித்த 50 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 230 ஓட்டங்களையே பெறமுடிந்தது. இப்போட்டியில் இலங்கை அணி 45 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது.
 
சுப்பர்-6 நிலைப் போட்டி அணிக்கு 1996ம் ஆண்டு உலகக்கிண்ணத்தை வென்ற இலங்கை தேர்ந்தெடுக்கப்படவில்லை.
 
சுப்பர்-6 நிலைப் போட்டி அணிக்கு 1996ம் ஆண்டு உலகக்கிண்ணத்தை வென்ற இலங்கை தேர்ந்தெடுக்கப்படவில்லை.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/652575" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி