"1999 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
4,464 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
== பங்கேற்ற நாடுகள ==
டெஸ்ட் அந்தஸ்துப் பெற்ற அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்தியா, நியுசிலாந்து, தென்னாபிரிக்கா, சிம்பாபே இலங்கை, இந்தியா, பாக்கிஸ்தான், நாடுகளும் டெஸ்ட் அந்தஸ்துப் பெறாத பங்களாதேசம் கென்யா, அயர்லாந்து ஆகிய நாடுகளுமாக மொத்தமாக 12 நாடுகள் பங்கேற்றன. டெஸ்ட் அந்தஸ்து பெறாத நாடுகள் சர்வதேச கிரிக்கட் சம்மேளத்தினால் (ICC) நடத்தப்பட்ட தெரிவுப் போட்டியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவையாகும். இத்தொடரில் மொத்தம் 42 போட்டிகள் இடம் பெற்றன.
 
== பிரிவுகள் ==
 
== சுப்பர்-6 நிலைப் போட்டி ==
சுப்பர்-6 நிலைப் போட்டிகளின் 6 அணிகள் தெரிவாகின. அவை: பாக்கிஸ்தான், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நியுசிலாந்து, சிம்பாபே, இந்தியா
 
 
பந்துவீச்சில் வசீம்அக்ரம், சக்லேன்முஸ்தாக் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டுக்களை கைப்பற்றினர். இந்த ஆட்டத்துக்கான நடுவர்களாகக் களத்தில் மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த எஸ். ஏ. பக்னரும், இங்கிலாந்தைச் சேர்ந்த டி. ஆர். ஷெப்பேர்ட்டும், மூன்றாவது நடுவராக வெங்கட்ராகவனும் பணியாற்றினர். ரஞ்சன் மடுகல்ல ஆட்ட நடுவராகக் கடமையாற்றினார். போட்டியில் சிறப்பாட்டக்காரராக ஷேன் வோர்ன் தெரிவானார்.
 
 
== இலங்கை பங்பேற்ற போட்டிகள் ==
முதல்சுற்றில் இலங்கை அணி 5 போட்டிகளில் பங்கேற்று இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றது. மூன்று போட்டிகளில் தோல்வியுற்றது.
 
இலங்கை பங்கேற்ற ‘ஏ’பிரிவில் முதலாவது போட்டி இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்றது. இதில் இலங்கை அணி 48.3 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 204 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணி 24.5 ஓவர்களில் 2 விக்கட் இழப்பிற்கு 207 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கட்டுக்களினால் வெற்றியீட்டியது.
 
இரண்டாவது போட்டி தென்னாபிரிக்கா அணிக்கெதிராக நடைபெற்றது. இதில் தென்னாபிரிக்கா குறித்த 50 ஓவர்களில் 9 விக்கட் இழப்பிற்கு 199 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணியினால் 35.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 110 ஓட்டங்களையே பெற முடிந்தது. தென்னாபிரிக்கா அணி 89 ஓட்டங்களால் இலங்கையை வெற்றிகொண்டது.
 
மூன்றாவது போட்டி சிம்பாபே அணிக்கெதிராக நடைபெற்றது. இதில் சிம்பாபே அணி குறித்த 50 ஓவர்களில் 9 விக்கட் இழப்பிற்கு 192 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 46வது ஓவரில் 6 விக்கட் இழப்பிற்கு 198 ஓட்டங்களைப் பெற்று 4 விக்கட்டுக்களினால் சிம்பாபேயை வெற்றிகொண்டது.
 
நான்காவது போட்டி இந்தியா அணிக்கெதிராக நடைபெற்றது. இதில் இந்தியா அணி குறித்த 50 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 373 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இலங்கை அணியால் 42.3 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 216 ஓட்டங்களையே பெறமுடிந்தது. இப்போட்டியில் இந்தியா அணி 157 ஓட்டங்களினால் இலங்கை அணியை வெற்றிகொண்டது.
 
ஐந்தாவது போட்டி கென்யா அணிக்கெதிராக நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 8 விக்கட் இழப்பிற்கு 275 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பதிலுக்கு துடுப்பாடிய கென்யா அணியால் குறித்த 50 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 230 ஓட்டங்களையே பெறமுடிந்தது. இப்போட்டியில் இலங்கை அணி 45 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது.
 
சுப்பர்-6 நிலைப் போட்டி அணிக்கு 1996ம் ஆண்டு உலகக்கிண்ணத்தை வென்ற இலங்கை தேர்ந்தெடுக்கப்படவில்லை.
 
 
== வெளி இணைப்புகள் ==
 
 
[[இந்தக் கட்டுரையில் விரிவாக்க வேலை நடந்து கொண்டிருக்கிறது..]]
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/652574" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி