லுட்விக் போல்ட்சுமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி லுட்விக் போல்ட்ஸ்மேன், லுட்விக் போல்ட்ஸ்மான் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Scientist
{{Infobox Scientist
| name = லுட்விக் போல்ட்ஸ்மேன்
| name = லுட்விக் போல்ட்ஸ்மான்
| image = Boltzmann2.jpg|225px
| image = Boltzmann2.jpg|225px
| image_width = 225px
| image_width = 225px
வரிசை 23: வரிசை 23:
}}
}}


'''லட்விக் எட்வர்ட் போல்ட்ஸ்மேன்''' (Ludwig Eduard Boltzmann, [[பெப்ரவரி 20]], [[1844]] – [[செப்டம்பர் 5]], [[1906]]) ஒரு [[ஆஸ்திரியா|ஆஸ்திரிய]] [[இயற்பியல்|இயற்பியலாளர்]]. [[புள்ளியியல்]] [[இயந்திரவியல்]] மற்றும் புள்ளியியல் [[வெப்ப இயக்கவியல்]] துறைகளில் பங்களிப்புகளுக்காக அறியப்படுகிறார். நகர்ந்து கொண்டிருக்கும் வாயுக்கள் மீது சீரான ஆய்வுகள் மேற்கொண்டு இந்த இயக்கத்துகான சமன்பாட்டினை வரையறுத்து தந்தார். [[அணு]]வியல் கோட்பாடு முழுதும் அறியப்படாத கால கட்டத்திலேயே அத்துறைக்கு பல முக்கிய பங்களிப்புகளைச் செய்தார்.
'''லட்விக் எட்வர்ட் போல்ட்ஸ்மான்''' (Ludwig Eduard Boltzmann, [[பெப்ரவரி 20]], [[1844]] – [[செப்டம்பர் 5]], [[1906]]) ஒரு [[ஆஸ்திரியா|ஆஸ்திரிய]] [[இயற்பியல்|இயற்பியலாளர்]]. [[புள்ளியியல்]] [[இயந்திரவியல்]] மற்றும் புள்ளியியல் [[வெப்ப இயக்கவியல்]] துறைகளில் பங்களிப்புகளுக்காக அறியப்படுகிறார். நகர்ந்து கொண்டிருக்கும் வாயுக்கள் மீது சீரான ஆய்வுகள் மேற்கொண்டு இந்த இயக்கத்துகான சமன்பாட்டினை வரையறுத்து தந்தார். [[அணு]]வியல் கோட்பாடு முழுதும் அறியப்படாத கால கட்டத்திலேயே அத்துறைக்கு பல முக்கிய பங்களிப்புகளைச் செய்தார்.


==வாழ்க்கைக் குறிப்பு==
==வாழ்க்கைக் குறிப்பு==

10:03, 6 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

லுட்விக் போல்ட்ஸ்மான்
லுட்விக் போல்ட்ஸ்மேன் (1844-1906)
பிறப்பு(1844-02-20)பெப்ரவரி 20, 1844
வியன்னா, ஆஸ்திரியா
இறப்புசெப்டம்பர் 5, 1906(1906-09-05) (அகவை 62)
இத்தாலி
வாழிடம்ஆஸ்திரியா ஜெர்மனி
தேசியம்ஆஸ்திரியர்
துறைஇயற்பியலாளர்
பணியிடங்கள்கிராஸ் பல்கலைக்கழகம்
வியன்னா பல்கலைக்கழகம்
மியூனிக் பல்கலைக்கழகம்
லெய்ப்சிக் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்வியன்னா பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்யோசப் ஸ்டெபான்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
பால் எஹ்ரன்ஃபெஸ்ட்
பிலிப் பிராங்க்
கஸ்டாவ் ஹெர்கோல்ட்ஸ்
ஃபிராங்க் ஹோகேவார்
இக்னாசிஜ் கிளமென்சிக்
லிசெ மெய்ட்னர்
அறியப்படுவதுபோல்ட்ஸ்மேன் மாறிலி
போல்ட்ஸ்மேன் சமன்பாடு
ஹெச் கோட்பாடு
போல்ட்ஸ்மேன் பகிர்வு
ஸ்டேபான்-போல்ட்ஸ்மேன் விதி
கையொப்பம்

லட்விக் எட்வர்ட் போல்ட்ஸ்மான் (Ludwig Eduard Boltzmann, பெப்ரவரி 20, 1844செப்டம்பர் 5, 1906) ஒரு ஆஸ்திரிய இயற்பியலாளர். புள்ளியியல் இயந்திரவியல் மற்றும் புள்ளியியல் வெப்ப இயக்கவியல் துறைகளில் பங்களிப்புகளுக்காக அறியப்படுகிறார். நகர்ந்து கொண்டிருக்கும் வாயுக்கள் மீது சீரான ஆய்வுகள் மேற்கொண்டு இந்த இயக்கத்துகான சமன்பாட்டினை வரையறுத்து தந்தார். அணுவியல் கோட்பாடு முழுதும் அறியப்படாத கால கட்டத்திலேயே அத்துறைக்கு பல முக்கிய பங்களிப்புகளைச் செய்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

ஆஸ்திரியா நாட்டில் உள்ள வியன்னாவில் 1844 ல் பிறந்தார் போல்ட்ஸ்மேன். இவரின் தந்தை ஒரு வருமான வரி அதிகாரி. தாயும் பாட்டியும் கடிகாரம் விற்பனை செய்யும்  தொழில் செய்து வந்தார்கள். வசதி நிறைந்த போல்ட்ஸ்மேனுக்கு ஆசிரியர்கள் வீட்டுக்கே வந்து பாடம் நடத்தினார்கள். இவரது 14 வது வயதில் இவரின் தந்தை காலமாகிவிட்டார். படிப்பு பாதியில் நின்று போனது. இருந்தாலும் தனது 19 வது வயதில் வியன்னா பல்கலைகழகத்தில் இயற்பியல் பிரிவில் விடுபட்ட கல்லூரி படிப்பை தொடர்ந்தார். அன்றைக்கு பிரபலமாக இருந்த இயற்பியல் பேராசிரியர்கள் இவருக்குப் பாடம் எடுத்தார்கள். 1866 ல் முனைவர் பட்டம் பெற்றார்.

பின்னர் கணித இயற்பியலில் ஆழ்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு சாதித்தார், போல்ட்ஸ்மேன். அணு மற்றும் அணுதுகள்கள் மீது தான் போல்ட்ஸ்மேனின் முழு கவனமும் இருந்தது. 'மேக்ஸ்வெல் போல்ட்ஸ்மேன் பகிர்வு', 'மேக்ஸ்வெல் போல்ட்ஸ்மேன் புள்ளிவிவரம்' ஆகியவை தான் இயந்திரவியலில் அடிப்படை அஸ்திவாரக் கற்களாக திகழ்ந்து கொண்டிருகின்றன.

Ludwig Boltzmann and co-workers in Graz, 1887. (standing, from the left) Nernst, Streintz, Arrhenius, Hiecke, (sitting, from the left) Aulinger, Ettingshausen, Boltzmann, Klemenčič, Hausmanninger

போல்ட்ஸ்மேன் கண்டறிந்து அறிவித்த இத்ததகைய விதிகள், குவாண்டம் கோட்பாட்டின் துணையின்றி தன்னிச்சையாகவும் சுலபமாகவும் புள்ளி விவர அடிப்படையிலான இயந்திரவியலை புரிந்து கொள்ள மிகச்சிறந்த சாதனமாக அமைந்தன. வெப்பம் என்றால் என்ன? தட்பவெப்பம் எவ்வாறெல்லாம் ஓரிடத்தில் மாறுபடுகின்றது என்றெல்லாம் வெப்பம் என்பதன் முழு அர்த்தத்தையும் புரிந்து கொள்ள போல்ட்ஸ்மேன் கோட்பாடுகள் அமைந்தன. 'தெர்மோ டைனமிக்ஸ்'  என்பது இயற்பியலின் ஒரு முக்கிய கூறு. வெப்பம் மற்றும் வெப்பம் கொண்டு செல்வது என்பது பற்றிய படிப்பு. பெட்ரொலை எரிப்பதன் மூலம் ஏற்படும் வேப்பாதால் மோட்டார் வாகனங்கலை இயக்குவது இந்த கோட்பாட்டின் அடிப்படை தான். இந்த இயக்கத்தில் ஈடுபடும் வாயுக்களுக்கு ஓடும் அணுக்களை கொண்டும் சமன்பாடுகளை நிறுவி வடிவமைத்து விளக்கினார், போல்ட்ஸ்மேன். கணிதத்தின் புள்ளியியல் துணை கொண்டு இயற்பியலின் அணு ஓட்டத்தை அணுகி விளக்கிய முதல் விஞ்ஞானி இவரே.

1906 ல் தனது 62வது வயதில் போல்ட்ஸ்மேன் இயற்கை எய்தினார். போல்ட்ஸ்மேனின் கோட்பாடுகளுக்கு அவர் உயிருடன் இருக்கும் வரை ஒரு பக்கம் எதிர்ப்பும் இருந்து வந்தது. இதனால் அவர் மோசமான மனபாதிப்புக்குள்ளானார். எரிச்சல் மற்றும் விரக்தியின் உச்சிக்கே சென்று பலமுறை தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். வாழும் வரை இவரின் அருமையை புரிந்து கொள்ளாதவர்கள் இவரின் மறைவுக்குப் பின் தான் அதனை புரிந்து கொண்டார்கள்.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=லுட்விக்_போல்ட்சுமான்&oldid=643500" இலிருந்து மீள்விக்கப்பட்டது