நீல உத்தமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14: வரிசை 14:
அது என்ன மிருகமாக இருக்கும் என்று தன்னுடைய முதல் அமைச்சரை நீல உத்த்மன் கேட்டார். அதற்கு முதல் அமைச்சர் சிங்கம் என்று சொன்னார். சிங்கத்தைப் பார்த்தது நல்ல ஒரு சகுனம் என்று கருதி அந்த இடத்திற்குச் சிங்க புரம் என்று பெயர் வைத்தார். புரம் என்றால் நகரம். இதைப் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டதில் சிங்கப்பூரில் சிங்கம் இருந்ததற்கானச் சான்றுகள் இல்லை என்பது இப்போது தெரிய வருகிறது. நீல உத்தமன் பார்த்தது ஒரு புலியாக இருக்கலாம் அல்லது ஒரு வெள்ளை நரியாக இருக்கலாம் என்று வரலாற்று அறிஞர்கள் சொல்கின்றனர்.

பின்னர், அந்த இடத்தில் ஒரு நகரத்தை உருவாக்கினார். தன்னுடைய மக்களைச் சுமத்திரா தீவில் இருந்து கொண்டு வந்து குடியேற்றினார். சிங்கப்பூரைச் செல்வ சிறப்பு மிக்க நகரமாக மாற்றினார். 1372 ஆம் ஆண்டு நீல உத்தமன் காலமானார். அவ்ருடைய உடல் கென்னிங் குன்று கோட்டை எனும் புக்கிட் லாராஙான் எனும் இடத்தில் புதைக்கப் பட்டது. அவருடைய மனைவியின் உடலும் அங்கேதான் புதைக்கப் பட்டுள்ளது.
பின்னர், அந்த இடத்தில் ஒரு நகரத்தை உருவாக்கினார். தன்னுடைய மக்களைச் சுமத்திரா தீவில் இருந்து கொண்டு வந்து குடியேற்றினார்.
இந்தக் காலக் கட்டத்தில் சிங்கப்பூரில் இருந்த துமாசிக் எனும் சிற்றரசை தெமாகி என்பவர் ஆட்சி செய்து வந்தார். தெமாகிக்கு சீயாம் அரசு முழுப் பாதுகாப்பு வழங்கி வந்தது. இருப்பினும் நீல உத்தமன் துமாசிக் மீது படை எடுத்தார். ஆட்சி செய்த ஆளுநரையும் கொலை செய்தார். துமாசிக்கின் அரசர் ஆனார்.

அதன் பின்னர், சிங்கப்பூரைச் செல்வ சிறப்பு மிக்க நகரமாக மாற்றினார். 1372 ஆம் ஆண்டு நீல உத்தமன் காலமானார். அவ்ருடைய உடல் கென்னிங் குன்று கோட்டை எனும் புக்கிட் லாராஙான் எனும் இடத்தில் புதைக்கப் பட்டது. அவருடைய மனைவியின் உடலும் அங்கேதான் புதைக்கப் பட்டுள்ளது.

==வாரிசுகள்==
==வாரிசுகள்==

05:58, 1 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

நீல உத்தமன் அல்லது சாங் நீல உத்தமன் (Sang Nila Utama) என்பவர் ஸ்ரீ விஜயப் பேரரசின் இளவரசர். இவர் 1324ல் சிங்கப்பூர் சிற்றரசைத் தோற்றுவித்தார். இவரை ஸ்ரீ மகாராஜா சாங் உத்தாமா பரமேஸ்வரா பத்தாரா ஸ்ரீ திரிபுவனா எனும் உயர்வான அரச மொழியில் அழைத்தார்கள். திரிபுவனா என்றால் மூன்று உலகங்கள். அந்த மூன்று உலகங்களின் கோமகன் என்பதே அவருக்கு வழங்கப்பட்ட ஸ்ரீ மகாராஜா சாங் உத்தாமா பரமேஸ்வரா பத்தாரா ஸ்ரீ திரிபுவனா உயர் விருதின் பொருள் ஆகும். இவர் சீனா நாட்டுடன் நல்ல வலுவான உறவு முறைகளை ஏற்படுத்திக் கொண்டார். அவரைச் சிங்கப்பூரின் ஆளுநர் என்று 1366ல் சீனா அங்கீகாரம் செய்தது. இவர் 1372ல் காலமானார். அவருக்குப் பின்னர் அவருடைய மகன் பராக்கிரம வீரா சிங்கப்பூர் அரச பதவியை ஏற்றுக் கொண்டார்.

சிங்கப்பூரைக் கண்டுபிடித்தல்

நீல உத்தமன் (சாங் நீல உத்தமன்) என்பவர் ஒரு சிற்றசரர். தென் சுமத்திராவின் பலேம்பாங்கைச் சேர்ந்த ஸ்ரீ விஜயா பேரரசின் பரம்பரை வாரிசுகளில் ஒருவர். சின்ன வயதில் இருந்தே ஒரு புதிய நகரத்தை உருவாக்க வேண்டும் எனும் ஆசை அவரிடம் இருந்தது. பலேம்பாங் கடல் கரையோரத் தீவுகளுக்குச் சென்று பொருத்தமான ஓர் இடத்தைத் தேடினார். நீல உத்தமன் பல கப்பல் பயணங்களை மேற்கொண்டார். அந்தச் சமயத்தில் பந்தான் தீவுக்குப் போக வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டது. பந்தான் தீவு ரியாவ் தீவுக் கூட்டத்தில் இருக்கிறது. பந்தான் தீவு ஓர் இராணியாரின் பார்வையில் இருந்தது. ஒரு நாள் பந்தான் தீவுக்குப் பக்கத்தில் இருந்த மற்றொரு தீவுக்கு வேட்டையாடச் சென்றார்.

கண்ணில் பட்ட கலை மான்

வேட்டையாடிக் கொண்டிருக்கும் போது ஒரு கலை மான் கண்ணில் பட்டது. அதை விரட்டிக் கொண்டு ஒரு குன்றின் மீது ஏறினார். குன்றின் உச்சியை அடைந்ததும் அந்தக் கலைமான் திடீரென்று மாயமாய் மறைந்து விட்டது. அது மறைந்த இடத்தில் ஒரு பெரிய கல் பாறை இருந்த்து. நீல உத்தமன் அந்தக் கல் பாறையில் ஏறினான். கல் பாறையின் மேலே ஏறிப் பார்க்கும் போது ஒரு தீவு தெரிந்தது. வெள்ளை மணல் பரவிய கடல் கரை வெள்ளைக் கம்பளம் விரித்தது போல காட்சி அளித்தது. அந்த இயற்கையின் எழில் காட்சி அவரை மிகவும் கவர்ந்து விட்டது.

அந்தத் தீவின் பெயர் துமாசிக் என்று அவருடைய பாதுகாவலர்கள் சொன்னார்கள். அந்தத் தீவைப் போய்ப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தார். தீவை நோக்கி பயணம் செய்து கொண்டிடருக்கும் போது பயங்கரமான புயல்காற்று வீசியது. கப்பல் மூழ்கி விடும் ஆபத்தான நிலைமையும் ஏற்பட்டது. இருந்தாலும் அவற்றை எல்லாம் சமாளித்து துமாசிக் சென்று அடைந்தனர்.

இளவரசர் நீல உத்தமன் இப்போதைய சிங்கப்பூரின் முகத்துவாரத்தில் இறங்கினார். அடுத்து காட்டிற்குள் வேட்டையாடப் புறப்பட்டார். வேட்டையாடும் போது திடீரென்று ஓர் அதிசயமான விலங்கைப் பார்த்தார். அதன் உடல் சிகப்பாக இருந்தது. தலை கறுப்பாகவும் நெஞ்சுப் பகுதி வெள்ளையாகவும் இருந்தன. அந்த விலங்கு தோற்றத்தில் கம்பீரமாகவும் தோன்றியது.

அது என்ன மிருகமாக இருக்கும் என்று தன்னுடைய முதல் அமைச்சரை நீல உத்த்மன் கேட்டார். அதற்கு முதல் அமைச்சர் சிங்கம் என்று சொன்னார். சிங்கத்தைப் பார்த்தது நல்ல ஒரு சகுனம் என்று கருதி அந்த இடத்திற்குச் சிங்க புரம் என்று பெயர் வைத்தார். புரம் என்றால் நகரம். இதைப் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டதில் சிங்கப்பூரில் சிங்கம் இருந்ததற்கானச் சான்றுகள் இல்லை என்பது இப்போது தெரிய வருகிறது. நீல உத்தமன் பார்த்தது ஒரு புலியாக இருக்கலாம் அல்லது ஒரு வெள்ளை நரியாக இருக்கலாம் என்று வரலாற்று அறிஞர்கள் சொல்கின்றனர்.

பின்னர், அந்த இடத்தில் ஒரு நகரத்தை உருவாக்கினார். தன்னுடைய மக்களைச் சுமத்திரா தீவில் இருந்து கொண்டு வந்து குடியேற்றினார். இந்தக் காலக் கட்டத்தில் சிங்கப்பூரில் இருந்த துமாசிக் எனும் சிற்றரசை தெமாகி என்பவர் ஆட்சி செய்து வந்தார். தெமாகிக்கு சீயாம் அரசு முழுப் பாதுகாப்பு வழங்கி வந்தது. இருப்பினும் நீல உத்தமன் துமாசிக் மீது படை எடுத்தார். ஆட்சி செய்த ஆளுநரையும் கொலை செய்தார். துமாசிக்கின் அரசர் ஆனார்.

அதன் பின்னர், சிங்கப்பூரைச் செல்வ சிறப்பு மிக்க நகரமாக மாற்றினார். 1372 ஆம் ஆண்டு நீல உத்தமன் காலமானார். அவ்ருடைய உடல் கென்னிங் குன்று கோட்டை எனும் புக்கிட் லாராஙான் எனும் இடத்தில் புதைக்கப் பட்டது. அவருடைய மனைவியின் உடலும் அங்கேதான் புதைக்கப் பட்டுள்ளது.

வாரிசுகள்

நீல உத்தமனுக்கு ஆண் வாரிசுகள் மூவர் இருந்தனர். அந்த மூவரும் ஒருவருக்கு அடுத்து ஒருவராகச் சிங்கப்பூரை ஆட்சி செய்தனர். -ஸ்ரீ பராக்கிரம வீரா ராஜா (1372-1386) -ஸ்ரீ ராணா வீரா கர்மா (1386-1399) -ஸ்ரீ மகாரா பரமேஸ்வரா (1399-1401)

1401 சிங்கப்பூர் ஆட்சியில் ஓர் ஆட்சி கவிழ்ப்பு நடந்தது. அதில் பரமேஸ்வராவிற்குத் தீவிரமான பங்கு இருந்தது. பழிவாங்கப் படலாம் என்ற அச்சத்தில் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீல_உத்தமன்&oldid=640356" இலிருந்து மீள்விக்கப்பட்டது