ந. பாலேஸ்வரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கன் '''பிறப்பு மார்கழி 07, 1929 இலங்கை...
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கன் '''பிறப்பு [[மார்கழி 07]], [[1929]] இலங்கையில் அதிக நாவல்களை எழுதிய பெண் எழுத்தாளர். 'பாப்பா', 'ராஜி' ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதிவருகிறார்.
'''பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கன் '''பிறப்பு [[டிசம்பர் 07]], [[1929]] இலங்கையில் அதிக நாவல்களை எழுதிய பெண் எழுத்தாளர். 'பாப்பா', 'ராஜி' ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதிவருகிறார்.


== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==

17:59, 28 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கன் பிறப்பு டிசம்பர் 07, 1929 இலங்கையில் அதிக நாவல்களை எழுதிய பெண் எழுத்தாளர். 'பாப்பா', 'ராஜி' ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதிவருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

திருக்கோணமலை மாவட்டம் 'மனையாவழி' கிராமத்தைச் சேர்ந்த திருமதி பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கன் ‘பெண்மையின் தனித்துவத்தன்மை பிரதிபலிக்கும் ஆக்கங்களை எழுதிவரும்’ ஈழத்தின் முதலாவது பெண் நாவலாசிரியையாவார்.

முகாந்திரம் த.பாலசுப்ரமணியம், பா.கமலாம்பிகை தம்பதியினரின் புதல்வியாக திருகோணமலையில் பிறந்த இவர் தனது ஆரம்பக்கல்வியை திருகோணமலை ஸ்ரீசண்முக வித்தியாலயத்தில் பெற்றார். பின்பு சுன்னாகம் ஸ்ரீஸ்கந்தவரோதயாக் கல்லூரி, உடுவில் மகளிர் கல்லூரி, திருக்கோணமலை புனிதமரியாள் கல்லூரி ஆகியவற்றில் பயின்றார்.

தொழில்

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர்கல்லூரியில் பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியையான இவர் ஆசிரிய சேவையில் நீண்ட காலம் சேவையாற்றி ஓய்வுபெற்றார். இவர் தனது சேவைக்காலத்தில் பல நன்மாணாக்களை உருவாக்கியுள்ளதுடன் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக பாடுபட்டவருமாவார்.

இலக்கிய ஈடுபாடு

தான் கற்கும் காலத்திலிருந்து வாசிப்புத்துறையில் ஈடுபாடு மிக்கவராக இருந்த இவரின் கன்னிக்கதை ‘வாழ்வளித்த தெய்வம்’ எனும் தலைப்பில் தினகரன் பத்திரிகையில் 1957ம் ஆண்டு பிரசுரமானது. அன்றிலிருந்து இன்றுவரை இருநூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், முப்பதுக்கு மேற்பட்ட கட்டுரைகளையும்; எழுதியுள்ளார்.

இத்தகைய ஆக்கங்கள் இலங்கையிலுள்ள தேசியப் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ள அதே நேரத்தில் கல்கி, குங்குமம், உமா, தமிழ்ப்பாவைää கவிதை உறவு போன்ற இந்திய சஞ்சிகைகளிலும் ‘உலகம்’(இத்தாலி) ‘ஈழநாடு’(பாரிஸ்) ‘தமிழ்மலர்’(மலேசியா) ஆகிய சர்வதேச சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.

நாவல்கள்

பாலேஸ்வரி இதுவரை பன்னிரண்டு நாவல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இலங்கையில் பெண் எழுத்தாளர் ஒருவர் பன்னிரண்டு நாவல்களை எழுதி வெளியிட்டிருப்பது இலங்கை தமிழ் இலக்கிய வரலாற்றில் இதுவே முதற்தடவை.

விபரம் வருமாறு

  • ‘சுடர்விளக்கு’ - 1966 (திருகோணமலை தமிழ் எழுத்தாளர் சங்க வெளியீடு)
  • ‘பூஜைக்கு வந்த மலர்’ - 1971 (வீரகேசரி வெளியீடு)
  • ‘உறவுக்கப்பால்’ – 1975 (வீரகேசரி வெளியீடு)
  • ‘கோவும் கோயிலும்’ - 1990 ஜனவரி (நரசி வெளியீடு)
  • ‘உள்ளக்கோயில்’ - 1983 நவம்பர் (வீரகேசரி வெளியீடு) -
  • ‘உள்ளத்தினுள்ளே’-1 990 ஏப்ரல் (மட்டக்களப்பு செபஸ்டியர் அச்சகம் வெளியீடு)
  • ‘பிராயச்சித்தம்’ - 1984 ஜூலை (ரஜனி பப்ளிகேஸன்)
  • ‘மாது என்னை மன்னித்துவிடு’ - 1993 ஜனவரி (ஸ்ரீபத்திரகாலி அம்மன் தேவஸ்தால வெளியீடு)
  • ‘எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு’ – 1993 ஆகஸ்ட் (காந்தளகம் வெளியீடு இந்தியா)
  • ‘அகிலா உனக்காக’- இந்தியா) - 1993 (மகாராஜ் அச்சகம்
  • ‘தத்தைவிடு தூது’ – 1992 ஜூலை (மட்டக்களப்பு கத்தோலிக்க அச்சகம்)
  • ‘நினைவு நீங்காதது’ - 2003 (மணிமேகலைப்பிரசுரம் இந்தியா)

சிறுகதை தொகுதிகள்

இவர் இரண்டு சிறுகதை தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.

  • சுமைதாங்கி – 1973 (நரசு வெளியீடு)
  • தெய்வம் பேசுவதில்லை – 2000 (காந்தளகம் வெளியீடு இந்தியா)

ஆய்வு

பாலேஸ்வரியின் இலக்கிய ஆக்கங்களை பல்கலைக்கழக மட்டத்தில் இதுவரை மூன்று மாணவர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

  • பேராதனை பல்கலைக்கழக தமிழ் துறை இளங் கலைமாணி பட்டப்படிப்பினை நிறைவு செய்வதன் பொருட்டு 1999- 2000 கல்வியாண்டில் திருகோணமலையைச் சேர்ந்த செல்வி அப்துல்ரஹீம் சர்மிலா என்பவர் ‘பாலேஸ்வரியின் நாவல்களில் பெண்கள்’ எனும் தலைப்பில் ஆய்வு செய்து ஆய்வுக்கட்டுரை சமர்பித்துள்ளார்.
  • சப்ரகமுவ பல்கலைக்கழக தமிழ் விசேட துறை சிறப்புக்கலைமாணி பட்டப்படிப்பினை நிறைவு செய்வதன் பொருட்டு 1999- 2000 கல்வியாண்டில் செல்வி சிவகௌரி சிவராசா என்பவர் ‘பாலேஸ்வரியின் தமிழ் நாவல்கள பற்றிய ஓர்ஆய்வு’ எனும் தலைப்பில் ஆய்வு செய்து ஆய்வுக்கட்டுரை சமர்பித்துள்ளார்.
  • தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் விசேட துறை இளங்கலைமாணி பட்டப்படிப்பினை நிறைவு செய்வதன் பொருட்டு 2001- 2002 கல்வியாண்டில் செல்வி கச்சி முஹம்மது சில்மியா என்பவர் ‘ந.பாலேஸ்வரியின் சமூக சிறுகதைகள் ஒரு நோக்கு’ எனும் தலைப்பில் ஆய்வு செய்து ஆய்வுக்கட்டுரை சமர்பித்துள்ளார்.

பெற்ற விருதுகளும், கௌரவங்களும்.

  • ‘தமிழ் மணி’ (1992) - இந்து சமய கலாசார அமைச்சு
  • ‘சிறுகதை சிற்பி’ (1996) - மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை முத்தமிழ் மன்றம்
  • 'ஆளுனர் விருது' (1999-10-17) - வடக்கு கிழக்கு மாகாணக்கல்வி, பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு
  • கலாபூசண விருது (2002-12-26) அரச விருது.

இவை தவிர பல்வேறு பட்ட பிரதேச இலக்கிய விழாக்களில் பல்வேறு விருதுகளையும், கௌரவங்களையும் பெற்றுள்ளார்.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ந._பாலேஸ்வரி&oldid=639145" இலிருந்து மீள்விக்கப்பட்டது