மெர்சிடிஸ்-பென்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: hi:मर्सिडीज़ बेन्ज़
சி [r2.5.2] தானியங்கிஇணைப்பு: yo:Mercedes-Benz
வரிசை 66: வரிசை 66:
[[ur:مرسڈیز بنز]]
[[ur:مرسڈیز بنز]]
[[vi:Mercedes-Benz]]
[[vi:Mercedes-Benz]]
[[yo:Mercedes-Benz]]
[[zh:梅賽德斯-賓士]]
[[zh:梅賽德斯-賓士]]
[[zh-yue:平治]]
[[zh-yue:平治]]

19:06, 25 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

மெர்சிடிஸ்-பென்ஸ் சின்னம்

மெர்சிடிஸ்-பென்ஸ் தானுந்துகள் உலகின் மிகப்பழைய தானுந்து வகைகளில் ஒன்றாகும். மெர்சிடிஸ்-பென்ஸ் என்னும் அடையாளத் தொழிற்பெயரில் தானுந்துகள் மட்டுமன்றி பல்வேறுவகையான பேருந்துகளும், சுமையுந்துகளும் பிற சொகுசு வண்டிகளும் செய்யப்படுகின்றன. இன்று இந்த அடையாளத் தொழிற்பெயர் டைம்லர் ஏஜி ( Daimler AG) என்னும் தொழிலகத்திற்கு சொந்தமானது. முன்னர் (1926-1998) டைம்லர்-பென்ஸ் என்னும் தொழிலகத்திற்குச் சொந்தமானதாக இருந்தது.

வரலாறு

1880களில் காட்லீப் டைம்லர் (1834–1900), வில்ஹெல்ம் மேபாஃக்குடன் (1846–1929) பணி புரிந்து கொண்டிருந்த பொழுது காட்லீப் டைம்லரரும் ஏறத்தாழ 96 கி.மீ தொலைவில் தனியே பணியாற்றிக்கொண்டிருந்த கார்ல் பென்ஸ் (1844–1929) என்பவரும் தனித்தனியாக தாங்களே புதிதாக அறிந்து இயற்றிய உள் எரி பொறியால் உந்தப்பெற்ற தானுந்துதனை தென் டாய்ட்ச் நாட்டில் அன்று உருவாக்கினார்கள். 1880களில் தொடங்கிய இப்புதிய படைப்புகளின் பயனாய் டைம்லர்-பென்ஸ் என்னும் கும்பினி 1926ல் கூட்டாக உருவாகியது.

பென்ஸ் பெற்ற காப்புரிமம் அடிப்படையின் படி செய்த ஒப்புரு வண்டி. காலம் 1886 ஆம் ஆண்டு. இவ் வண்டி பெற்றோலிய எரிநீர்மத்தால் இயங்கிய உண்மையான முதல் தானுந்து என்று கருதுகிறார்கள்.
1894 ஆண்டு பென்ஸ் வேலோ என்னும் தானுந்து
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெர்சிடிஸ்-பென்ஸ்&oldid=637455" இலிருந்து மீள்விக்கப்பட்டது