க. அ. நீலகண்ட சாத்திரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 2: வரிசை 2:


==வாழ்க்கைக் குறிப்பு==
==வாழ்க்கைக் குறிப்பு==
நீலகண்ட சாஸ்திரி திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி என்ற ஊரில் ஒரு சாதாரண பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர்.இவர் திருநெல்வேலி இந்து கல்லூரியில் இடைநிலை வகுப்பை (FA) முடித்து விட்டு மேற்படிப்பைச் சென்னைக் கிருத்துவக் கல்லூரியில் தொடர்ந்தார். இவர் முதுகலைப் பட்டத்தில் (எம்.ஏ) சென்னை மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார். இவர் 1913 -1918 வரை இந்துக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். இவர் 1918 -1920 வரை வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில்வரலாற்றுப் பேராசிரியராக வேலை பார்த்தார். அதன் பின்பு புதிதாகத் தொடங்கப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கலைக்கல்லூரியின் முதல்வராக இவர் பொறுப்பேற்றார். பிறகு இவர் 1929ல் திருச்சி நேஷனல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்தார். அதே வருடம் சென்னை பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் தொல்லியல் பேராசியராக சாக்கோட்டை கிருஷ்ணசாமி அய்யங்காருக்குப்பின் பதவியேற்று 1946 வரை பணிபுரிந்தார்.இவர் 1952 -1955வரை மைசூர் பல்கலைக்கழகத்தில் இந்தியயில் பேராசிரியராக இருந்தார். 1954ல் இவர் மைசூர் மாநிலத்தின் தொல்லியல் துறையின் கெளரவ இயக்குனராக நியமிக்கப்பட்டார். இவர் 1950 களின் ஆரம்பத்தில் அகில இந்திய கீழைத்தேய மாநாட்டின் தலைவராக இருந்தார். 1957 -1972 வரை இவர் யுனெஸ்கோவின் தென்னிந்தியப் பாரம்பரிய கலாச்சார நிறுவனத்தின் இயக்குனராகப் பணிபுரிந்தார். 1957ல் இவருக்கு பத்ம பூஷண் விருது( இந்தியப் பொதுமக்களுக்குக்கு அளிக்கப்படும் மூன்றாவது உயரிய விருது) அளிக்கப்பட்டது.இவர் 1959 ல் கோடைப்பருவத்தில் சிகாகோ பல்கலைக்கழகத்திற்குச் சென்று தென்னிந்திய வரலாறு பற்றி பல சொற்பொழிவுகள் ஆற்றினார். இவர் 1975ல் காலமானார்.
நீலகண்ட சாஸ்திரி [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள]] [[கல்லிடைக்குறிச்சி]] என்ற ஊரில் ஒரு ஏழை பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். [[திருநெல்வேலி]] இந்து கல்லூரியில் இடைநிலை வகுப்பை (FA) முடித்து விட்டு மேற்படிப்பைச் சென்னைக் கிருத்துவக் கல்லூரியில் தொடர்ந்தார். முதுகலைப் பட்டத்தில் (எம்.ஏ) சென்னை மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார். 1913 முதல் 1918 வரை இந்துக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். 1918-20 காலகட்டத்தில் வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராக வேலை பார்த்தார். அதன் பின்பு புதிதாகத் தொடங்கப்பட்ட [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலை பல்கலைக்கழகத்தின்]] கலைக்கல்லூரியின் முதல்வராக பொறுப்பேற்றார். பிறகு 1929ல் திருச்சி நேஷனல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்தார். அதே வருடம் [[சென்னை பல்கலைக்கழகம்|சென்னை பல்கலைக்கழகத்தில்]] வரலாறு மற்றும் தொல்லியல் பேராசியராக [[சாக்கோட்டை கிருஷ்ணசாமி அய்யங்கார்|சாக்கோட்டை கிருஷ்ணசாமி அய்யங்காருக்கு]]ப்பின் பதவியேற்று 1946 வரை பணிபுரிந்தார்.
1952 முதல் 1955 வரை [[மைசூர் பல்கலைக்கழகம்|மைசூர் பல்கலைக்கழகத்தில்]] இந்தியவியல் பேராசிரியராக இருந்தார். 1954ல் [[மைசூர்]] மாநிலத்தின் தொல்லியல் துறையின் கெளரவ இயக்குனராக நியமிக்கப்பட்டார். 1950களின் ஆரம்பத்தில் அகில இந்திய கீழைத்தேய மாநாட்டின் தலைவராக இருந்தார். 1957 -1972 வரை இவர் [[யுனெஸ்கோ]]வின் தென்னிந்தியப் பாரம்பரிய கலாச்சார நிறுவனத்தின் இயக்குனராகப் பணிபுரிந்தார். 1957ல் இவருக்கு [[பத்ம பூஷண்]] விருது (இந்தியப் பொதுமக்களுக்குக்கு அளிக்கப்படும் மூன்றாவது உயரிய விருது) அளிக்கப்பட்டது. 1959 ல் கோடைப்பருவத்தில் [[சிக்காகோ பல்கலைக்கழகம்|சிக்காகோ பல்கலைக்கழகத்திற்குச்]] சென்று [[தென்னிந்திய வரலாறு]] பற்றி பல சொற்பொழிவுகள் ஆற்றினார். சாஸ்திரி 1975ல் காலமானார்.


== விமரிசனங்கள்==
== விமரிசனங்கள்==

15:36, 26 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்

கல்லிடைக்குறிச்சி அய்யா நீலகண்ட சாஸ்திரி (பி. ஆகஸ்ட் 12, 1892 - இ. ஜூன் 15, 1975) ஒரு இந்திய வரலாற்றாளர் மற்றும் திராவிடவியலாளர். இவர் தென்னிந்திய வரலாற்றாளர்களுள் குறிப்பிடத்தக்கவர்.

வாழ்க்கைக் குறிப்பு

நீலகண்ட சாஸ்திரி திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி என்ற ஊரில் ஒரு ஏழை பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். திருநெல்வேலி இந்து கல்லூரியில் இடைநிலை வகுப்பை (FA) முடித்து விட்டு மேற்படிப்பைச் சென்னைக் கிருத்துவக் கல்லூரியில் தொடர்ந்தார். முதுகலைப் பட்டத்தில் (எம்.ஏ) சென்னை மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார். 1913 முதல் 1918 வரை இந்துக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். 1918-20 காலகட்டத்தில் வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராக வேலை பார்த்தார். அதன் பின்பு புதிதாகத் தொடங்கப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கலைக்கல்லூரியின் முதல்வராக பொறுப்பேற்றார். பிறகு 1929ல் திருச்சி நேஷனல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்தார். அதே வருடம் சென்னை பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் தொல்லியல் பேராசியராக சாக்கோட்டை கிருஷ்ணசாமி அய்யங்காருக்குப்பின் பதவியேற்று 1946 வரை பணிபுரிந்தார்.

1952 முதல் 1955 வரை மைசூர் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் பேராசிரியராக இருந்தார். 1954ல் மைசூர் மாநிலத்தின் தொல்லியல் துறையின் கெளரவ இயக்குனராக நியமிக்கப்பட்டார். 1950களின் ஆரம்பத்தில் அகில இந்திய கீழைத்தேய மாநாட்டின் தலைவராக இருந்தார். 1957 -1972 வரை இவர் யுனெஸ்கோவின் தென்னிந்தியப் பாரம்பரிய கலாச்சார நிறுவனத்தின் இயக்குனராகப் பணிபுரிந்தார். 1957ல் இவருக்கு பத்ம பூஷண் விருது (இந்தியப் பொதுமக்களுக்குக்கு அளிக்கப்படும் மூன்றாவது உயரிய விருது) அளிக்கப்பட்டது. 1959 ல் கோடைப்பருவத்தில் சிக்காகோ பல்கலைக்கழகத்திற்குச் சென்று தென்னிந்திய வரலாறு பற்றி பல சொற்பொழிவுகள் ஆற்றினார். சாஸ்திரி 1975ல் காலமானார்.

விமரிசனங்கள்

புகழ் பெற்ற வரலாற்றாளர் ஆர். எஸ். சர்மா, க. அ. நீலகண்ட சாஸ்திரி ஒரு மீட்டுருவாக்குபவர் (revivalist) அல்லர் என்றும் அவரது புத்தகம் தென்னிந்திய வரலாறு ஆதாரபூர்வமானது என்றும் கூறியுள்ளார். தமிழ் வரலாற்றாளரான அ. இரா. வெங்கடாசலபதி, இருபதாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டின் சிறந்த வரலாற்றாளராக நீலகண்ட சாஸ்திரியைக் கருதுகிறார். 1915ல் வங்காள வரலாற்றாளர் ஜாதுநாத் சர்க்கார், கன்ஃபஷன்ஸ் ஆஃப் அ ஹிஸ்டரி டீச்சர் (மாடர்ன் ரிவ்யூ இதழ்) என்ற கட்டுரையில் வட்டார மொழிகளில் வரலாற்றுப் படைப்புகள் அதிகம் இல்லை என்றும் வட்டார மொழிகளில் வரலாற்றுப் புத்தகங்கள் அவசியம் வெளிவரவேண்டும் மற்றும் வரலாற்றுப் பாடம் வட்டார மொழிகளில் பயிற்றுவிக்கப் படவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். அப்போது திருநெல்வேலியில் ஆசிரியராக இருந்த நீலகண்ட சாஸ்திரி தமிழைவிட ஆங்கிலம்தான் தன் கருத்துக்களை எழுத வசதியாக இருப்பதாகவும் வட்டார மொழிகள் அந்த அளவுக்கு வளமானதாக இல்லாததுதான் அதற்குக் காரணம் எனவும் சர்க்காரின் கருத்துக்கு மறுப்புத் தெரிவித்துச் செய்தித்தாளில் எழுதியிருந்தார். சாஸ்திரியின் இக்கருத்துக்கள் தேசியகவி சுப்பிரமணிய பாரதியின் வன்மையானக் கண்டனத்துக்குள்ளானது.

நீலகண்ட சாஸ்திரிக்கு ஆழமான தமிழ் அறிவு கிடையாது என்றும் தமிழ் இலக்கியங்களை சா. வையாபுரி பிள்ளையின் உரைகளின் துணையோடுதான் புரிந்து கொள்ள முடிந்தது என்றும் வெங்கடாசலபதி கூறுகிறார். இதனால் நீலகண்ட சாஸ்திரியால் காலமாற்றத்துக்கு ஏற்றவகையில் தமிழ் வார்த்தைகளுக்குப் பொருள் கொள்ள இயலவில்லை என்றும் அவர் கருதுகிறார். மேலும் சாஸ்திரியின் காலத்தில் தமிழ் நாட்டில் கிடைத்த ஆதாரங்களை வேறு களங்களில் உள்ள ஆதாரங்களோடு ஒப்பிட்டு ஆராயும் பழக்கம் வரலாற்றியலில் இருக்கவில்லை எனவும் அவர் கூறுகிறார்.

எழுதிய நூல்கள்

இவர் தென்னிந்திய வரலாறு பற்றி 25 நூல்கள் எழுதியுள்ளார்.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=க._அ._நீலகண்ட_சாத்திரி&oldid=618924" இலிருந்து மீள்விக்கப்பட்டது