விக்கிரகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "சமயங்கள்"; Quick-adding category "சமய நடத்தைகளும் அனுபவங்களும்" (using HotCat)
வரிசை 4: வரிசை 4:





[[பகுப்பு:சமயங்கள்]]

[[பகுப்பு:சமய நடத்தைகளும் அனுபவங்களும்]]

17:50, 16 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்

விக்கிரகம் எனப்படுவது கல்லிலோ செப்பு முதலிய உலோகங்களிலோ (மாழைகளிலோ) செய்யப்பட்ட கடவுள் மற்றும் அருளாளர்களின் உருவச் சிலை ஆகும். முதலில் செய்யப்பட்ட விக்கிரகங்கள் கல்லிலேயே செய்யப்பட்டன. இன்றும் கோயில்களுக்குள் கருவறைக்குள் இருக்கும் மூல மூர்த்திகள் எனப்படும் விக்கிரகங்கள் பெரும்பாலும் கற்சிலைகளாகவே இருப்பதைக் காணமுடியும். உலோகங்களில் விக்கிரகங்களை உருவாக்கும் கலை பிற்காலத்திலேயே உருவானது. தமிழ்நாட்டில் பிற்காலச் சோழர் காலத்தில் உலோகத்தில் செய்யப்பட்ட விக்கிரகங்கள் பெருமளவில் பயன்பாட்டில் இருந்தன. இன்றைய கோயில்களில் திருவிழாக் காலங்களில் உலாக் கொண்டுசெல்வதற்காக உள்ள உற்சவ மூர்த்திகள் எனப்படும் விக்கிரகங்கள் உலோகத்தாலேயே செய்யப்படுவது வழக்கம்.

விக்கிரகங்களைச் செய்வதற்கு விதிமுறைகள் உள்ளன. பல்வேறு கடவுளர்க்கான விக்கிரகங்களுக்குரிய இயல்புகளும், அளவு முறைகளும் சிற்பநூல்களிலும் ஆகமங்களிலும் விளக்கப்பட்டுள்ளன. சிற்பிகள் இவ்வாறு சொல்லப்பட்ட முறைகளில் இருந்து வழுவாது விக்கிரகங்களைச் செய்கிறார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கிரகம்&oldid=613617" இலிருந்து மீள்விக்கப்பட்டது