சூலை 1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஅழிப்பு: bug:1 Juli |
சி தானியங்கிஇணைப்பு: mn:7 сарын 1 |
||
வரிசை 145: | வரிசை 145: | ||
[[mk:1 јули]] |
[[mk:1 јули]] |
||
[[ml:ജൂലൈ 1]] |
[[ml:ജൂലൈ 1]] |
||
[[mn:7 сарын 1]] |
|||
[[mr:जुलै १]] |
[[mr:जुलै १]] |
||
[[ms:1 Julai]] |
[[ms:1 Julai]] |
21:34, 5 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்
<< | சூலை 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMXXIV |
ஜூலை 1, கிரிகோரியன் ஆண்டின் 182வது நாளாகும். (நெட்டாண்டுகளில் 183வது நாள்). ஆண்டு முடிவிற்கு மேலும் 183 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1798 - நெப்போலியனின் படைகள் எகிப்தை அடைந்தன.
- 1825 - ஐக்கிய இராச்சிய நாணயங்கள் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்கள் ஆக்கப்பட்டன.
- 1851 - ஆஸ்திரேலியாவில் விக்டோரியா குடியேற்றப் பகுதி நியூ சவுத் வேல்சில் இருந்து பிரிக்கப்பட்டது.
- 1862 - ரஷ்யாவின் அரச நூலகம் அமைக்கப்பட்டது.
- 1867 - பிரித்தானிய வட அமெரிக்கச் சட்டம், 1867 கனடாவின் அரசமைப்புச் சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது; ஜோன் மாக்டொனால்ட் பிரதமராகப் பதவியேற்றார்.
- 1873 - பிரின்ஸ் எட்வேர்ட் தீவு கனடாக் கூட்டமைப்பில் இணைந்தது.
- 1876 - சேர்பியா துருக்கி மீது போரை அறிவித்தது.
- 1881 - உலகின் முதலாவது அனைத்துலக தொலைபேசித் தொடர்பு கனடாவின் நியூ பிரன்ஸ்விக் மாநிலத்துக்கும் ஐக்கிய அமெரிக்காவின் மேய்ன் மாநிலத்திற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது.
- 1916 - முதலாம் உலகப் போர்: பிரான்சில் சொம் என்ற இடத்தில் இடம்பெற்ற சண்டையின் முதல் நாளில் 20,000 பிரித்தானிய வீரர்கள் கொல்லப்பட்டனர், 40,000 பேர் காயமடைந்தனர்.
- 1921 - சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
- 1932 - ஏபிசி (அவுஸ்திரேலிய ஒலிபரப்புச் சேவை) ஆரம்பிக்கப்பட்டது.
- 1933 - சீனர்களின் குடியேற்றத்தை கனடா நாடாளுமன்றம் தடை செய்தது.
- 1947 - இந்தியாவுக்கு முழு விடுதலையை ஆகஸ்ட் 15 ஆம் நாளன்று வழங்க பிரித்தானிய நாடாளுமன்றம் முடிவெடுத்தது.
- 1960 - இத்தாலியிடம் இருந்து சோமாலியா விடுதலை அடைந்தது.
- 1960 - கானா குடியரசானது.
- 1962 - ருவாண்டா விடுதலை அடைந்தது.
- 1962 - பெல்ஜியத்திடம் இருந்து புருண்டி விடுதலை அடைந்தது.
- 1967 - ஐரோப்பிய சமூகம் உருவாக்கப்பட்டது.
- 1970 - அதிபர் யாஹ்யா கான் மேற்கு பாகிஸ்தானில் மாகாணங்களை அமைத்தார்.
- 1976 - மடெய்ரா தீவுகளுக்கு போர்த்துக்கல் சுயாட்சியை வழங்கியது.
- 1978 - அவுஸ்திரேலியாவின் வட மண்டலம் அவுஸ்திரேலிய பொதுநலவாயத்துக்குக் கீழ் சுயாட்சி பெற்றது.
- 1979 - சோனி நிறுவனத்தின் வோக்மன் அறிமுகம் செய்யப்பட்டது.
- 1990 - கிழக்கு ஜெர்மனி டொச் மார்க்கை தனது நாணய அலகாக ஏற்றுக் கொண்டது.
- 1991 - பிராக்கில் இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் வார்சா ஒப்பந்தம் அதிகாரபூர்வமாகக் கலைக்கப்பட்டது.
- 1997 - மக்கள் சீனக் குடியரசு ஹொங்கொங்கில் தனது ஆட்சியை ஆரம்பித்தது. 156 ஆண்டு கால பிரித்தானிய குடியேற்ற ஆட்சி முடிவடைந்தது.
- 2002 - சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது.
- 2002 - தெற்கு ஜெர்மனியில் இரண்டு விமானங்கள் வானில் மோதியாதில் 71 பேர் கொல்லப்பட்டனர்.
- 2004 - காசினி-ஹியூஜென்ஸ் விண்கலம் சனிக் கோளின் சுற்று வட்டத்திற்குள் சென்றது.
- 2006 - கொழும்பில் சுதந்திர ஊடகவியலாளர் சம்பத் லக்மால் சில்வா இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டார்.
பிறப்புகள்
- 1924 - தி. ச. வரதராசன், ஈழத்து மறுமலர்ச்சி எழுத்தாளர் (இ. 2006)
- 1927 - சந்திரசேகர், 11வது இந்தியப் பிரதமர்
- 1935 - டி. ஜி. எஸ். தினகரன், இந்தியாவின் முன்னணி கிறிஸ்தவ மறைபரப்புனர்
- 1961 - கல்பனா சாவ்லா, விண்வெளி வீராங்கனை (இ. 2003)
- 1961 - டயானா, வேல்ஸ் இளவரசி (இ. 1997)
- 1961 - கார்ல் லூயிஸ், அமெரிக்க ஓட்ட வீரர்
இறப்புகள்
- 1965 - வால்ரர் ஹமொண்ட் - ஆங்கில துடுப்பாளர் (பி. 1903)
- 2001 - நிக்கலாய் பாசொவ், ரஷ்ய இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1922)
- 1971 - வில்லியம் பிராக், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர் (பி. 1890)
சிறப்பு நாள்
- கனடா - கனடா நாள்
- கானா - குடியரசு நாள் (1960)
- சோமாலியா - விடுதலை நாள் (1960)
- ருவாண்டா - விடுதலை நாள் (1962)
- புருண்டி - விடுதலை நாள் (1962)