அசல் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎அசல் விமர்சனம்: விக்கிக்கு உகந்ததல்ல
வரிசை 103: வரிசை 103:


படத்தில் அஜித்துடன் மோத இருப்பது மொத்தம் 6 வில்லன்கள்.<ref name="6 வில்லன்கள்">{{cite web|author=வெப்துனியா|year=2009|title=அஜித்தின் ஆறு வில்லன்கள்|publisher=yahoo Tamil|accessdate=2009-05-06|url=http://in.tamil.yahoo.com/Entertainment/Bollywood/0905/06/1090506030_1.htm}}</ref>இந்த அரை டஜன் வில்லன்களையும் நெதர்லாந்து, துருக்கி, இத்தாலி, ஹங்கேரி என்று பறந்து சென்று பழிவாங்குகிறார் அஜித்.நடுவே சமீரா ரெட்டி மற்றும் பாவனாவுடனான சஹானா சாரலும் உண்டு.இசை பரத்வாஜ். படம் முழுக்க வெட்டருவா மீசையுடன் வருகிறார் அஜித்.இந்த புதிய தோற்றம் படத்துக்கே புதிய லுக்கை தரும் என்றார் சரண்.
படத்தில் அஜித்துடன் மோத இருப்பது மொத்தம் 6 வில்லன்கள்.<ref name="6 வில்லன்கள்">{{cite web|author=வெப்துனியா|year=2009|title=அஜித்தின் ஆறு வில்லன்கள்|publisher=yahoo Tamil|accessdate=2009-05-06|url=http://in.tamil.yahoo.com/Entertainment/Bollywood/0905/06/1090506030_1.htm}}</ref>இந்த அரை டஜன் வில்லன்களையும் நெதர்லாந்து, துருக்கி, இத்தாலி, ஹங்கேரி என்று பறந்து சென்று பழிவாங்குகிறார் அஜித்.நடுவே சமீரா ரெட்டி மற்றும் பாவனாவுடனான சஹானா சாரலும் உண்டு.இசை பரத்வாஜ். படம் முழுக்க வெட்டருவா மீசையுடன் வருகிறார் அஜித்.இந்த புதிய தோற்றம் படத்துக்கே புதிய லுக்கை தரும் என்றார் சரண்.

== அசல் விமர்சனம் ==
தம்பியை காப்பாற்ற கிளம்பும் அண்ணன் அதே தம்பியை போட்டு தள்ளுவதுதான் நாட். ஆறிப்போன ரசத்தை அல்ட்ரா மாடர்ன் கிளாசில் ஊற்றி தந்த மாதிரி காஸ்ட்லி மேக்கிங். இதே 'நாட்' கே.எஸ்.ரவிக்குமாரிடம் கிடைத்திருந்தால், காணாபோனான் பட்டியை தாண்டாமலே கதையை முடித்திருப்பார். இதிலோ பாரீஸ் நகரத்தை காட்டி பளபளக்க வைத்திருக்கிறார்கள். பாரீஸ் டவர் உயரத்திற்கு ஸ்கோர் பண்ணியிருக்கிறார் தல. அதுவும் அப்பா பிள்ளை என்று டபுள் ஷாட்!

அமைதிக்காக ஆயுதம் விற்கிறார் அப்பா அஜீத். முறையான பெண்டாட்டிக்கு பிறந்த பிள்ளைகளான சம்பத்தும், ராஜீவ் கிருஷ்ணாவும் அழிவுக்காக ஆயுதங்களை விற்க முயல, கள்ள மனைவிக்கு பிறந்த பிள்ளையான அஜீத்தை வைத்து அவர்களை கண்டிக்கிறார் அப்பா. ஆரம்பமாகிறது வார். இறுதியில் அப்பாவை கொன்றதே சொந்த சகோதரர்கள்தான் என்பது தெரியவர, அவர்களை நார் நாராக கிழிக்கிறார் இளைய அஜீத்.

ஊதி தள்ளுகிறார் தல. அதுவும் அவர் குடிக்கும் சுருட்டின் அளவு ஒரு கச்சிதமான கட்-அவுட்டின் உயரத்திலிருக்கிறது. ஆனால் அந்த அமைதியும், ஆழ புகைக்கும் ஸ்டைலும், ஒரு இழுப்பு இழுக்கலாமே என்று நம்மையே உந்த வைக்குதேய்யா... தனது தம்பியை தேடி மும்பை வரும் அஜீத், சர்வ அலட்சியமாக வில்லனை கொன்று போடுகிற காட்சி நிஜமாகவே விறுவிறுப்பு. இவரது ஒவ்வொரு அதிரடிக்கும் 'தல போல வருமா...' என்று இரண்டு வரி பாட்டை போட்டே ரீரெக்கார்டிங் வேலையை குறைத்துக் கொண்டிருக்கிறார் இசையமைப்பாளர்.

செக்ரட்டரி சமீரா அஜீத் காதலும், பாவனா அஜீத் காதலும் ஒரு ஸ்லோ சைக்கிள் ரேஸ் போல ரொம்பவே நிதானம். அஜீத்தின் சட்டையை போட்டுக் கொண்டு நிற்கும் சமீராவிடமிருந்து அந்த சட்டையை பறித்துவிட வேண்டும் என்று பாவனா துடிப்பதும், சமீராவுக்கும் அஜீத்திற்குமான பழக்கம் பல வருடங்களுக்கு மேல் என்பதை தெரிந்து ஏக்க பெருமூச்சு விடுவதும், மயிலறகால் வருடுகிற காட்சிகள்.

அசத்தலான ப்ளு டோனில் கூட சமீராவின் வயசு எட்டிப்பார்த்து இளிக்கிறது.

எத்தனையோ செலவு செய்தவர்கள் காமெடிக்கு ஒரு தொகையை ஒதுக்கியிருக்கலாம். யூகி சேதுவின் காமெடிக்கு சேதுவாகிறது தியேட்டர். பேனா வசப்படுகிற அளவுக்கு நடிப்பு வசப்படவில்லை யூகிக்கு.

அசத்தல் அஜீத்திற்கு பிறகு, மற்றுமொரு அசத்தலாக தெரிபவர் ஒளிப்பதிவாளர் பிரஷாந்த். ஒவ்வொரு காட்சியையும் இமைக்க மறந்து ரசிக்கலாம். ஒரு சாக்கடையை கூட நைல் நதியாக காட்டுவார் போலிருக்கிறது. 'ஃபிரஷ்' ஷாந்த்!

மனசுக்குள் புகுந்து இசைபிரவாகம் எடுத்திருக்கிறார் பரத்வாஜ். ஆனால் பாடல்களை துண்டு துண்டாக பந்தாடியிருப்பதுதான் ஏனென்று புரியவில்லை. ஆனாலும் நெளிய வைக்காத ஷார்ப் எடிட்டிங்!

பல படங்களின் நகல்தான் என்றாலும், அசல் அசத்தலோ அசத்தல்!


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

07:01, 14 செப்டெம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

அசல்
இயக்கம்சரண்
தயாரிப்புராம்குமார்
பிரபு
கதைசரண்
யூகி சேது
கதைசொல்லிசரண்
இசைபரத்வாஜ்
வை - கின்ஸ்
நடிப்புஅஜித் குமார்
சமீரா ரெட்டி
பாவனா
பிரபு
ராஜீவ் கிருஷ்ணா
சம்பத்
பிரதிப் ராவட்
யூகி சேது
ஒளிப்பதிவுபிரசாந்
படத்தொகுப்புஅந்தோனி
விநியோகம்சிவாஜி பிலிம்ஸ்
வெளியீடுபெப்ரவரி 5, 2010 (2010-02-05)
நாடு இந்தியா
மொழிதமிழ்

அசல் சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில், சரணின் இயக்கத்தில் பெப்ரவரி 5,2010 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். அஜித் குமார், சமீரா ரெட்டி, பாவனா மற்றும் பிரபு ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். சரண் காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் ஆகிய அஜித்தின் வெற்றி படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது, இதனால் ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அசல் படத்தின் கதையை யூகி சேது எழுதுகிறார், யூகி சேது வில்லன் படத்திற்கு கதை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வகை

கமர்ஷியல், மசாலாப்படம்


பாத்திரங்களும் தொழிநுட்ப கலைஞர்களும்

பாத்திரங்கள்

நடிகர்கள் பாத்திரம்
அஜித் குமார் சிவா மற்றும் சிவாவின் தந்தை
பிரபு மிராசி
சமீரா ரெட்டி சாரா
பாவனா சுலபா
யூகி சேது டொண் சமோசா
சுரேஷ் டேணியல் தர்மராஜ்
சம்பத் சேம்
ராஜீவ் கிருஷ்ணா[1] விக்கி
பிரதிப் ராவட் கலிவர்தன்
கெலி டொர்ஜு செட்டி
ஆதித்யா
கரண் மீயோ சப்புரு


தொழிநுட்ப கலைஞர்கள்

சிவா‌ஜி பிலிம்ஸ் தயாரித்த படத்தில், அ‌ஜித் ஜோடியாக சமீராரெட்டி மற்றும் பாவனா நடித்துள்ளனர். சரணின் பிற படங்கள் போலவே இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார். நீரவ்சாவின் அசிஸ்டெண்ட் பிரசாந்த் படத்துக்கு ஒளிப்பதிவு. விவேக் கருணாகரன் காஸ்ட்யூம். படத்தை தயாரித்ததுடன் பிரபுவும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். முதல் மூன்று படங்களுக்கு இசையமைத்த பரத்வா‌ஜ் நான்காவது முறையாக அ‌ஜித், சரண் கூட்டணியுடன் ஒன்றிணைகிறார்.

பாடல்

இப் படத்திற்கு ஐந்தாவது முறையாக அஜித்துடன் இணையும் பரத்வாஜ் மற்றும் ஸ்காட்லாந்து இசை குழுவினரான வை - கின்ஸ் இசை அமைக்கவுள்ளர்.

பாடல் பாடியவர்கள் வரிகள்
அசல் சுனிதா மேணன் வைரமுத்து
குதிரைக்கு தெரியும் சூர்முகி, ஹீரீ சரன் வைரமுத்து
டொட்டொடய்ங் முகேஷ், ஜணனி வைரமுத்து
எங்கே எங்கே எஸ். பி. பாலசுப்பிரமணியம் வைரமுத்து
துஷ்யந்தா சூர்முகி, குமரன் வைரமுத்து
எம் தந்தை பரத்வாஜ் வைரமுத்து
எங்கே எங்கே கார்த்திகேயன் மற்றும் குழுவினர் வைரமுத்து

படப்பிடிப்பு

படப்பிடிப்பு 2009 ஜுன் ஆரம்பித்து 31ம் திகதி டிசம்பர் நிறைவடைந்தது.

ஐந்தாவது முறையாக அஜித்துடன் இணையும் சரண்

“ஏழு வருஷத்துக்கு முன் எனக்குள் விதைப்போட்ட ‘கரு’தான் இப்போ ‘அசல்’ கதையாக வேர்விட்டு நிற்கிறது. நம்பிக்கை துரோகத்திற்கு எதிரா வெடித்து கிளம்பும் ஒருவனின் கதைதான் இது.

வில்லனை பலிவாங்குறதோட சுபம் போடுற வழக்கமான படமா இது இருக்காது. டான், இண்டர்நேஷனல் சேஸிங்னு இன்ட்ரஸ்டிங்கான திரைக்கதையை ட்ரை பண்ணியிருக்கேன். ”பாட்ஷா ரஜினி மாதிரியான கேரக்டர்தான் அஜித்துக்கு. படம் வந்தபிறகு அஜித்தை சூப்பர் ஸ்டாரா கொண்டாடப்போவது நிச்சயம். கெட்டப்,மேனரிசம்,ஸ்டைல்னு புது அஜித்துக்கு நிறையவே தீனி இருக்கு”. கிரீஸ்,துருக்கி,இத்தாலி,துபாய்,சிங்கப்பூர்னு பல இடங்களில் படமாகிறது. மே மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பம்.

படத்தில் அஜித்துடன் மோத இருப்பது மொத்தம் 6 வில்லன்கள்.[2]இந்த அரை டஜன் வில்லன்களையும் நெதர்லாந்து, துருக்கி, இத்தாலி, ஹங்கேரி என்று பறந்து சென்று பழிவாங்குகிறார் அஜித்.நடுவே சமீரா ரெட்டி மற்றும் பாவனாவுடனான சஹானா சாரலும் உண்டு.இசை பரத்வாஜ். படம் முழுக்க வெட்டருவா மீசையுடன் வருகிறார் அஜித்.இந்த புதிய தோற்றம் படத்துக்கே புதிய லுக்கை தரும் என்றார் சரண்.

மேற்கோள்கள்

  1. வெப்துனியா (2009). "அசல் வில்லன்". Tamil webdunia. பார்க்கப்பட்ட நாள் புதன், 3 ஜூன் 2009. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. வெப்துனியா (2009). "அஜித்தின் ஆறு வில்லன்கள்". yahoo Tamil. பார்க்கப்பட்ட நாள் 2009-05-06.


வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசல்_(திரைப்படம்)&oldid=593464" இலிருந்து மீள்விக்கப்பட்டது