பேட்ஃசின் போலியொப்புரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உ.தி.
சி →‎வரலாறு: எ.பி., உ.தி.
வரிசை 6: வரிசை 6:
== வரலாறு ==
== வரலாறு ==
[[படிமம்:H.W. Bates.JPG|thumb|இவ் உய்வுமுறையைக் கண்டறிந்த என்ரி வால்டர் பேட்டிசு]]
[[படிமம்:H.W. Bates.JPG|thumb|இவ் உய்வுமுறையைக் கண்டறிந்த என்ரி வால்டர் பேட்டிசு]]
[[என்ரி வால்டர் பேட்டிசு]] (''Henry Walter Bates'') (1825–1892) என்ற [[இங்கிலாந்து|ஆங்கில]] [[இயற்கை வரலாறு|இயற்கையியலாளர்]] [[ஆல்ஃவிரடு அரசல் வாலேசு]] என்ற அறிஞருடன் இணைந்து [[தென் அமெரிக்கா]]வில் உள்ள [[அமேசான் மழைக்காடு]]களில் 1848-ம் ஆண்டுவாக்கில் ஆய்வு நடத்திக் கொண்டிருந்தார். 1852-ல் வாலேசு நாடு திரும்பினார். ஆனால், பேட்டிசு அடுத்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்கி இருந்து கள ஆய்வுகளை மேற்கொண்டார். தன் ஆய்வுக்காக [[இத்தோமினே]] (குமட்டல் சுரப்பி கொண்டவை), [[நீளிறகிகள்]] (Heliconiinae) ஆகிய குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான [[பட்டாம்பூச்சி]] இனங்களைச் சேகரித்து வந்தார். அவற்றின் தோற்ற ஒற்றுமை அடிப்படையில் ஒழுங்கபடுத்த முயன்றபோது பல முரண்பாடுகளைக் கண்டார். வெளித்தோற்ற அளவில் வேறுபடுத்திக் காண இயலாத அளவுக்கு ஒற்றுமை கொண்டிருந்த இனங்களைப் பார்த்தால் அவை ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாத பண்புகளைக் கொண்ட இனங்களாக இருந்தன. இங்கிலாந்து திரும்பியதும் அவரது அவதானிப்பின் அடிப்படையில் அமைந்த ஒப்புப்போலிப் பண்புக் கருத்தை முன்வைத்து இலண்டன் இலின்னேயியசுச் சங்கக் கூட்டத்தில் அய்வுக்கட்டுரை ஒன்றை 1861-ம் ஆண்டு நவம்பர் 21-ம் நாளன்று படித்தார். அக்கட்டுரை 1862-ம் ஆண்டு 'Contributions to an Insect Fauna of the Amazon Valley' என்ற பெயரில் வெளிவந்தது.<ref>Bates, H. W. (1961) Contributions to an insect fauna of the Amazon valley. Lepidoptera: Heliconidae. ''Transactions of the Linnean Society''. '''23''':495-566.</ref> அதைத் தொடர்ந்து தனது அமேசான் துய்ப்பில் கண்டவற்றைப் பற்றி விரிவாக "அமேசான் ஆற்றைப் பற்றி ஒரு இயற்கையியலாளன்" (''[[The Naturalist on the River Amazons]]'') என்ற தலைப்பில் நூலாக எழுதினார்.<ref>Bates H. W. 1863. ''{{gutenberg|no=2440|name=The Naturalist on the River Amazons}}'' Murray, London.</ref> அவரது இந்த கண்டுபிடிப்புகளும் கணிப்புகளும் நெடிய விவாதங்களுக்கு வித்திட்டன.
[[என்ரி வால்டர் பேட்டிசு]] (''Henry Walter Bates'') (1825–1892) என்ற [[இங்கிலாந்து|ஆங்கில]] [[இயற்கை வரலாறு|இயற்கையியலாளர்]] [[ஆல்ஃவிரடு அரசல் வாலேசு]] என்ற அறிஞருடன் இணைந்து [[தென் அமெரிக்கா]]வில் உள்ள [[அமேசான் மழைக்காடு]]களில் 1848-ம் ஆண்டுவாக்கில் ஆய்வு நடத்திக் கொண்டிருந்தார். 1852-ல் வாலேசு நாடு திரும்பினார். ஆனால், பேட்டிசு அடுத்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்கி இருந்து கள ஆய்வுகளை மேற்கொண்டார். தன் ஆய்வுக்காக [[இத்தோமினே]] (குமட்டல் சுரப்பி கொண்டவை), [[நீளிறகிகள்]] (Heliconiinae) ஆகிய குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான [[பட்டாம்பூச்சி]] இனங்களைச் சேகரித்து வந்தார். அவற்றைத் தத்தமது தோற்ற ஒற்றுமை அடிப்படையில் ஒழுங்குபடுத்த முயன்றபோது பல முரண்பாடுகளைக் கண்டார். வெளித்தோற்ற அளவில் வேறுபடுத்திக் காண இயலாத அளவுக்கு ஒற்றுமை கொண்டிருந்த இனங்களைப் பார்த்தால் அவை ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாத பண்புகளைக் கொண்ட இனங்களாக இருந்தன. இங்கிலாந்து திரும்பியதும் அவரது அவதானிப்பின் அடிப்படையில் அமைந்த ஒப்புப்போலிப் பண்புக் கருத்தை முன்வைத்து இலண்டன் இலின்னேயியசுச் சங்கக் கூட்டத்தில் ஆய்வுக்கட்டுரை ஒன்றை 1861-ம் ஆண்டு நவம்பர் 21-ம் நாளன்று படித்தார். அக்கட்டுரை 1862-ம் ஆண்டு 'Contributions to an Insect Fauna of the Amazon Valley' என்ற பெயரில் வெளிவந்தது.<ref>Bates, H. W. (1961) Contributions to an insect fauna of the Amazon valley. Lepidoptera: Heliconidae. ''Transactions of the Linnean Society''. '''23''':495-566.</ref> அதைத் தொடர்ந்து தனது அமேசான் துய்ப்பில் கண்டவற்றைப் பற்றி விரிவாக "அமேசான் ஆற்றைப் பற்றி ஒரு இயற்கையியலாளன்" (''[[The Naturalist on the River Amazons]]'') என்ற தலைப்பில் நூலாக எழுதினார்.<ref>Bates H. W. 1863. ''{{gutenberg|no=2440|name=The Naturalist on the River Amazons}}'' Murray, London.</ref> அவரது இந்த கண்டுபிடிப்புகளும் கணிப்புகளும் நெடிய விவாதங்களுக்கு வித்திட்டன.


பேட்டிசு நெருங்கிய மரபுத் தொடர்பு இல்லாத இனங்களிடையே அமைந்துள்ள தோற்ற ஒற்றுமை ஒரு [[கோண்மா எதிர்ப்புத் தகவமைவு]] என்ற கருத்தை முன்வைத்தார். மேலும், சில இனங்கள் வியத்தக்க அளவுக்கு பளிச்சிடும் நிறங்களையும் கொண்டு, ஏதோ தன்னைப் பிடிக்க வரும் கோண்மாக்களைச் சீண்டிப் பார்ப்பது போல மெதுவாகப் பறப்பதையும் சுட்டிக் காட்டினார். இத்தகைய பட்டாம்பூச்சிகள் பறவைகளுக்கும் பிற பூச்சித்தின்னிகளுக்கும் உண்ணுதற்கு உகந்தவையாக இல்லாமல் இருக்கக் கூடும் என்று அவர் கருதினார். இதே அடிப்படையிலேயே இவ்வினங்களைப் போன்ற போலித்தோற்றம் கொண்ட பிற இனங்களும் தமது நிற அமைப்பைப் பெற்றிருக்கலாம் என்ற வாதத்தை அவர் முன்வைத்தார். அந்தப் போலிகள் குமட்டல் தன்மையையோ நச்சுத்தன்மையையோ பெற்றிருக்க வேண்டியதில்லை.
பேட்டிசு நெருங்கிய மரபுத் தொடர்பு இல்லாத இனங்களிடையே அமைந்துள்ள தோற்ற ஒற்றுமை ஒரு [[கோண்மா எதிர்ப்புத் தகவமைவு]] என்ற கருத்தை முன்வைத்தார். மேலும், சில இனங்கள் வியத்தக்க அளவுக்கு பளிச்சிடும் நிறங்களையும் கொண்டு, ஏதோ தன்னைப் பிடிக்க வரும் கோண்மாக்களைச் சீண்டிப் பார்ப்பது போல மெதுவாகப் பறப்பதையும் சுட்டிக் காட்டினார். இத்தகைய பட்டாம்பூச்சிகள் பறவைகளுக்கும் பிற பூச்சித்தின்னிகளுக்கும் உண்ணுதற்கு உகந்தவையாக இல்லாமல் இருக்கக் கூடும் என்று அவர் கருதினார். இதே அடிப்படையிலேயே இவ்வினங்களைப் போன்ற போலித்தோற்றம் கொண்ட பிற இனங்களும் தமது நிற அமைப்பைப் பெற்றிருக்கலாம் என்ற வாதத்தை அவர் முன்வைத்தார். அந்தப் போலிகள் குமட்டல் தன்மையையோ நச்சுத்தன்மையையோ பெற்றிருக்க வேண்டியதில்லை.

18:00, 29 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்

என்ரி வால்டர் இவ்விளைவை விளக்கும் விதமாகச் சேகரித்த பட்டாம்பூச்சிகள்

பேட்டிசின் நெட்டாங்கு[1] அல்லது பேட்டிசின் ஒப்புப்போலிப்பண்பு[2] (Batesian mimicry) என்பது ஊறு விளைவிக்காத ஓர் உயிரினம் கோண்மாக்களிடமிருந்து தப்பும் விதமாகத் தீவிளைவு கொண்ட மற்றோர் உயிரினத்தையொத்த உடலமைப்பையோ வேறு அடையாளங்காணும் பண்பையோ பெறும் படிவளர்ச்சித் தோற்றப்பாடு ஆகும். பிரேசில் நாட்டின் மழைக்காடுகளில் ஆய்வுகளை நடத்தி இவ்விளைவைக் கண்டறிந்த ஆங்கில இயற்கையியலாளர் என்ரி வால்டர் பேட்டிசின் பெயரால் இவ்விளைவு இவ்வாறு அழைக்கப்படுகிறது.

உயிரினங்களில் அறியப்படும் படிவளர்ச்சி நெட்டாங்குகளில் பேட்டிசின் நெட்டாங்குகளையே மிகுதியாக ஆய்ந்துள்ளனர். தீவிளைவு கொண்ட இரு உயிரினங்கள் ஒன்றாகப் பயன்பெறும் அடையாள ஒற்றுமையான முல்லரின் நெட்டாங்கு இவ்விளைவிலிருந்து சற்று மாறுபட்டது. இவ்விரண்டு வகை ஒப்புப்போலிப்பண்புகளிலிருந்தும் முற்றிலும் மாறுபட்ட விளைவு, ஒரு கோண்மாவோ ஒட்டுண்ணியோ இடர்தரா உயிரினம் ஒன்றை ஒத்துத் தோன்றும் கடும் நெட்டாங்கு ஆகும்.

வரலாறு

இவ் உய்வுமுறையைக் கண்டறிந்த என்ரி வால்டர் பேட்டிசு

என்ரி வால்டர் பேட்டிசு (Henry Walter Bates) (1825–1892) என்ற ஆங்கில இயற்கையியலாளர் ஆல்ஃவிரடு அரசல் வாலேசு என்ற அறிஞருடன் இணைந்து தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் மழைக்காடுகளில் 1848-ம் ஆண்டுவாக்கில் ஆய்வு நடத்திக் கொண்டிருந்தார். 1852-ல் வாலேசு நாடு திரும்பினார். ஆனால், பேட்டிசு அடுத்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்கி இருந்து கள ஆய்வுகளை மேற்கொண்டார். தன் ஆய்வுக்காக இத்தோமினே (குமட்டல் சுரப்பி கொண்டவை), நீளிறகிகள் (Heliconiinae) ஆகிய குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பட்டாம்பூச்சி இனங்களைச் சேகரித்து வந்தார். அவற்றைத் தத்தமது தோற்ற ஒற்றுமை அடிப்படையில் ஒழுங்குபடுத்த முயன்றபோது பல முரண்பாடுகளைக் கண்டார். வெளித்தோற்ற அளவில் வேறுபடுத்திக் காண இயலாத அளவுக்கு ஒற்றுமை கொண்டிருந்த இனங்களைப் பார்த்தால் அவை ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாத பண்புகளைக் கொண்ட இனங்களாக இருந்தன. இங்கிலாந்து திரும்பியதும் அவரது அவதானிப்பின் அடிப்படையில் அமைந்த ஒப்புப்போலிப் பண்புக் கருத்தை முன்வைத்து இலண்டன் இலின்னேயியசுச் சங்கக் கூட்டத்தில் ஆய்வுக்கட்டுரை ஒன்றை 1861-ம் ஆண்டு நவம்பர் 21-ம் நாளன்று படித்தார். அக்கட்டுரை 1862-ம் ஆண்டு 'Contributions to an Insect Fauna of the Amazon Valley' என்ற பெயரில் வெளிவந்தது.[3] அதைத் தொடர்ந்து தனது அமேசான் துய்ப்பில் கண்டவற்றைப் பற்றி விரிவாக "அமேசான் ஆற்றைப் பற்றி ஒரு இயற்கையியலாளன்" (The Naturalist on the River Amazons) என்ற தலைப்பில் நூலாக எழுதினார்.[4] அவரது இந்த கண்டுபிடிப்புகளும் கணிப்புகளும் நெடிய விவாதங்களுக்கு வித்திட்டன.

பேட்டிசு நெருங்கிய மரபுத் தொடர்பு இல்லாத இனங்களிடையே அமைந்துள்ள தோற்ற ஒற்றுமை ஒரு கோண்மா எதிர்ப்புத் தகவமைவு என்ற கருத்தை முன்வைத்தார். மேலும், சில இனங்கள் வியத்தக்க அளவுக்கு பளிச்சிடும் நிறங்களையும் கொண்டு, ஏதோ தன்னைப் பிடிக்க வரும் கோண்மாக்களைச் சீண்டிப் பார்ப்பது போல மெதுவாகப் பறப்பதையும் சுட்டிக் காட்டினார். இத்தகைய பட்டாம்பூச்சிகள் பறவைகளுக்கும் பிற பூச்சித்தின்னிகளுக்கும் உண்ணுதற்கு உகந்தவையாக இல்லாமல் இருக்கக் கூடும் என்று அவர் கருதினார். இதே அடிப்படையிலேயே இவ்வினங்களைப் போன்ற போலித்தோற்றம் கொண்ட பிற இனங்களும் தமது நிற அமைப்பைப் பெற்றிருக்கலாம் என்ற வாதத்தை அவர் முன்வைத்தார். அந்தப் போலிகள் குமட்டல் தன்மையையோ நச்சுத்தன்மையையோ பெற்றிருக்க வேண்டியதில்லை.

இந்த விளக்கம் ஆல்ஃவிரடு அரசல் வாலேசும் சார்லசு டார்வினும் அந்நேரம் முன்வைத்திருந்த படிவளர்ச்சிக் கோட்பாட்டுடன் பொருந்தி இருந்தது. இவ்விளக்கம் இயல்பில் காணப்படாத எந்த ஒரு சக்தியையும் சார்ந்திராததால் படிவளர்ச்சியை எதிர்த்தவர்களின் எதிர்ப்பைச் சந்தித்தது. அதுவரை கேலிக்காக மாந்தர் ஒருவரைப்போல மற்றொருவர் செய்து காட்டும் பகடிக்கூத்தை மட்டும் குறித்து வந்த mimicry என்ற சொல் செடிகளின் பண்புகளையும் விலங்குகளின் பண்புகளையும் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படத் தொடங்கியது. இந்த அடிக்கருத்தைக் கொண்டு வந்தவர் என்ற முறையில் இவ் ஒப்புப்போலிப்பண்புக்கு பேட்டிசின் பெயர் சூட்டப்பட்டது. வேறு பல நெட்டாங்குகள் இப்போது கண்டறியப்பட்டிருந்தாலும் மிகுதியாக அறியப்படுவது பேட்டிசின் அழகச்சே ஆகும். பலர் நெட்டாங்கு என்றாலே பேட்டிசின் நெட்டாங்கு மட்டும் எனப் பிழையாகக் கருத இடமிருந்தாலும், பேட்டிசே மேலும் பல நெட்டாங்குகளை ஆய்ந்து சொல்லியுள்ளார் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.[5]

இயங்கமைவு

வெறும்புலிப் பட்டாம்பூச்சி
தமிழ் இலேசிறகி
கோண்மாக்களைக் குமட்ட வைக்கும் வெறும்புலிப் பட்டாம்பூச்சியும் அதன் அழகச்சான தமிழ் இலேசிறகியும்

தம்மை உண்ண வரும் கோண்மாக்களிடம் இருந்து தப்புவதற்கு இறையினங்களூடே பல உய்வு முறைகள் தென்படுகின்றன. அவற்றுள் குமட்டல் ஏற்படுத்தும் வேதிச்சுரப்பு, நச்சுத்தன்மை, காயப்படுத்தும் உடலமைப்பு போன்றவை சில. இவ்வாறான பாதுகாப்பைப் பெற்றிருக்கும் உயிரினங்களில் கண்ணில் தென்படாத வண்ணம் உருமறைப்பு, விரைவில் தப்பித்துப் பிழைக்கும் ஆற்றல் போன்ற வேறு சில தற்காப்புப் பண்புகள் பொதுவாகக் குறைவாகவே காணப்படும். இத்தகைய பாதுகாப்பைப் பெற்ற உயிரினங்களிடம் எதிர்வினையைச் சந்திக்கும் கோண்மாக்கள் நாளடைவில் இவற்றைத் தவிர்க்கத் தொடங்குகின்றன. இதைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக, தவிர்த்தல் பண்புகள் இல்லாத வேறு இனங்கள் படிவளர்ச்சியின் போது இவற்றைப் போலவே தோற்றம் பெறுகின்றன. இவ் அடையாள ஒற்றுமை தோற்றத்தில் மட்டுமல்லாது, ஒலி எழுப்புதல் போன்று கோண்மாக்களால் உணரக்கூடிய வேறு வழிகளிலும் ஏற்படலாம்.

கட்டுவிரியன்
ஓலைப்பாம்பு
நஞ்சினையுடைய கட்டுவிரியனும் நஞ்சில்லாத ஓலைப்பாம்பும்(?)

அழகச்சாக இருக்கும் இறையினங்களின் எண்ணிக்கை கோண்மா எதிர்ப்புப் பண்பு கொண்ட இனங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது குறைவாகவே இருக்கும். அவ்வாறு இல்லாமல், ஒப்புப்போலிப் பண்பினையுடைய தீங்கு விளைவிக்க இயலாத இனங்களின் தொகை மிகுந்தால் கோண்மாக்கள் அவற்றைத் தின்று பார்த்து விட்டு நச்சு இனங்களையும் தாக்கத் தொடங்கி விடக்கூடும். இதனால் அவ்விரு இனங்களின் உய்வு உத்திகளும் தோற்றுப் போகும். அதன்வழி படிவளர்ச்சியில் அவை அற்றுப்போகவும் கூடும்.

நஞ்சினையுடைய கட்டு விரியனைப் போலத் தோன்றும் நஞ்சற்ற Travancore wolfsnake Lycodon travancoricus[6] ஓலைப்பாம்பு(?)/வாலைப்பனையன் (Lycodon aulicus),[7] குமட்ட வைக்கும் வெறும்புலிப் பட்டாம்பூச்சியைப் போன்று தோன்றும் தமிழ் இலேசிறகி, வௌவால்களால் உண்ண முடியாத சுவை கொண்ட சில அந்துப்பூச்சிகளின் மீயொலி செய்திகளை வெளியிடும் உண்ணக்கூடிய அந்துப்பூச்சிகள் போன்றவை இவ்விளைவைக் காட்டுபவை.

மேற்கோள்கள்

  1. சென்னைப்பல்கலைக்கழகம் (1924-1936). Tamil Lexicon. சென்னை: சென்னைப்பல்கலைக்கழகம். பக். {{{பக்கங்கள்}}}. http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.7:1:6221.tamillex. 
  2. "mimicry". அகராதி. அகராதி.காம். பார்க்கப்பட்ட நாள் 29 August 2010.
  3. Bates, H. W. (1961) Contributions to an insect fauna of the Amazon valley. Lepidoptera: Heliconidae. Transactions of the Linnean Society. 23:495-566.
  4. Bates H. W. 1863.
  5. Pasteur, Georges (1982). “A classificatory review of mimicry systems”. Annual Review of Ecology and Systematics 13: 169–199.
  6. Balakrishnan, P. (2010). "An education programme and establishment of a citizen scientist network to reduce killing of non-venomous snakes in Malappuram district, Kerala, India". Conservation Evidence 7: 9--115. 
  7. Abercromby, A F. The Snakes of Ceylon. பக். 52-53. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1110737742. "Another striking example of protective imitation is the way in which the little Lycodon Aulicus (sic) imitates the deadly Bungarus ...[T]o make the deception complete, the Lycodon has enlarged front teeth in imitation of the fangs of the Bungarus ..." 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேட்ஃசின்_போலியொப்புரு&oldid=585142" இலிருந்து மீள்விக்கப்பட்டது