தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,711 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
 
==கட்சிகள்==
1977 முதல் எட்டாண்டுகள் தமிழகத்தை ஆண்டு வந்த [[அதிமுக|அதிமுகவுடன்]] [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திரா காங்கிரசும்]] காந்தி காமராஜ் காங்கிரசும் கூட்டணி அமைத்து இத்தேர்தலில் போட்டியிட்டன. [[திமுக]] தலைமையில் அமைந்த எதிர்க்கட்சி கூட்டணியில், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், [[ஜனதா கட்சி]] ஆகியவை இடம் பெற்றிருந்தன. மேற்குறிப்பிட்ட கட்சிகளைத் தவிர அம்பெத்கார் க்ராந்தி தளம், [[பாரதீய ஜனதா கட்சி]], காங்கிரசு (ஜே), தமிழ் நாடு காங்கிரசு போன்ற கட்சிகளும் இத்தேர்தலில் போட்டியிட்டன.<ref name="Palanithurai">{{cite book | title=Role Perception of the Legislators: A Case Study of Tamil Nadu| edition=| author=G. Palanithurai| date=June 1991| pages=27| publisher=Stosius Inc/Advent Books Division| isbn=8122002277}}</ref><ref name="Mohandas">{{cite book | title=MGR, the man and the myth| edition=| author=K. Mohandas| date=1992| pages=105–106| publisher=Panther Publishers| isbn=978-8185457093}}</ref>
 
==அரசியல் நிலவரம்==
1980 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட இந்திரா காங்கிரசு இம்முறை அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. 1984 இல் இந்திரா காந்தி படு கொலை செய்யப்பட்டதால் எழுந்த அனுதாப அலையும், சிறுநீரக கோளாறு காரணமாக உடல் நிலை குன்றியிருந்த எம்ஜியாருக்கு ஆதாரவாக எழுந்த அனுதாப அலையும், இக்கூட்டணியை பலம் பெறச் செய்தன. 1983 இல் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மேலவை உறுப்பினராகி இருந்த திமுக தலைவர் கருணாநிதி இத்தேர்தலில் போட்டியிட வில்லை. திமுக கூட்டணியில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், ஜனதா கட்சியும் இடம் பெற்றிருந்தன.
51,779

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/582187" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி