தி இந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
குறுங்கட்டுரை விரிவாக்கம் செய்யப்படுகிறது
வரிசை 1: வரிசை 1:
'''த இந்து''' அல்லது '''த ஹிந்து''' (The Hindu) [[சென்னை|சென்னையைத்]] தலைமையிடமாகக் கொண்டு பிரசுரிக்கப்படும் ஒரு [[ஆங்கிலம்|ஆங்கில]] மொழி செய்தித்தாள். 1878 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இச்செய்தி தாள் தினம் சுமார் பதினான்கரை லட்சம் பிரதிகள் விற்பனையாகிறது. இச்செய்தித் தாளை பதிப்பிக்கும் இந்து குழுமம் கஸ்தூரி அன் சன்ஸ் என்ற நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இது இந்தியாவில் ஆங்கில செய்தித்தாள்களுள் விற்பனையில் இரண்டாவது இடத்தையும், படிப்பவர் எண்ணிக்கையில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.
'''த இந்து''' என்பது ஒர் ஆங்கில இந்தியப் தினப் [[பத்திரிகை]]. நாளாந்தம் 1.27 [[மில்லியன்]] பத்திரிகைகள் விற்பனையாகின்றன{{fact}}. இந்தியாவில், [[ரைம்சு ஒப் இந்தியா|ரைம்சு ஒப் இந்தியாவுக்கு]] அடுத்தாக கூடுதல் வாசகர்களால் வாசிக்கப்படும் ஆங்கிலப் பத்திரிகை இது ஆகும். குறிப்பாக தென் இந்தியாவில் இது அதிகம் வாசிக்கப்படுகிறாது. இப் பத்திரிகை [[சென்னை|சென்னையில்]] தலைமையகத்தைக் கொண்டுள்ளது. இதை 1878 ம் ஆண்டு [[கணபதி தீட்சதர் சுப்பிரமணிய அய்யர்]] 1878 ம் ஆண்டு தொடங்கினார் {{fact}}.


==வரலாறு==
== மேற்கோள்கள் ==


இந்து செய்தித்தாள் முதன் முதலாக செப்டம்பர் 20, 1878 இல் வெளியானது. [[சென்னை உயர் நீதிமன்றம்|சென்னை உயர்நீதிமன்றத்திற்கு]] முதன் முதலில் இந்தியர் ஒருவர் நியமிக்கப் பட்டதைக் கண்டித்து பிரிட்டிஷ் ஆதரவு ஆங்கிலப் பத்திர்க்கைகள் செய்திகள் வெளியிட்டன. இதனால் கோபமடைந்த [[திருவல்லிக்கேணி]] இலக்கிய வட்டத்தை சேர்ந்த ஆறு இளைஞர்கள், இந்தியர்கள் கருத்தை வெளியிட ஒரு பத்திரிக்கை வேண்டுமென முடிவு செய்தனர். ஜி. சுப்ரமணிய ஐயரை ஆசிரியராகக் கொண்டு ''தி இந்து'' என்ற செய்தித்தாளைத் தொடங்கினர். ஆரம்பத்தில் வாரந்தோறும் புதன் கிழமைகளில் ஒரு வார இதழாகவே இந்து வெளிவந்தது. ஆங்கிலப் பத்திரிக்கைகளை கண்டித்து எழுதினாலும், ஆங்கில அரசை வெளிப்படையாக எதிர்க்காமல் பாராட்டி செய்தி வெளியிட்டது. 1883 முதல் வாரம் மும்முறை வெளியாகத் தொடங்கியது.<ref name=WillingToStrike>{{cite web| author=S. Muthiah | url=http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2003091300770200.htm&date=2003/09/13/&prd=th125& | title=Willing to strike and not reluctant to wound | date=13 September 2003 | accessdate=2006-04-25}}</ref>
== வெளி இணைப்புகள் ==
* [http://www.hindu.com/ Online edition (ePaper)]


1887 இல் [[சென்னை|சென்னையில்]] [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசின்]] வருடாந்தர மாநாடு நடந்தது. அதிலிருந்து இந்துவில் தேசிய அரசியல் பற்றி செய்திகள் வெளியாகத் தொடங்கின. 1898 இல் சுப்ரமணிய ஐயர், இந்துவிலிருந்து விலகி வீரராகவாச்சாரியார் உரிமையாளரானார். 1900 களில் இந்துவின் விற்பனை குறைந்து நிதி நெருக்கடி உண்டானது. 1905 ஆம் ஆண்டு வீர்ராகவாச்சாரியார் இந்துவை கஸ்தூரிரங்க அய்யங்காரிடம் விற்று விட்டார். அன்று முதல் இன்று வரை கஸ்தூரிரங்க அய்யங்காரின் குடும்பத்தினரே இந்துவை நிர்வகித்து வருகிறார்கள். தி இந்து இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் நாள்தோறும் வெளியாகத் தொடங்கியது. 1910 களில் [[அன்னி பெசண்ட்|அன்னி பெசன்ட்]] அம்மையாரின் சுயாட்சி போராட்டத்திற்கு இந்து ஆதரவளித்தது. [[நீதிக்கட்சி|நீதிக்கட்சியின்]] தலைவர்கள் டி. எம் . நாயர், தியாகராய செட்டி ஆகியோர், [[தமிழ்நாடு சட்டமன்றம்|சட்டமன்றத்தில்]] வகுப்பு வாரி இட ஒதுக்கீடு கோரிய போது [[இந்து]] அதை கடுமையாக எதிர்த்தது. [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய சுதந்திர போராட்டத்திற்கு]] ஆதரவாகவும் [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரிட்டிஷ் அரசுக்கு]] எதிராகவும் செய்திகளை வெளியிட்டது. 1948 இல் முதல் பக்கத்தில் முழு விளம்பரம் பிரசுரிக்கும் வழக்கம் நிறுத்தப்பட்டு மறுவடிவம் செய்யப்பட்டது. 1987 இல் [[போபர்ஸ்|போஃபோர்ஸ்]] பீரங்கி ஊழலை அம்பலப்படுத்தியது. 1995 முதல் [[ இணையம்|இணையத்திலும்]] வெளிவரத் துவங்கியது. 1965 முதல் 1993 வரை ஜி. கஸ்தூரியும், 1993 – 2001 இல் என். ரவி இந்து குழுமத்தின் நிர்வாக இயக்குனராக இருந்தனர். 2003 முதல் [[நரசிம்மன் ராம்|என். ராம்]] இந்துவின் நிர்வாக இயக்குனராகவும், தலைமை ஆசிரியராகவும் இருக்கின்றார்.<ref name=nm_bg>{{cite web | author=N. Murali | url=http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2003091301020800.htm&date=2003/09/13/&prd=th125& | title=Core values and high quality standards | work=The Hindu | date=13 September 2003 | accessdate=2006-04-20}}</ref>


==விற்பனையும் பதிப்புகளும்==
இந்தியன் ரீடர்ஷிப் சர்வே 2008 இன் படி, இந்து தினம் பதினான்கரை லட்சம் பிரதிகள் விற்கின்றது. விற்பனை அளவில் இந்தியாவின் ஆங்கில செய்தித்தாள்களுள் இரண்டாவது இடத்தில் உள்ளது (முதலிடம் [[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா|டைம்ஸ் ஆஃப் இந்தியா]]). படிப்பவர்கள் எண்ணிக்கையில் மூன்றாமிடத்தில் உள்ளது. இந்து [[சென்னை]], [[பெங்களூரு]], [[கோவை]], [[டெல்லி]], [[ஹைதராபாத்]], [[கொச்சி]], [[கொல்கத்தா]], [[மதுரை]], [[மங்களூர்]], [[திருவனந்தபுரம்]], [[திருச்சி]], [[விஜயவாடா]], [[விசாகப்பட்டினம்]] ஆகிய நகரங்களில் இருந்து பதின்மூன்று பதிப்புகளை வெளியிடுகிறது.<ref name='circulation_figures'>[http://www.hindu.com/thehindu/hindu.htm The Hindu : About Us]</ref><ref>{{cite news | url= http://www.newswatch.in/newsblog/1943 | title= Top 10 English dailies | work=Newwatch.in | date=7 November 2008 | accessdate=2009-06-19}}</ref>


==நிர்வாக இயக்குனர்கள்==
[[பகுப்பு:இந்திய ஆங்கிலப் பத்திரிகைகள்]]
இந்து குழுமத்திற்கு தற்போது பன்னிரெண்டு நிர்வாக இயக்குனர்கள் உள்ளனர். கஸ்தூரி ரங்க அய்யங்காரின் வாரிசுகளான அவர்கள் – என். ராம், என். ரவி, என். முரளி, மாலினி பார்த்தசாரதி, நிர்மலா லட்சுமணன், நளினி கிருஷ்ணன், ரமேஷ் ரங்கராஜன், விஜயா அருண், அகிலா அய்யங்கார், கே. பாலாஜி, கே. வேணுகோபால், லக்ஷ்மி ஸ்ரீநாத் ஆகியோராவர்.<ref>{{cite web|url=http://www.indianexpress.com/news/battleforcontrolbreaksoutinthehinduverydividedfamily/595373/0|title=Battle for control breaks out in The Hindu very divided family|last= Shukla |first=Archna |date=25 March 2010|work=[[Indian Express]]|accessdate=25 March 2010}}</ref>
[[பகுப்பு:இந்திய நாளிதழ்கள்]]


==சார்பு நிலைகள்==
இந்துவில் பத்திகள் மதவாதத்திற்கு எதிராகவும், மதச்சார்பின்மையை ஆதரித்தும் எழுதப் படுகின்றன. பொதுவாக உள்நாட்டு அரசியலில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளை ஆதரித்தும் பாரதீய ஜனதா கட்சியை எதிர்த்தும், வெளிநாட்டு விஷயங்களில், தமிழீழ விடுதலையை எதிர்த்தும், சீன-சிங்கள நாடுகளை ஆதரித்தும் பத்திகள் எழுதப்படுகின்றன.

==குழும இதழ்கள்==
த இந்து குழுமம் வெளியிடும் மற்ற இதழ்கள்
*''பிசினஸ் லைன்'' (பொருளியல் மற்றும் வணிக இதழ்)
*''இந்து சர்வதேசப் பதிப்பு'' (வார இதழ்)
*''ஸ்போர்ட்ஸ்டார்'' (விளையாட்டு செய்திகள் வார இதழ்)
*''ஃப்ரன்ட்லைன்'' ( மாதம் இருமுறை வெளியாகும் அரசியல், சமூக இதழ்)
*''ப்ராக்சிஸ்'' (மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளியாகும் மேலாண்மை இதழ்)
*''எர்கோ'' இணைய இதழ்

==மேற்கோள்கள்==
{{reflist}}

==வெளி இணைப்புகள்==
* [http://beta.thehindu.com/ இணையதளம்]

[[பகுப்பு:இந்திய நாளிதழ்கள்]]
[[பகுப்பு:இந்திய ஆங்கிலப் பத்திரிகைகள்]]
[[bn:দ্য হিন্দু]]
[[bn:দ্য হিন্দু]]
[[de:The Hindu]]
[[de:The Hindu]]

04:31, 23 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்

த இந்து அல்லது த ஹிந்து (The Hindu) சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு பிரசுரிக்கப்படும் ஒரு ஆங்கில மொழி செய்தித்தாள். 1878 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இச்செய்தி தாள் தினம் சுமார் பதினான்கரை லட்சம் பிரதிகள் விற்பனையாகிறது. இச்செய்தித் தாளை பதிப்பிக்கும் இந்து குழுமம் கஸ்தூரி அன் சன்ஸ் என்ற நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இது இந்தியாவில் ஆங்கில செய்தித்தாள்களுள் விற்பனையில் இரண்டாவது இடத்தையும், படிப்பவர் எண்ணிக்கையில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.

வரலாறு

இந்து செய்தித்தாள் முதன் முதலாக செப்டம்பர் 20, 1878 இல் வெளியானது. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு முதன் முதலில் இந்தியர் ஒருவர் நியமிக்கப் பட்டதைக் கண்டித்து பிரிட்டிஷ் ஆதரவு ஆங்கிலப் பத்திர்க்கைகள் செய்திகள் வெளியிட்டன. இதனால் கோபமடைந்த திருவல்லிக்கேணி இலக்கிய வட்டத்தை சேர்ந்த ஆறு இளைஞர்கள், இந்தியர்கள் கருத்தை வெளியிட ஒரு பத்திரிக்கை வேண்டுமென முடிவு செய்தனர். ஜி. சுப்ரமணிய ஐயரை ஆசிரியராகக் கொண்டு தி இந்து என்ற செய்தித்தாளைத் தொடங்கினர். ஆரம்பத்தில் வாரந்தோறும் புதன் கிழமைகளில் ஒரு வார இதழாகவே இந்து வெளிவந்தது. ஆங்கிலப் பத்திரிக்கைகளை கண்டித்து எழுதினாலும், ஆங்கில அரசை வெளிப்படையாக எதிர்க்காமல் பாராட்டி செய்தி வெளியிட்டது. 1883 முதல் வாரம் மும்முறை வெளியாகத் தொடங்கியது.[1]

1887 இல் சென்னையில் இந்திய தேசிய காங்கிரசின் வருடாந்தர மாநாடு நடந்தது. அதிலிருந்து இந்துவில் தேசிய அரசியல் பற்றி செய்திகள் வெளியாகத் தொடங்கின. 1898 இல் சுப்ரமணிய ஐயர், இந்துவிலிருந்து விலகி வீரராகவாச்சாரியார் உரிமையாளரானார். 1900 களில் இந்துவின் விற்பனை குறைந்து நிதி நெருக்கடி உண்டானது. 1905 ஆம் ஆண்டு வீர்ராகவாச்சாரியார் இந்துவை கஸ்தூரிரங்க அய்யங்காரிடம் விற்று விட்டார். அன்று முதல் இன்று வரை கஸ்தூரிரங்க அய்யங்காரின் குடும்பத்தினரே இந்துவை நிர்வகித்து வருகிறார்கள். தி இந்து இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் நாள்தோறும் வெளியாகத் தொடங்கியது. 1910 களில் அன்னி பெசன்ட் அம்மையாரின் சுயாட்சி போராட்டத்திற்கு இந்து ஆதரவளித்தது. நீதிக்கட்சியின் தலைவர்கள் டி. எம் . நாயர், தியாகராய செட்டி ஆகியோர், சட்டமன்றத்தில் வகுப்பு வாரி இட ஒதுக்கீடு கோரிய போது இந்து அதை கடுமையாக எதிர்த்தது. இந்திய சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவாகவும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகவும் செய்திகளை வெளியிட்டது. 1948 இல் முதல் பக்கத்தில் முழு விளம்பரம் பிரசுரிக்கும் வழக்கம் நிறுத்தப்பட்டு மறுவடிவம் செய்யப்பட்டது. 1987 இல் போஃபோர்ஸ் பீரங்கி ஊழலை அம்பலப்படுத்தியது. 1995 முதல் இணையத்திலும் வெளிவரத் துவங்கியது. 1965 முதல் 1993 வரை ஜி. கஸ்தூரியும், 1993 – 2001 இல் என். ரவி இந்து குழுமத்தின் நிர்வாக இயக்குனராக இருந்தனர். 2003 முதல் என். ராம் இந்துவின் நிர்வாக இயக்குனராகவும், தலைமை ஆசிரியராகவும் இருக்கின்றார்.[2]

விற்பனையும் பதிப்புகளும்

இந்தியன் ரீடர்ஷிப் சர்வே 2008 இன் படி, இந்து தினம் பதினான்கரை லட்சம் பிரதிகள் விற்கின்றது. விற்பனை அளவில் இந்தியாவின் ஆங்கில செய்தித்தாள்களுள் இரண்டாவது இடத்தில் உள்ளது (முதலிடம் டைம்ஸ் ஆஃப் இந்தியா). படிப்பவர்கள் எண்ணிக்கையில் மூன்றாமிடத்தில் உள்ளது. இந்து சென்னை, பெங்களூரு, கோவை, டெல்லி, ஹைதராபாத், கொச்சி, கொல்கத்தா, மதுரை, மங்களூர், திருவனந்தபுரம், திருச்சி, விஜயவாடா, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் இருந்து பதின்மூன்று பதிப்புகளை வெளியிடுகிறது.[3][4]

நிர்வாக இயக்குனர்கள்

இந்து குழுமத்திற்கு தற்போது பன்னிரெண்டு நிர்வாக இயக்குனர்கள் உள்ளனர். கஸ்தூரி ரங்க அய்யங்காரின் வாரிசுகளான அவர்கள் – என். ராம், என். ரவி, என். முரளி, மாலினி பார்த்தசாரதி, நிர்மலா லட்சுமணன், நளினி கிருஷ்ணன், ரமேஷ் ரங்கராஜன், விஜயா அருண், அகிலா அய்யங்கார், கே. பாலாஜி, கே. வேணுகோபால், லக்ஷ்மி ஸ்ரீநாத் ஆகியோராவர்.[5]

சார்பு நிலைகள்

இந்துவில் பத்திகள் மதவாதத்திற்கு எதிராகவும், மதச்சார்பின்மையை ஆதரித்தும் எழுதப் படுகின்றன. பொதுவாக உள்நாட்டு அரசியலில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளை ஆதரித்தும் பாரதீய ஜனதா கட்சியை எதிர்த்தும், வெளிநாட்டு விஷயங்களில், தமிழீழ விடுதலையை எதிர்த்தும், சீன-சிங்கள நாடுகளை ஆதரித்தும் பத்திகள் எழுதப்படுகின்றன.

குழும இதழ்கள்

த இந்து குழுமம் வெளியிடும் மற்ற இதழ்கள்

  • பிசினஸ் லைன் (பொருளியல் மற்றும் வணிக இதழ்)
  • இந்து சர்வதேசப் பதிப்பு (வார இதழ்)
  • ஸ்போர்ட்ஸ்டார் (விளையாட்டு செய்திகள் வார இதழ்)
  • ஃப்ரன்ட்லைன் ( மாதம் இருமுறை வெளியாகும் அரசியல், சமூக இதழ்)
  • ப்ராக்சிஸ் (மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளியாகும் மேலாண்மை இதழ்)
  • எர்கோ இணைய இதழ்

மேற்கோள்கள்

  1. S. Muthiah (13 September 2003). "Willing to strike and not reluctant to wound". பார்க்கப்பட்ட நாள் 2006-04-25.
  2. N. Murali (13 September 2003). "Core values and high quality standards". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2006-04-20.
  3. The Hindu : About Us
  4. "Top 10 English dailies". Newwatch.in. 7 November 2008. http://www.newswatch.in/newsblog/1943. பார்த்த நாள்: 2009-06-19. 
  5. Shukla, Archna (25 March 2010). "Battle for control breaks out in The Hindu very divided family". Indian Express. பார்க்கப்பட்ட நாள் 25 March 2010.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_இந்து&oldid=580827" இலிருந்து மீள்விக்கப்பட்டது