"சிறுத்தொண்ட நாயனார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
110 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
 
==சேனாதிபதியாக==
[[முதலாம் நரசிம்ம பல்லவன்|நரசிம்ம பல்லவரிடம்]] சேனாதிபதியாய்ப் போர்முனையிற் பகையரசர்களை வென்று அரசனால் நன்கு மதிக்கப்பட்டவர். இவர் மன்னர் பொருட்டு வட திசையில் படையெடுத்துச் சென்று, வாதாபி நகரத்தை அழித்து அங்கிருந்து பலவகை நன்மணிகளையும், செல்வங்களையும், [[யானை]], [[குதிரை]], முதலியவற்றையும் கைப்பற்றித் தம்வேந்தனிடம் கொணர்ந்தார். அரசன் இவரது வீரத்தையும், ஆண்மையினையும் அதிசயித்து புகழ்ந்து பாராட்டினார். அந்நிலையில் பரஞ்சோதியாரை நன்குணர்ந்த அமைச்சர்கள், ‘அரசே! இவரிடம் [[சிவபெருமான்|சிவபெருமானுக்குத்]] திருத்தொண்டு செய்யும் இயல்பு நிரம்பியிருப்பதால் போரில் இவரை எதிர்க்கவல்லார் எவருமில்லை என்றனர். இச்செய்தியைக் கேள்வியுற்ற வேந்தன், <ref>''“உம்பர் பிரான் அடியாரை உணராதே கெட்டொழிந்தேன், வெம்பு கொடும் போர்முனையில் விட்டிருந்தேன், என அஞ்சிப் பரஞ்சோதியாரை நோக்கி, எம்பெருமான்; எனது பிழையைப் பொறுத்தருள வேண்டும்”</ref>'' என இறைஞ்சினார்.
 
மன்னன் இறைஞ்சியதும் பரஞ்சோதியாரும் முன் வணங்கி ''‘அரசே! எனது தொழிலுக்கேற்ற பணியினைச் செய்வேன். அதற்கு என்ன தீங்கு’'' என்றார். அறம்புரி செங்கோலனாகிய வேந்தன், அவருக்கு நிறைந்த நிதிக்குவையும், நீடு விருத்திக்கான நல்நிலம், ஆனிரை ஆகியவற்றை அளித்து வணங்கி, நீர் உம்முடைய திருத்தொண்டின் நிலைமையினை நானறியாதபடி கொண்டு நடத்தினீர். இனி உம்முடைய மனக்கருத்துக்கு இசையத் திருத்தொண்டு செய்வீராக’ என விடைகொடுத்தனுப்பினார்.
 
==சிவத் தொண்டராக==
மன்னவனிடம் விடைபெற்ற பரஞ்சோதியார், தமது பதியாகிய திருச்செங்காட்டங்குடியினை அடைந்தார். அங்கு கணபதீச்சரத்து இறைவரை இறைஞ்சிச் சிவத்தொண்டுகளை வழுவாது செய்திருந்தார். இவர் திருவெண்காடு நங்கையை மணம் முடித்தார். நங்கையாருடன் மனையறத்தினை இனிதே நிகழ்த்தி நாள்தோறும் சிவனடியார்களுக்குத் திருவமுது செய்வித்துப் பின் தாம் உண்ணலை வழக்கமாகக் கொண்டிருந்தார். பரஞ்சோதியார் சிவனடியார்களை விரும்பி பொழுது அவர் மிகச் சிறியராகப் பணிந்து ஒழுகியமையால் சிறுத்தொண்டர் என அழைக்கப்பட்டார். இவருக்கு சீராளத்தேவர் என்னும் திருமைந்தர் அவதரித்தார். அப்பிள்ளைக்கு ஐந்து வயது வந்தபொழுது பள்ளியிற் கல்வி பயிலவைத்தார். அந்நாளில் [[திருஞானசம்பந்தப் பிள்ளையார்]] இறைவனை வழிபடத் திருச்செங்காட்டங்குடிக்கு எழுந்தருளினார். ஆளுடைய பிள்ளாயாரும் பேரன்பினாற் சிறந்த சிறுத்தொணடருடன் நண்பினால் அளவளாவி மகிழ்ந்தனர். கணபதீச்சரப் பெருமானைத் தாம்பாடிய ‘பைங்கோட்டு மலர்புன்னை’ என்னும் முதற்குறிப்புடைய திருப்பதிகத்தில் சிறுத்தொண்டரைச் சிறப்பித்துப் பாடினார்.
 
==இறைவனின் திருவிளையாடல்==
சிறுத்தொண்டரது உண்மை அன்பை நுகர்ந்தருள விரும்பிய [[சிவபெருமான்]], பைரவ அடியாராக வேடந்தாங்கித் திருச்செங்காட்டங் குடியை அடைந்தார். பைரவசுவாமியார் செஞ்சடையினைக் காளமேகம் போன்று கருமயிர்த்திரளாக முடித்திருந்தார். அக்கருங்குஞ்சியிலே தும்பைப் பூக்கள் சூடியிருந்தார். திருச்சடையிலுள்ள இளம்பிறையைத் [[திருநீறு|திருநீற்றுப்]] பொட்டாக நெற்றியிலிட்டார். செக்கர் வானத்தை அந்தி இருள் மறைப்பது போல, செம்மேனியை மூடிக் கருஞ்சட்டை அணிந்தார். இடக்கையிற் சூலம் ஏந்தினார். இத்தகைய கோலத்துடன் சிறுத்தொண்டரது வீட்டு வாயிலை அடைந்து ‘தொண்டக்குச் சோறளிக்கும் சிறுத்தொண்டர் இவ்வீட்டில் உள்ளாரோ? என வினவி நின்றார். அம்மொழியினைக் கேட்ட சந்தனாசிரியர் முன்வந்து வணங்கி, ‘அவர் அடியாரைத் தேடி வெளியே சென்றுள்ளார். எம்மை ஆளான உடையவரே! வீட்டினுள் எழுந்தருள்வீராக’ என வேண்டினார். வந்த பைரவர் அவரை நோக்கி, ‘மாதர்கள் இருக்கும் இடத்தில் நாம் தனியே புகமாட்டோம்’ என்றார். அது கேட்ட திருவெண்காட்டு நங்கையார். ‘இவ்வடியவர் போய்விடுவாரோ’ என்று அஞ்சி விரைந்து உள்ளிருந்து வீட்டு வாயிலிற்கு வந்து ‘எம்பெருமானே! அம்பலவர் அடியாரை அமுது செய்விப்பதற்கு அடியார் எவரையும் காணாமல் வெளியே சென்றுள்ளார்; தேவரீர் இங்கு எழுந்தருளியதனைக் கண்டால் தாம்பெற்ற பெரும்பேறெனக் கொள்வார். இனிச் சிறிதும் தாமதிக்கமாட்டார்; இப்பொழுதுதே வந்துவிடுவார். தேவரீர் வீட்டினுள் எழுந்தருளி இருப்பீராக’ என இறைஞ்சினார். அதுகேட்ட பைரவர் ‘மாதரசியே நம் உத்தரபதியாயுள்ளோம், சிறுத்தொண்டரைக் காணவந்தோம். அவரின்றி இங்கு தங்க மாட்டோம். கணபதீச்சரத்து ஆத்தி மரத்தின் கீழ் இருக்கின்றோம். அவர் வந்தால் நாம் வந்த செய்தியைச் சொல்வீராக’ எனக் கூறிச் சென்று திருவாத்தி மரநிழலின் கீழ் அமர்ந்தருளினார்.
 
வந்த மைந்தரை அழைத்துக் கொண்டு அடியாரை அமுது செய்விப்பதற்கு உள்ளே புகுந்த சிறுத்தொண்டர் பைரவக் கோலத்தொண்டரைக் காணாதவராய்ச் சிந்தை கலங்கித் திகைத்து வீழ்ந்தார்; மனஞ்சுழன்றார். வெந்த இறைச்சிக் கறியமுதினைக் காணாது வெருவுற்றார். 'செய்ய மேனிக் கருங்குஞ்சுகத்துப் பயிரவர் நாம் உய்ய அமுது செய்யாது ஒளித்தது எங்கே?" எனத்தேடி மயக்கங் கொண்டு வெளியே சென்று பார்த்தார். அப்பொழுது மறைந்த அம்முதல்வர் உமையம்மையாரோடும், முருகனாகிய குழந்தையுடனும் விடை மீது அமர்ந்து இனிய கறியும், திருவமுதும் அமைத்தார் காண எழுந்தருளித் திருவருள் புரிந்தார். அன்பின் வென்ற தொண்டராகிய சிறுத்தொண்டரும், அவர் மனைவியாரும், சீராளதேவரும் தம் முன்னே தோன்றிய பெருமானை என்பும், மனமும் கரைந்துருக நிலமிசை வீழ்ந்து துதித்துப் போற்றினார்கள்.
 
[[சிவபெருமான்]], உமாதேவியாரும், [[முருகன்|முருகவேளும்]], அங்குத் தம்மை வழிபட்டு நின்ற சிறுத்தொண்டர், மனைவியார், மகனார், தாதியார் நால்வரையும் தம்மை என்றும் பிரியாது இறைஞ்சியிருக்கும் வண்ணம் உடன் கொண்டு திருக்கயிலையை அடைந்தருளினார்.
 
==நுண்பொருள்==
2,581

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/576695" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி