கதிரலைக் கும்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: gan:雷達
சி தானியங்கிஇணைப்பு: hi:रडार
வரிசை 35: வரிசை 35:
[[gl:Radar]]
[[gl:Radar]]
[[he:מכ"ם]]
[[he:מכ"ם]]
[[hi:रडार]]
[[hr:Radar]]
[[hr:Radar]]
[[hu:Rádiólokátor]]
[[hu:Rádiólokátor]]

02:57, 1 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்

கதிரலைக் கும்பா (றேடார், ராடார்,ரேடார், Radar) என்பது மின்காந்த அலைகளைப் பயன்படுத்தி விமானங்கள், கப்பல்கள், மோட்டார் வாகனங்கள், வளிமண்டல உருவாக்கங்கள் போன்றவற்றின் தரிப்பிடம், திசை, வேகம் போன்றவற்றைக் கணிக்கும் கருவித் தொகுதியாகும். ரேடார் என்பது Radio Detection and Ranging என்பதன் சுருக்கம் ஆகும்.

றேடாரானது வானொலி அலைகள் அல்லது நுண் அலைகளை அனுப்பி இலக்கில் அவை பட்டுத் தெறித்து வருவதைப் பெற்றுக் கணிப்புக்களை மேற்கொள்கின்றன. தெறித்துவரும் சமிக்ஞைகள் வலிமை குறைந்தனவாக இருந்தாலும் அவை பெருப்பிக்கப்படுகின்றன. இதன்மூலம் மிகத் தொலைவில் உள்ள இலக்குக்களையும் இனங்காண முடிகிறது.

போர் விமானங்கள், கப்பல்கள் போன்றவற்றின் நடமாட்டத்தை அறியும் இராணுவத் தேவைகளுக்கும் வாகனங்களின் வேகங்களைக் கணித்தல், கடல் அலைகளை அவதானித்தல் போன்ற தேவைகளுக்கும் றேடார்கள் பயன்படுகின்றன.

வரலாறு

றேடாரின் உருவாக்கத்துக்குப் பல கண்டுபிடிப்பாளர்களும் அறிவியலாளர்களும் பங்களித்துள்ளனர். 1904 இல் கிறிஸ்ரியன் அல்ஸ்மேயர் என்பவர் பனிப்புகாரில் கப்பலொன்று நிற்பதை வானொலி அலைகள் மூலம் கண்டறியலாம் என்பதைச் செய்துகாட்டினார். ஆயினும் அது எவ்வளவு தூரத்தில் நிற்கிறதென்பது உணரப்படவில்லை. 1917 இல் நிக்கொலா ரெஸ்லா முதல் றேடார் தொகுதிக்கான அலைநீளம், வலு அளவு போன்றவை தொடர்பிலான கருதுகோளை வெளியிட்டார். இரண்டாம் உலகப் போரின் முன்னர் அமெரிக்கர்கள், செருமனியர்கள், பிரித்தானியர் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வுகள் முதல் உண்மையான றேடார் உருவாகக் காரணமானது. 1930 களில் பிரித்தானியா, அங்கேரி, பிரான்சு நாட்டவர்கள் றேடார்களை உருவாக்கியிருந்தனர்.

அடிப்படையில் இராணுவத் தேவைகளுக்காகவே றேடார் உருவாகியிருந்தாலும் போரின் பின்னரான காலங்களில் மேலும் முன்னேற்றங்கள் ஏற்பட்டதோடு ஏனைய துறைகளிலும் பயன்படலானது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிரலைக்_கும்பா&oldid=567522" இலிருந்து மீள்விக்கப்பட்டது