பயன்பாட்டு மானிடவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: zh:應用人類學
சி தானியங்கிஇணைப்பு: mk:Применета антропологија
வரிசை 7: வரிசை 7:
[[es:Antropología aplicada]]
[[es:Antropología aplicada]]
[[he:אנתרופולוגיה יישומית]]
[[he:אנתרופולוגיה יישומית]]
[[mk:Применета антропологија]]
[[sk:Aplikovaná antropológia]]
[[sk:Aplikovaná antropológia]]
[[zh:應用人類學]]
[[zh:應用人類學]]

17:59, 30 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்

பயன்பாட்டு மானிடவியல் என்பது, மானிடவியல் கோட்பாடுகளையும், வழிமுறைகளையும் நடைமுறைப் பிரச்சினைகளைப் பகுப்பாய்வு செய்து, அவற்றுக்குத் தீர்வு காண்பதில் பயன்படுத்தும் மானிடவியலின் ஒரு துறை ஆகும். மானிடவியலில், உடல்சார் மானிடவியல், பண்பாட்டு மானிடவியல், மொழியியல் மானிடவியல், தொல்லியல் மானிடவியல் எனும் நான்கு உட்பிரிவுகள் உண்டு. எனவே இவற்றுள் எதனை நடைமுறையில் பன்படுத்தினாலும் அது பயன்பாட்டு மானிடவியலைச் சாரும். சில நடைமுறைப் பிரச்சினைகளுக்கு மேற் சொன்ன எல்லாத் துறைகளையுமே பயன்படுத்த வேண்டியிருக்கும். தாயக அமெரிக்கர் சமூக வளர்ச்சித் திட்டம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இதில், தாயக அமெரிக்கருடைய நீர் உரிமைக் கோரிக்கைகளை உறுதிசெய்வதற்குத் தொல்லியல் ஆய்வு பயன்படுகிறது. அவர்களுடைய தற்கால அல்லது அண்மைக்கால வரலாற்று, பண்பாட்டு இயல்புகளை அறிவதற்கு இனவரைவியல் பயன்படும். மொழியியல் அவர்களின் மரபுவழி மொழிப் பயன்பாட்டுத்திறனை மேம்படுத்த உதவும். உடல்சார் மானிடவியல், உணவுக் குறைபாடு, நோய்கள் ஆகியவற்றைப் பற்றி ஆராய்வதில் பயன்படுத்தப்படலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயன்பாட்டு_மானிடவியல்&oldid=566788" இலிருந்து மீள்விக்கப்பட்டது