தென்கிழக்காசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: te:ఆగ్నేయ ఆసియా
சி தென்கிழக்காசியாவில் பண்டையத் தமிழர்
வரிசை 5: வரிசை 5:
[[மியான்மார்]], [[லாவோஸ்]], [[தாய்லாந்து]], [[கம்போடியா]], [[வியட்நாம்]] ஆகியோரும் தென்கிழக்கு ஆசியாவில் கண்டத்தை சேர்ந்த நாடுகள். இம்மண்டலத்தில் பெரும்பான்மையாக [[பௌத்தம்|பௌத்த]] சமயத்தை சேர்ந்த [[தாய் பேரின மக்கள்]] மற்றும் [[ஆஸ்திரோ-ஆசிய மக்கள்]] வசிக்கின்றனர்.
[[மியான்மார்]], [[லாவோஸ்]], [[தாய்லாந்து]], [[கம்போடியா]], [[வியட்நாம்]] ஆகியோரும் தென்கிழக்கு ஆசியாவில் கண்டத்தை சேர்ந்த நாடுகள். இம்மண்டலத்தில் பெரும்பான்மையாக [[பௌத்தம்|பௌத்த]] சமயத்தை சேர்ந்த [[தாய் பேரின மக்கள்]] மற்றும் [[ஆஸ்திரோ-ஆசிய மக்கள்]] வசிக்கின்றனர்.


[[மலேசியா]], [[சிங்கப்பூர்]], [[இந்தோனேசியா]], [[பிலிப்பீன்ஸ்]], [[புரூனை]], [[கிழக்குத் திமோர்]] ஆகியோரும் தென்கிழக்கு ஆசியாவில் கடல் மண்டல நாடுகள். இம்மண்டலத்தில் பெரும்பான்மையாக [[இஸ்லாம்]] மற்றும் [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] சமயத்தை சேர்ந்த [[ஆஸ்திரோனேசிய மக்கள்]] வசிக்கின்றனர்.
[[மலேசியா]], [[சிங்கப்பூர்]], [[இந்தோனேசியா]], [[பிலிப்பீன்ஸ்]], [[புரூனை]], [[கிழக்குத் திமோர்]] ஆகியோரும் தென்கிழக்கு ஆசியாவில் கடல் மண்டல நாடுகள். இம்மண்டலத்தில் பெரும்பான்மையாக [[இஸ்லாம்]] மற்றும் [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] சமயத்தை சேர்ந்த [[ஆஸ்திரோனேசிய மக்கள்]] வசிக்கின்றனர்.

===தென்கிழக்காசியாவில் பண்டையத் தமிழர்===
[[File:800px-Candi2.jpg|thumb|right|210px|தொல்லியல் சான்று, கடாரம்]]
தமிழ் நாட்டினருக்கும், தென்கிழக்காசிய நாடுகளுக்கும் [[2000]] [[ஆண்டு]]களுக்கு முன்பே தொடர்பு இருப்பதற்கான தடயங்கள் பல கிடைத்துள்ளன. [[கெடா]]வில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று [[முதலாம் குலோத்துங்கச் சோழன்|முதலாம் குலோத்துங்கச் சோழனால்]] விட்டுச் செல்லப்பட்டுள்ளது. இக்[[கல்வெட்டு]], [[சமசுகிருதம்|சமசுகிருத]] மொழியில் சோழ நாட்டிற்கும் கடாரத்திற்கும் உள்ள வணிகத் தொடர்பை விளக்கிக் காட்டியுள்ளது. அதுப்போக புக்கிட் மெரியாம், [[மூடா ஆறு|மூடா ஆற்றின்]] படுகையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் [[பல்லவர்|பல்லவப்]] பேரரசு [[வட்டெழுத்து]]கள் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தென் கிழக்காசிய நாடுகளில் [[இந்து]]ப் பேரரசு கொடிக்கட்டிப் பறந்தக் காலம் அது. [[அரசியல்]], [[நீதித்துறை]], [[கலை]], [[கலாச்சாரம்]], [[நாகரீகம்]], [[மொழி]], [[வணிகம்]] என அனைத்திலும் இந்து மதத்தின் தாக்கங்கள் இருந்தக் காலம் அது.. சுருங்கச் சொன்னால், தென்கிழக்காசிய மக்களின் நாகரீகம் [[இந்தியா|இந்திய]] மண் போட்ட விதை. இந்த [[விதை]]த் தூவப்படாமல் இருந்திருந்தால், அன்று புகழின் உச்சத்தை அடைந்த [[சிறீ விஜயம்]], [[கடாரம்]], [[லங்கா சுகா]], [[பாசாய்]],[[ மாஜாபாகிட்]] போன்ற பேரரசுகள்[[ வரலாறு|வரலாற்றில்]] பேசப்பட்டிருக்கமாட்டாது.

2-ஆம், 3-ஆம் [[நூற்றாண்டு]]களிலேயே சுவர்ணபூமியில் ஆங்காங்கே சில அரசுகள் ஆட்சி புரிந்துள்ளன. இந்த அரசுகள் இந்து மதங்களைத் தழுவி, அதன் நீதி [[நூல்]]களைப் பின்பற்றியே ஆட்சி செய்து வந்துள்ளன.


== ஆசியாவின் மற்ற மண்டலங்கள் ==
== ஆசியாவின் மற்ற மண்டலங்கள் ==

02:02, 30 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்

தென்கிழக்கு ஆசியா

தென்கிழக்கு ஆசியா என்பது ஆசியா கண்டத்தில் இந்தியாவுக்கு கிழக்கிலும், சீனாவுக்கு தெற்கிலும், ஆஸ்திரேலியாவுக்கு வடக்கிலும் அமைந்த நாடுகளை குறிக்கும். ஆசியா கண்டத்தை சேர்ந்த நாடுகள் மற்றும் அதற்கு கிழக்கிலும் தென்கிழக்கிலும் அமைந்த தீவுகள் ஆகிய இரண்டு மண்டலங்களில் பொதுவாக இப்பகுதி பிரிந்திருக்கிறது.

மியான்மார், லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் ஆகியோரும் தென்கிழக்கு ஆசியாவில் கண்டத்தை சேர்ந்த நாடுகள். இம்மண்டலத்தில் பெரும்பான்மையாக பௌத்த சமயத்தை சேர்ந்த தாய் பேரின மக்கள் மற்றும் ஆஸ்திரோ-ஆசிய மக்கள் வசிக்கின்றனர்.

மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிலிப்பீன்ஸ், புரூனை, கிழக்குத் திமோர் ஆகியோரும் தென்கிழக்கு ஆசியாவில் கடல் மண்டல நாடுகள். இம்மண்டலத்தில் பெரும்பான்மையாக இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ சமயத்தை சேர்ந்த ஆஸ்திரோனேசிய மக்கள் வசிக்கின்றனர்.

தென்கிழக்காசியாவில் பண்டையத் தமிழர்

தொல்லியல் சான்று, கடாரம்

தமிழ் நாட்டினருக்கும், தென்கிழக்காசிய நாடுகளுக்கும் 2000 ஆண்டுகளுக்கு முன்பே தொடர்பு இருப்பதற்கான தடயங்கள் பல கிடைத்துள்ளன. கெடாவில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று முதலாம் குலோத்துங்கச் சோழனால் விட்டுச் செல்லப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு, சமசுகிருத மொழியில் சோழ நாட்டிற்கும் கடாரத்திற்கும் உள்ள வணிகத் தொடர்பை விளக்கிக் காட்டியுள்ளது. அதுப்போக புக்கிட் மெரியாம், மூடா ஆற்றின் படுகையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் பல்லவப் பேரரசு வட்டெழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தென் கிழக்காசிய நாடுகளில் இந்துப் பேரரசு கொடிக்கட்டிப் பறந்தக் காலம் அது. அரசியல், நீதித்துறை, கலை, கலாச்சாரம், நாகரீகம், மொழி, வணிகம் என அனைத்திலும் இந்து மதத்தின் தாக்கங்கள் இருந்தக் காலம் அது.. சுருங்கச் சொன்னால், தென்கிழக்காசிய மக்களின் நாகரீகம் இந்திய மண் போட்ட விதை. இந்த விதைத் தூவப்படாமல் இருந்திருந்தால், அன்று புகழின் உச்சத்தை அடைந்த சிறீ விஜயம், கடாரம், லங்கா சுகா, பாசாய்,மாஜாபாகிட் போன்ற பேரரசுகள்வரலாற்றில் பேசப்பட்டிருக்கமாட்டாது.

2-ஆம், 3-ஆம் நூற்றாண்டுகளிலேயே சுவர்ணபூமியில் ஆங்காங்கே சில அரசுகள் ஆட்சி புரிந்துள்ளன. இந்த அரசுகள் இந்து மதங்களைத் தழுவி, அதன் நீதி நூல்களைப் பின்பற்றியே ஆட்சி செய்து வந்துள்ளன.

ஆசியாவின் மற்ற மண்டலங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்கிழக்காசியா&oldid=566301" இலிருந்து மீள்விக்கப்பட்டது