கைத்தறி நெசவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 23: வரிசை 23:


==கைத்தறி நெசவுக்கு புகழ் பெற்ற மற்ற ஊர்கள்==
==கைத்தறி நெசவுக்கு புகழ் பெற்ற மற்ற ஊர்கள்==
கைத்தறி நெசவு தமிழ் நாட்டில் பரவலாக செய்யப்பட்டுவந்த ஒரு முக்கியத் தொழில் ஆகும். பல ஊர்கள் கைத்தறி நெசவுக்கு புகழ் பெற்றவையாகும். [[ஆண்டிபட்டி]], [[எட்டயபுரம்]], [[பரமக்குடி]] அருகே உள்ள [[எமனேசுவரம்]].
கைத்தறி நெசவு தமிழ் நாட்டில் பரவலாக செய்யப்பட்டுவந்த ஒரு முக்கியத் தொழில் ஆகும். பல ஊர்கள் கைத்தறி நெசவுக்கு புகழ் பெற்றவையாகும். [[ஆண்டிபட்டி]], [[எட்டயபுரம்]], [[பரமக்குடி]] அருகே உள்ள [[எமனேசுவரம்]], [[திருவில்லிபுத்தூர்]] ஆகியவையாகும்.


==நெசவு சார்ந்த, தொழில்கள்==
==நெசவு சார்ந்த, தொழில்கள்==

11:35, 29 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்

கைத்தறி நெசவு (Hand-Loom Weaving) என்பது, தமிழ் நாட்டில் பல ஊர்களில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தொழில் ஆகும்.

கைத்தறி நெசவு

தறி

தறி என்பது ஆடை தயாரிக்க பயன்படும் ஒரு ஒருங்கிணைந்த செயல் பாட்டுக்கருவியாகும்.

சேலம், ஈரோடு, கரூர்

சேலம், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய நகரங்கள் கைத்தறி நெசவுக்கும் அதைச்சார்ந்த வாணிபத்திற்கும் புகழ் பெற்றவையாகும். இவ்வூர்களில் இருந்து, ஆடைகள் வட மாநிலங்களுக்கும், தென் மாநிலங்களுக்கும் அனுப்பப் படுகின்றன.

உலகமுழுவதும் ஏற்றுமதி

ஈரோட்டிலிருந்து ஜவுளிப்பொருட்களான துண்டுகள், படுக்கை விரிப்புகள், லுங்கிகள் ஆகியன உலகமுழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

காஞ்சிபுரம் --- காஞ்சிப்பட்டு

காஞ்சிபுரம் நெசவுத்தொழிலுக்கும் மிகவும் புகழ் பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் காஞ்சிப் பட்டுப் புடவைகள் மிகவும் பிரபலமானவை. பரம்பரை பரம்பரையாக பட்டுப்புடைவைகளை நெய்யும் நெசவாளிகள் இங்கு வாழ்கிறார்கள்.

காஞ்சிபுரத்தை பற்றி ஒரு பழமொழி

காஞ்சிபுரத்தை பற்றி ஒரு பழமொழி உண்டு. அதாவது, 'காஞ்சீபுரம் சென்றால் காலாட்டிக்கொண்டே சாப்பிடலாம்' என்பதாகும். இதன் அர்த்தம் --- காஞ்சீபுரம் சென்றால் கைத்தறி நெசவு நெய்து, பணம் சம்பாதித்து சாப்பிடலாம் என்பதாகும்.

கைத்தறியில் நெசவு நெய்யும் போது, கையையும் காலையும் பயன் படுத்த வேண்டும். அதாவது கையையும் காலையும் ஆட்டிக்கொண்டே என்பதன் அர்த்தமாகும்.

திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தின் இரண்டாவது முக்கிய தொழில் பட்டு நெசவு ஆகும். ஆரணி பட்டு பிரசித்தி பெற்றது ஆகும்.

கைத்தறி நெசவுக்கு புகழ் பெற்ற மற்ற ஊர்கள்

கைத்தறி நெசவு தமிழ் நாட்டில் பரவலாக செய்யப்பட்டுவந்த ஒரு முக்கியத் தொழில் ஆகும். பல ஊர்கள் கைத்தறி நெசவுக்கு புகழ் பெற்றவையாகும். ஆண்டிபட்டி, எட்டயபுரம், பரமக்குடி அருகே உள்ள எமனேசுவரம், திருவில்லிபுத்தூர் ஆகியவையாகும்.

நெசவு சார்ந்த, தொழில்கள்

கோவை நகரம் நெசவு சார்ந்த, தொழில்களில் முன்னணி வகிக்கும் நகரமாகும். கோவையில் சிறுதும் பெரிதுமாகப் பல துணி தயாரிப்பு ஆலைகள் உள்ளன.

திருப்பூர் ஆசியாவிலேயே மிகப்பெரிய பின்னலாடை ஏற்றுமதி மையமாகவிளங்குகிறது.

சின்ன தறிப்பேட்டை --- சிந்தாரிப்பேட்டை

தறி கொண்டு கைத்தறி நெசவு தொழில் செய்துவந்த பகுதி சின்ன தறிப்பேட்டை (தறி- நெசவு செய்யப் பயன்படும் கருவி) ஆகும். அதுவே பேச்சு வழக்கில் மறுவி சிந்தாரிப் பேட்டை என்று தற்போது அழைக்கப்படுகிறது. சிந்தாரிப்பேட்டை- சென்னையின் மையப்பகுதியாகும்.

இவற்றையும் காணவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கைத்தறி_நெசவு&oldid=566009" இலிருந்து மீள்விக்கப்பட்டது