ரொசெட்டாக் கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: fy:Rosetta Stien
சி தானியங்கிஇணைப்பு: et:Rosetta kivi
வரிசை 25: வரிசை 25:
[[eo:Rozeta ŝtono]]
[[eo:Rozeta ŝtono]]
[[es:Piedra de Rosetta]]
[[es:Piedra de Rosetta]]
[[et:Rosetta kivi]]
[[eu:Rosetta Harria]]
[[eu:Rosetta Harria]]
[[fa:سنگ رزتا]]
[[fa:سنگ رزتا]]

09:51, 29 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்

பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள ரொசெட்டா கல்.

ரொசெட்டாக கல் (Rosetta Stone) என்பது, ஒரே பத்தியை படஎழுத்து (hieroglyphic) உட்பட்ட இரண்டு எகிப்திய எழுத்துமுறைகளிலும், செந்நெறிக் கிரேக்க மொழியிலும் எழுதிய ஒரு கல்வெட்டு ஆகும். இது கி.மு 196 ஆம் ஆண்டில் வெட்டப்பட்டது. 1799 ஆம் ஆண்டில் எகிப்தின் மத்தியதரைக் கடற்கரைத் துறைமுகமான ரொசெட்டாவில், பிரெஞ்சுக்காரரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது 1822 ஆம் ஆண்டில் ஜேன்-பிராங்கோயிஸ் சம்போலியன் (Jean-François Champollion) என்பவரால் வாசித்து மொழிபெயர்க்கப்பட்டது. இக் கல்லின் ஒப்பீட்டு மொழிபெயர்ப்பானது, முன்னர் வாசித்து அறியப்படாத படஎழுத்துக்களை வாசித்து அறிவதற்கு உதவியது. இக் கல்வெட்டு, பலவித வரி நீக்கங்கள் பற்றியும், கோயில்களில் சிலைகள் அமைப்பது தொடர்பான விதிமுறைகளையும் கொண்ட ஒரு ஆணையாகும். இது ஐந்தாம் தொலெமியினால் வெளியிடப்பட்டது.

இக் கல் இதன் அதி உயர்ந்த இடத்தில் 114.4 சதமமீட்டர் அளவும், 72.3 சதமமீட்டர் அகலமும், 27.9 சதமமீட்டர் தடிப்பும் (45.04 அங் x 28.5 அங் x 10.9 அங்) கொண்டது. அண்ணளவாக 760 கிகி (1676 இறாத்தல்) நிறை கொண்ட இது கிரனோடியொரைட்டு (granodiorite) என்னும் கல்வகையைச் சேர்ந்தது ஆகும். இது 1802 ஆம் ஆண்டிலிருந்து இலண்டனில் உள்ள பிரித்தானிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரொசெட்டாக்_கல்&oldid=565973" இலிருந்து மீள்விக்கப்பட்டது