மத்தேயு நற்செய்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: gl:Evanxeo de Mateo
சி தானியங்கிஇணைப்பு: qu:Mathiyup qillqasqan; cosmetic changes
வரிசை 8: வரிசை 8:


# இயேசுவின் மூதாதையர் பட்டியல், பிறப்பு, குழந்தைப் பருவம் (அதிகாரம் 1-2)
# இயேசுவின் மூதாதையர் பட்டியல், பிறப்பு, குழந்தைப் பருவம் (அதிகாரம் 1-2)
# திருமுழுக்கு யோவான் விண்ணரசை அறிவித்தலும் இயேசு திருமுழுக்கு பெறலும் (அதிகாரம் 3; 4:11)
# திருமுழுக்கு யோவான் விண்ணரசை அறிவித்தலும் இயேசு திருமுழுக்கு பெறலும் (அதிகாரம் 3; 4:11)
# கலிலேயாவில் இயேசுவின் பகிரங்க வாழ்க்கை (4:12–26:1)
# கலிலேயாவில் இயேசுவின் பகிரங்க வாழ்க்கை (4:12–26:1)
## இயேசு வழங்கிய மலைப்பொழிவு (அதிகாரம் 5-7)
## இயேசு வழங்கிய மலைப்பொழிவு (அதிகாரம் 5-7)
## மறைபரப்புப் பணிக்கு இயேசு தம் திருத்தூதர்களை அனுப்புகிறார் (10-11:1)
## மறைபரப்புப் பணிக்கு இயேசு தம் திருத்தூதர்களை அனுப்புகிறார் (10-11:1)
## இயேசு கூறிய உவமைகள் (அதிகாரம் 13)
## இயேசு கூறிய உவமைகள் (அதிகாரம் 13)
## இயேசுவைப் பின்பற்றுவதற்கு வழி(அதி 18-23)
## இயேசுவைப் பின்பற்றுவதற்கு வழி(அதி 18-23)
வரிசை 84: வரிசை 84:
[[pl:Ewangelia Mateusza]]
[[pl:Ewangelia Mateusza]]
[[pt:Evangelho segundo Mateus]]
[[pt:Evangelho segundo Mateus]]
[[qu:Mathiyup qillqasqan]]
[[ro:Evanghelia după Matei]]
[[ro:Evanghelia după Matei]]
[[ru:Евангелие от Матфея]]
[[ru:Евангелие от Матфея]]

22:38, 28 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்

புனித மத்தேயு,
புனித ஈசாக்கு தேவாலயம் பீட்டர்ஸ்பர்க்,இரசியா

மத்தேயு நற்செய்தி விவிலியத்தின் புதிய ஏற்பாட்டிலுள்ள நான்கு நற்செய்தி நூல்களில் முதலாவது நூலாகும். இது இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் வழங்கிய போதனைகளையும் தொகுத்தளிக்கிறது. இந்நூல் புதிய ஏற்பாட்டின் முதலாவது நூலாகும்.இது இயேசுவின் சீடரான மத்தேயுவின் பெயரைக் கொண்டுள்ளது எனினும் இந்நூலின் எழுத்தாளர் அவரா என்பது பற்றித் தெளிவில்லை. வேறு ஒருவர் எழுதி புனித மத்தேயுவின் பெயரில் வெளியிட்டிருக்கலாம்; அல்லது மத்தேயு பெயரால் செயல்பட்ட தொடக்க காலத் திருச்சபைக் குழுவால் இது உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பது இப்போது ஏற்கப்பட்ட கருத்தாகும். மற்ற நற்செய்தி நூல்களான மாற்கு,லூக்கா என்பவற்றுடன் இந்நூல் பொதுவான வசன எடுத்தாள்கையும், உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது.

அமைப்பு

இந்நூல் மொத்தம் 28 அதிகாரங்களை கொண்டுள்ளது. இந்நூலை பொதுவாக 4 பெரும் பிரிவுகளாக பிரித்து நோக்கலாம். ஒவ்வொன்றும் இயேசுவின் வாழ்க்கையின் வெவ்வேறு பகுதிகளைக் குறிக்கிறது.

  1. இயேசுவின் மூதாதையர் பட்டியல், பிறப்பு, குழந்தைப் பருவம் (அதிகாரம் 1-2)
  2. திருமுழுக்கு யோவான் விண்ணரசை அறிவித்தலும் இயேசு திருமுழுக்கு பெறலும் (அதிகாரம் 3; 4:11)
  3. கலிலேயாவில் இயேசுவின் பகிரங்க வாழ்க்கை (4:12–26:1)
    1. இயேசு வழங்கிய மலைப்பொழிவு (அதிகாரம் 5-7)
    2. மறைபரப்புப் பணிக்கு இயேசு தம் திருத்தூதர்களை அனுப்புகிறார் (10-11:1)
    3. இயேசு கூறிய உவமைகள் (அதிகாரம் 13)
    4. இயேசுவைப் பின்பற்றுவதற்கு வழி(அதி 18-23)
    5. இரண்டாம் வருகை பற்றி முன்னறிவித்தல் (அதிகாரம் 24-26:5)
  4. இயேசு துன்புற்று இறத்தலும் உயிர்த்தெழலும்; மறை பரப்பு பணிப்பு (26:6-28:16–20)

இந்நூலின் முதன்மை நோக்கம் நாசரேத்தூர் இயேசுவே வாக்களிக்கப்பட்ட மெசியா என்பதை வலியுறுத்துவது ஆகும். மேலும் இந்நூல், இயேசு பழைய ஏற்பாட்டில் முன்னுரைக்கப்பட்ட இறைவாக்குகளை தீர்க்கதரிசனங்களை நிறைவு செய்ய வந்தார் என்பதை முன்னிறுத்துகிறது. இதற்காக குறைந்தது 65 சூழல்களில் பழைய ஏற்பாட்டை மேற்கோள் காட்டுகிறது. இந்நூலின் அடிப்படை நோக்கத்தை பின்வரும் வசனம் நன்கு விளக்குகிறது.

(இயேசு:)"திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்." (மத்தேயு 5:17)

சில தகவல்கள்

புனித மத்தேயு எபிரேய (அரமேய) மொழியில் ஒரு நற்செய்தி எழுதியதாகவும் அது அழிந்து போனதாகவும் கருதப்படுகிறது. பிறகு அந்நூலின் கிரேக்க மொழிபெயர்ப்பு அல்லது மூல நூலுடன் பழக்கப்பட்ட ஒருவர் தொகுத்த விடயங்கள் புனித மத்தேயுவின் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இது எழுதப்பட்ட காலம் குறித்த ஒருமித்த கருத்து கிடயாது. பொதுவாக கி.பி. 50-100 இடையிலான காலப்பகுதி எனக் கருதப்படுகிறது.

உசாத்துணை

"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்தேயு_நற்செய்தி&oldid=565762" இலிருந்து மீள்விக்கப்பட்டது