அறிவியல் தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2: வரிசை 2:
'''அறிவியல் தமிழ்''' [[தமிழ்]] மொழியில் இடம்பெறும் [[அறிவியல்]] கல்வி, ஆய்வுகள், தகவல் பரிமாற்றம், பிற அறிவியல் புலமைசார் செயற்பாடுகளை முதன்மையாகக் குறிக்கின்றது. இங்கு அறிவியல் தமிழ் மொழியையும், தமிழ் மொழியில் இடம்பெறும் அறிவியல் தொடர்பான செயற்பாடுகளையும் ஒருங்கே சுட்டுகின்றது.
'''அறிவியல் தமிழ்''' [[தமிழ்]] மொழியில் இடம்பெறும் [[அறிவியல்]] கல்வி, ஆய்வுகள், தகவல் பரிமாற்றம், பிற அறிவியல் புலமைசார் செயற்பாடுகளை முதன்மையாகக் குறிக்கின்றது. இங்கு அறிவியல் தமிழ் மொழியையும், தமிழ் மொழியில் இடம்பெறும் அறிவியல் தொடர்பான செயற்பாடுகளையும் ஒருங்கே சுட்டுகின்றது.


தமிழ் மொழியில், தமிழர் இடையே அறிவியல் செயற்பாடுகள் தொன்று தொட்டு பல காலகட்டங்களில் சிறப்புற்று இருந்தாலும், அறிவியல் தமிழ் இக்காலத்தில், மேற்கே செம்மை பெற்ற அறிவியல் அணுகுமுறைகளை உள்வாங்கி தமிழில், தமிழ்ச்சூழலில் மேற்கொள்ளப்படும் அறிவியல் செயற்பாடுகளை சிறப்பாக குறிக்கின்றது.
தமிழ் மொழியில், தமிழர் இடையே அறிவியல் செயற்பாடுகள் தொன்று தொட்டு பல காலகட்டங்களில் சிறப்புற்று இருந்தாலும் அறிவியல் தமிழ் இக்காலத்தில் மேற்கே செம்மை பெற்ற அறிவியல் அணுகுமுறைகளை உள்வாங்கி தமிழில், தமிழ்ச்சூழலில் மேற்கொள்ளப்படும் அறிவியல் செயற்பாடுகளை சிறப்பாக குறிக்கின்றது.


== அறிவியல் தமிழின் தேவை ==
== அறிவியல் தமிழின் தேவை ==

01:54, 23 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்


தமிழ்
கொடுந்தமிழ்
செந்தமிழ்
தனித்தமிழ்
நற்றமிழ்
முத்தமிழ்
துறை வாரியாகத் தமிழ்
அறிவியல் தமிழ்
ஆட்சித் தமிழ்
இசைத்தமிழ்
இயற்றமிழ்/இயல்தமிழ்
சட்டத் தமிழ்
செம்மொழித் தமிழ்
தமிழிசை
நாடகத் தமிழ்
மருத்துவத் தமிழ்
மீனவர் தமிழ்
முசுலிம் தமிழ்
பிராமணத் தமிழ்
வட்டார வழக்குகள்
திருநெல்வேலித் தமிழ்
அரிசனப் பேச்சுத் தமிழ்
குமரி மாவட்டத் தமிழ்
கொங்குத் தமிழ்
செட்டிநாட்டுத் தமிழ்
சென்னைத் தமிழ்
மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்
நாஞ்சில் தமிழ்
மணிப்பிரவாளம்
மலேசியத் தமிழ்
யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்
சுனூன் தமிழ்
பாலக்காடு தமிழ்
பெங்களூர் தமிழ்

தொகு

அறிவியல் தமிழ் தமிழ் மொழியில் இடம்பெறும் அறிவியல் கல்வி, ஆய்வுகள், தகவல் பரிமாற்றம், பிற அறிவியல் புலமைசார் செயற்பாடுகளை முதன்மையாகக் குறிக்கின்றது. இங்கு அறிவியல் தமிழ் மொழியையும், தமிழ் மொழியில் இடம்பெறும் அறிவியல் தொடர்பான செயற்பாடுகளையும் ஒருங்கே சுட்டுகின்றது.

தமிழ் மொழியில், தமிழர் இடையே அறிவியல் செயற்பாடுகள் தொன்று தொட்டு பல காலகட்டங்களில் சிறப்புற்று இருந்தாலும் அறிவியல் தமிழ் இக்காலத்தில் மேற்கே செம்மை பெற்ற அறிவியல் அணுகுமுறைகளை உள்வாங்கி தமிழில், தமிழ்ச்சூழலில் மேற்கொள்ளப்படும் அறிவியல் செயற்பாடுகளை சிறப்பாக குறிக்கின்றது.

அறிவியல் தமிழின் தேவை

மொழியின் கட்டமைப்புகள் உலகை பிரதிபலிக்க்கின்றன.[1] மொழியின் கட்டமைப்பு மனித சிந்தனை முறைகளைப் பாதிக்கிறது, எல்லைகளை வரையறுக்கின்றது. ஆகையால் ஒரு மொழி சார்ந்த சமூகத்தின் பண்பாடும், வளர்ச்சியையும் மொழி கட்டுப்படுத்தலாம்.[2]இவ்வாறு மொழியின் வளர்ச்சியும், சமூகத்தின் வளர்ச்சியும் ஒன்றோடு ஒன்று ஒன்றிப் பிணைந்தவை.

மொழிக்கும் மனித சிந்தனைக்கும் உள்ள வலுவான தொடர்பு மேலும் பல கோணங்களில் ஆயப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழை மொழியாகக் கொண்டவர்கள், அறிவியல்-தொழில் நுட்பங்களைத் தமிழில் படிக்கையில் ஒரு வேறுபட்ட புரிதல் ஏற்படுகின்றது, வேறுபட்ட சிந்தனைக்கு வழி செய்கின்றது. புதிய பரிமாணங்களில் (paradigms), மாறுபட்ட சூழலில் (socio-cultural context) விடயங்களை ஆராய வழி செய்கின்றது.

மேலும் தமிழ் சமுதாயம் சார்ந்த புரிதல்களை வளர்த்துக்கொள்ளவும், தமிழர் தேவைகளை நிறைவு செய்யவும். ஆங்கில உலகால் புறக்கணிக்கப்பட்ட துறைசார் விடயங்களை ஆராயவும் அறிவியல் தமிழ் தேவை. தமிழரின் வரலாறு, பண்பாடு, சமயம், சமூகம், பொருளாதாரம், அரசியல் போன்ற பன்முகத் தேடல்களுக்கு அறிவியல் தமிழ் உதவும்.

தமிழின் ஆய்வுத் திறனும் அறிவியல் தமிழும்

தற்கால அறிவியல் சூழலில் அறிவைப் பெற, வளர்க்க ஆய்வு முக்கியம். அறிவியல் அணுகுமுறையில் ஆய்வு செய்வது ஒரு சிறந்த வழிமுறை. அதைத் தமிழில் செய்ய, தமிழுக்கு ஆயுவுத் திறன் தேவை.

எல்லா மொழிகளும் இயல்பாகவே ஆய்வுத் திறன் பெறுவதில்லை. அதற்குரிய மொழித் திறனும், அந்த மொழியில் கட்டமைக்கப்பட்ட சிந்தனைப் புலமும் தேவை. ஆய்வு திறன் இல்லாத மொழியில் ஆய்வு ரீதியில் சிந்தனை செய்யவோ சிந்தனைகளை வெளிப்படுத்தவோ முடியாது. அறிவியல் தமிழ் ஊடாகவே தமிழின் ஆய்வுத் திறனை வளர்த்துப் பயன்படுத்த முடியும்.

கருத்துக்கள் தொகுப்பு

[3]

- அறிவியல் நம்பி [4]

- சி. ஜெயபாரதன் [5]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "மொழி, மொழியின் கட்டமைப்புகள் உலகைப் பிரதிபலிக்கின்றன.", "மொழியின் எல்லைகளே, சிந்தனையின் எல்லைகள்." லுட்விக் விற்ஜென்சிரீன் (Ludwig Wittgenstein)
  2. "The structure of a human language sets limits on the thinking of those who speak it; hence a language could even place constraints on the cultures that use it" - Sapir/Whorf hypothesis>
  3. கார்த்திகேசு சிவத்தம்பி http://noolaham.net/library/books/01/50/50c.htm
  4. தமிழில் அறிவியல் கலைச்சொற்களின் தேவையும் வளர்ச்சியும்
  5. http://jayabarathan.wordpress.com/2008/04/19/scientifictamil/ விடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி] - அணுப் பொறியிலாளர்

வெளி இணைப்புக்கள்

ஆய்வுக் கட்டுரைகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிவியல்_தமிழ்&oldid=562540" இலிருந்து மீள்விக்கப்பட்டது