ஆர்க்டிக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: sw:Aktiki
சி தானியங்கிமாற்றல்: ca:Àrtic
வரிசை 25: வரிசை 25:
[[bg:Арктика]]
[[bg:Арктика]]
[[bs:Arktik]]
[[bs:Arktik]]
[[ca:Àrtida]]
[[ca:Àrtic]]
[[cs:Arktida]]
[[cs:Arktida]]
[[cv:Арктика]]
[[cv:Арктика]]

10:09, 24 சூன் 2010 இல் நிலவும் திருத்தம்

ஆர்க்டிக் பகுதிகள்
ஆர்க்டிக் பகுதிகள் நிறமூட்டப்பட்டுள்ளன

ஆர்க்டிக் (Arctic) என்பது புவியின் வட முனையில் அமைந்துள்ள பகுதியாகும். இது தென் முனையில் உள்ள அண்டார்க்டிக்காவுக்கு எதிர்ப்புறத்தில் உள்ளது. ஆர்க்டிக் பகுதியானது ஆர்க்டிக் பெருங்கடல், மற்றும் கனடா, கிரீன்லாந்து (டென்மார்க்கின் பகுதி), ரஷ்யா, அலாஸ்கா (ஐக்கிய அமெரிக்கா), ஐஸ்லாந்து, நோர்வே, சுவீடன், பின்லாந்து ஆகியவற்றின் சில பகுதிகளை இது உள்ளடக்கியது.

ஆர்க்டிக் என்ற சொல்கிரேக்க மொழிச் சொல்லான αρκτικός (ஆர்க்டிகோஸ்), "கரடிக்குக் கிட்டவாக, ஆர்க்டிக், வடக்கே"[1] மற்றும் άρκτος (ஆர்க்டோஸ்), கரடி[2] என்பவற்றில் இருந்து தோன்றியது.

ஆர்க்டிக் பகுதிகள் பல வகைகளில் வரையறுக்கப்படுகின்றன. பொதுவாக இதன் எல்லை ஆர்க்டிக் வட்டத்தின் வடக்கே (66° 33’வ) அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது. இது நள்ளிரவுச் சூரியன், துருவ இரவு ஆகியவற்றின் அண்ணளவான எல்லையைக் குறிக்கும். மேலும் காலநிலை, மற்றும் சூழ்நிலையியல் ஆகியவற்றைக் கொண்டும் ஆர்க்டிக் பகுதிகள் வரையறுக்கப்படுகின்றன. அதாவது, 10°C (50 °F) ஜூலை சம வெப்பநிலைக் கோடு பெரும்பகுதி ஆர்க்டிக்கின் மரக் கோட்டைக் குறிக்கும். சமூக மற்றும் அரசியல் ரீதியாக, ஆர்க்டிக் பகுதியானது எட்டு ஆர்க்டிக் நாடுகளின் வடக்குப் பிரதேசங்களைக் குறிக்க்கும்.

ஆர்க்டிக்கின் பெரும் பகுதி பனிக்கட்டிக் கடலையே கொண்டுள்ளது. அண்மைக்காலமாக பனிக்கட்டிக் கடலின் அளவு வெகுவாகக் குறைந்து வருகிறது. இக்கு பொதுவாக பனிப்பகுதியில் வாழத் தகுதியான உயிரினங்களே (மனிதர் உட்பட) வாழுகின்றன[3]. ஆர்க்டிக் பழங்குடி மக்களின் வாழ்க்கை குளிர்ப்பிரதேசங்களில் வாழ்க்கைமுறைகளுக்கு ஒத்ததாக அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. Arktikos, Henry George Liddell, Robert Scott, A Greek-English Lexicon, at Perseus
  2. Arktos, Henry George Liddell, Robert Scott, A Greek-English Lexicon, at Perseus
  3. http://www.arctic.noaa.gov/essay_krembsdeming.html

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்க்டிக்&oldid=544819" இலிருந்து மீள்விக்கப்பட்டது