"ராவணன் (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
4,240 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
'''''ராவணன்''''' என்பது [[2010]] ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். [[மணிரத்னம்]] இப்படத்தின் கதையை எழுதி இயக்கினார். [[சுகாசினி மணிரத்தினம்]] இதற்கு உரையாடல் எழுதினார். [[விக்ரம்]], [[ஐஸ்வர்யா ராய்]], [[பிருதிவிராஜ்]] ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்தில் [[கார்த்திக்]], [[பிரபு]], [[பிரியாமணி]] என்று மேலும் பலர் நடித்தனர். [[ஏ. ஆர். ரகுமான்]] இப்படத்துக்கு இசையமைத்தார். இத்திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழிலும், [[ராவன் (திரைப்படம்)|ராவன்]] என்ற பெயரில் [[இந்தி]]யிலும் வெளியிடப்பட்டது.
 
== திரைக்கதை ==
{{கதைச்சுருக்கம்}}
[[பழங்குடி]] மக்களுக்கு சகலமுமாக இருப்பவன் ''வீரா'' ([[விக்ரம்]]). அண்ணன் சிங்கம் ([[பிரபு]]), தம்பி ''சக்கரை'' ([[முன்னா]]), தங்கை ''வெண்ணிலா'' ([[ப்ரியாமணி]]) என வாழ்ந்து வருகிறார். ஊரே அவன் சொல்வதைக் கேட்கிறது. அவனுக்காக உயிரைத் தரவும் தயாராக உள்ளது. ஆனால் சட்டத்தின் பார்வையில் அவன் மோசமானவன்.
 
அவனை வேட்டையாட ''தேவ்'' ([[பிருத்விராஜ்]]) என்ற அதிகாரி தலைமையில் சிறப்பு அதிரடிப்படை வருகிறது. தேவின் மனைவி ''ராகினி'' ([[ஐஸ்வர்யா ராய்]]).
 
வீராவின் தங்கைக்கு திருமணம் நடக்கும்போது அதிரடிப் படை அந்த இடத்தில் நுழைந்து வீராவை சுட, குண்டு காயத்துடன் அவன் தப்பிக்கிறான். அவன் தங்கை வெண்ணிலாவை தூக்கிச் செல்லும் அதிரடிப் படையினர் அவளைப் [[பாலியல் வன்முறை]]க்கு உள்ளாக்குகின்றார்கள். வீடு திரும்பும் அவள் வீராவிடம் அனைத்தையும் சொல்லிவிட்டு தற்கொலை செய்து கொள்கிறாள்.
 
இதனால், காவல்துறை அதிகாரி தேவைப் பழிவாங்க, அவன் மனைவி ராகினியை கடத்திப் போகிறான் வீரா. ஆரம்பத்தில் வீராவை வெறுக்கும் ராகினி, அவன் தங்கைக்கு நேர்ந்த சோகம், அதற்கு தன் கணவனும் ஒரு காரணம் என்பதை அறிந்து அமைதியாகிறாள். அவள் மீது வீராவுக்கு மோகம் பிறக்க, அதை அவளிடமே சொல்கிறான்.
 
ஒரு கட்டத்தில் வீராவின் தம்பியையும் தேவ் கொல்கிறார். இதைத் தொடர்ந்து வரும் சண்டையில் வீராவும் காவல்துறையினரும் கடுமையாக மோதுகிறார்கள். கடைசியில், ராகினிக்காக அவரது கணவரான தேவைக் கொல்லாமல் விடுகிறான் வீரா. ராகினியையும் விடுவித்து அனுப்பி விடுகிறான்.
 
கணவனோடு தொடருந்தில் ஊர் திரும்பிக் கொண்டிருக்கும் ராகினியின் கற்பை சந்தேகப்படுகிறார் கணவர் தேவ். இதனால் கோபமடையும் ராகினி மீண்டும் வீராவிடமே திரும்புகிறாள்...<ref>[http://thatstamil.oneindia.in/movies/review/2010/06/18-raavanan-tamil-movie-review.html ராவணன்-பட விமர்சனம்], தட்ஸ்தமிழ், சூன் 18, 2010</ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.raavan-thefilm.com/tamil.html "ராவணன்" அதிகாரபூர்வத் தளம்]
 
{{மணிரத்தினத்தின் திரைப்படங்கள்}}
1,20,614

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/541514" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி