இந்து குஃசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: ro:Munții Hindukuș
சி தானியங்கிஇணைப்பு: pnb:ھندوکش
வரிசை 108: வரிசை 108:
[[no:Hindu Kush]]
[[no:Hindu Kush]]
[[pl:Hindukusz]]
[[pl:Hindukusz]]
[[pnb:ھندوکش]]
[[ps:هندوکش]]
[[ps:هندوکش]]
[[pt:Hindu Kush]]
[[pt:Hindu Kush]]

21:05, 12 சூன் 2010 இல் நிலவும் திருத்தம்

இந்து குஷ்
மலைத்தொடர்
ஆப்கானிஸ்தானின் மலைகள்
நாடுகள் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்
பகுதி பாகிஸ்தானின் வடக்குப் பகுதி
பகுதி இமயமலை
மிகவுயர் புள்ளி டிரிச் மிர்
 - உயர்வு 7,690 மீ (25,230 அடி)
 - ஆள்கூறுகள் 36°14′45″N 71°50′38″E / 36.24583°N 71.84389°E / 36.24583; 71.84389

இந்து குஷ் (Hindu Kush) என்பது வடமேற்கு பாகிஸ்தானுக்கும் கிழக்கு மற்றும் நடு ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் பரந்திருக்கும் மலைத் தொடராகும். இத்தொடரின் அதிஉயர் புள்ளி பாகிஸ்தானில் உள்ள திரிச் மிர் (7,708 மீ அல்லது 25,289 அடி).

இந்துகுஷ் மலைத்தொடர் பாமிர், கரக்கோரம் ஆகிய மலைத்தொடர்களின் மேற்குத் தொடர்ச்சியாகும். அத்துடன் இது இமயமலையின் ஒரு உப மலைத்தொடருமாகும்[1].

மலைகள்

இந்துகுஷ் மலைத்தொடரின் மலைகளின் உயரம் மேற்குத் திசை வழியே குறைந்து கொண்டு செல்லுகின்றது. காபூலுக்குக் கிட்டவாக நடுப்பகுதியில் இவற்றின் உயரம் 4,500 முதல் 6,000 மீட்டர் வரை உள்ளது; மேற்கில், இவற்றின் உயரம் 3,500 முதல் 4,000 மீட்டர்கள் (11,500 அடி முதல் 13,000 அடி) வரை உள்ளது. இந்துகுஷ் மலைத்தொடரின் சராசரி உயரம் 4,500 மீட்டர்கள் (14,700 அடி). இவற்றின் நீளம் கிட்டத்தட்ட 966 கிலோமீட்டர்கள் (600 மைல்கள்). இவற்றில் 600 கிலோமீட்டர்கள் (370 மைல்கள்) தூர மலைகள் மட்டுமே இந்துகுஷ் மலைகள் என அழைக்கப்படுகின்றன. இத்தொடரின் ஏனைய பகுதிகள் பல சிறிய மலைத்தொடர்களைக் கொண்டுள்ளன. இவை கோஹி பாபா, சலாங்க், கோஹி பாக்மன், ஸ்பின் கார், சுலைமான் மலைத்தொடர், சியா கோஹ் போன்றவையாகும்.

இந்துகுஷ் மலைத்தொடரில் இருந்து பாயும் ஆறுகளில், ஹெல்மண்ட் ஆறு, ஹரி ஆறு, காபூல் ஆறு, மற்றும் சிஸ்டன் ஆற்றுப்படுகை போன்றனை முக்கியமானவை.


மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்து_குஃசு&oldid=536884" இலிருந்து மீள்விக்கப்பட்டது